Halloween party ideas 2015

செப்டம்பர் 26
1987 தமிழீழ தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவு தினத்தில்
6 சதவீத அருந்ததியர் உள இட ஒதுக்கீடு கேட்டு தன்னுயிரை தீக்கிரையாக்கிய நெருப்பு தமிழன் நீலவேந்தன் வீரவணக்க நாளில் ....

அருந்ததியர் அரசியல் விடுதலைக்கான சமூக நீதி எழுச்சிப்
பொதுக்கூட்டம்
எழுச்சியரை
சமூகநீதி போராளி
அய்யா இரா அதியமான்

அழைக்கிறார்

நிகழ்வுகள் :-
மாலை 3 மணி திருப்பூரில் வீரவணக்கம் .
மாலை 5 மணி தாராபுரம் பொதுக்கூட்டம்

நீலவேந்தன் நீலப்படை திரளட்டும் !!!
சமூக நீதி உரிமை போர் தொடரட்டும் !!!

ஆதித்தமிழர் பேரவைமுதல் இந்திய விடுதலை போராட்ட வீரர் நெல்லை நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தலைவர் ஒண்டிவீரன் நினைவு நாளான இன்று (20-8-2016) ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் பேரவையின் நிருவனத்தலைவர் இட ஒதுக்கீட்டு போராளி அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான நீலச்சட்டை தொண்டர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

*நிகழ்வு விபரம்*
""""""""""""""""""""""""
காலை 11.30 மணியளவில் நெற்கட்டான் செவ்வயலில் வீரவணக்க அஞ்சலி செலுத்திய பின்னர் இளைஞர்கள் மத்தியில் *செத்தமாட்டை தூக்கமாட்டோம், மலக்குழியில் இறங்க மாட்டோம், மானத்தோடு வாழ்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்* என நான் அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட இளைஞர்களும் தொடர்ந்து முழக்கமிட்டு சபதமேற்றுக்கொண்டனர்.

பின்னர் நெல்லையில் உள்ள மணிமண்டபத்திற்கு மாலை 5.30 மணியளவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக சென்று மாமன்னர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, அங்கும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு இளைஞர்களும், பேரவை தொண்டர்களும் சபதமேற்றுக் கொண்டனர்.

_மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வில்_
_ஆதித்தமிழர் பேரவை
சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்_

*கண்டனத் தீர்மானம்*
************************
தீர்மானம்.1)
ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக நடக்க வேண்டிய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளான ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் தமிழக அரசின் வழிகாட்டுதலால் 144 தடை உத்தரவு போட்டு காவல்துறையினர் மக்கள் மத்தியில் கடும் அச்சுருத்தலை ஏற்படுத்துவது மக்கள் விரோத செயலாகும் இம் மக்கள் விரோதச்செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது,

முறையாக காவல்துறை அனுமதி கோரி *மத்திய அரசின் புதிய குலக்கல்விக் கொள்கைக்கு* எதிராக கோவில்பட்டியில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து கோவில்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவு மக்கள் உரிமை போராட்டத்தை நசுக்கும் செயலாகும். எனவே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும் பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதும் மக்கள் விரோத நடவடிக்கையே காட்டுகிறது இச்செயலையும் ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

*மத்திய அரசை வலியுறுத்தி*
""""""""""""""""""""""""""""""""""""""""
தீர்மானம்.2)
மத்திய மோடி அரசு கொண்டுவர இருக்கிற *புதிய கல்வி கொள்கையை* உடனடியாக கைவிட வேண்டும், புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் *குலக்கல்வி* முறையைக் கொண்டு வந்து ஒடுக்கபட்ட மக்களின் பிள்ளைகளின் படிபைத் தொடரமுடியாமல் இடைமுறிவை ஏற்படுத்தி அம் மாணவர்களை மலம் அள்ளுவது, முடி வெட்டுவது, துணி வெளுப்பது, செருப்புத் தைப்பது போன்ற சாதி சார்ந்த தொழில்களில் ஈடுபடுத்த மோடி அரசு திணிக்க நினைக்கும் பார்பனிய சதியை முறியடிக்க எங்கள் அமைப்பு தனியாகவும், தோழமை இயக்கங்களுடனும் இணைந்து தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்.3)
பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முமுவதும் நடந்தேரும் இந்து மதவெறியர்களின் கொலைவெறிச் சம்பவங்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி கடும் நடவடிக்கை எடுத்து தாழ்த்தப்பட்ட மற்றும் இசுலாமிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இதைப்போன்ற கொடூரச் செயல்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பிரதமர், மாறாக இனிமேல் தாக்குதல் நடத்துவது என்றால் என்னைத் தாக்குங்கள் என்று கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும், இப்படி மக்களை ஏமாற்றுவது மட்டுமில்லாமல் இந்து மதவெறியர்களை ஊக்கபடுத்தும் செயலாகவே இது அமைந்துள்ளது, இந்த செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம்.4)
செத்த மாட்டைத் தூக்கமாட்டோம் மலக்குழியில் இறங்கமாட்டோம், மறுவாழ்வு பெற்றிட ஜந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என குஜராத்தில் நடந்து வரும் ஒடுக்கப்பட்டடோர் உரிமை முழக்க போராட்டத்தை எங்கள் அமைப்பு வரவேற்று முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது,
மேலும் இதே போன்ற போராட்டத்தை தமிழகத்திலும் விரைவில் ஆதித்தமிழர் பேரவை தொடங்கும் என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

*தமிழக அரசை வலியுறுத்தி*
*******************************
தீர்மானம்.5)
நெல்லை மாநகரில் அமைந்துள்ள மணிமண்டபத்துக்கு ஒதுக்கப்பட்ட 64 செண்ட் நிலத்தையும், முழுப்பயன்பாட்டிற்கு எடுத்து பூங்கா மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களின் பார்வைக்கு ஒண்டிவீரன் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுக்களை வைக்க வேண்டும் என்றும், அதேபோன்று குதிரையில் அமர்ந்தபடி உள்ள மாமன்னர் ஒண்டிவீரன் சிலையை மணிமண்டபத்துக்கு வெளியே வைக்க வேண்டும் எனவும், மண்டபத்துக்குள்ளும் சிலை நிறுவ வேண்டும் எனவும் தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்.6)
மாமன்னர் ஒண்டிவீரன் வாரிசுதாரர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு, அரசுக்குடியிருப்பும், உழவுநிலம் பென்சன் போன்றவைகளை உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசைக் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நன்றி.

என்றும் அய்யாவின் வழியில்...
ஆ .நாகராசன்.
பொதுச்செயலாளர்
 ஆதித்தமிழர் பேரவை
20.8.2016
திருநெல்வேலி

என்றும் சாதி ஒழிப்புப் பணியில் 
ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு

வலைத்தளம்: www.aathithamizharperavai.com
வலைப்பூ: www.atptamilnadu.blogspot.com
முகநூல் பக்கம்: https://www.facebook.com/aathithamizhar.peravai

செத்தமாட்டை தூக்கமாட்டோம், மலக்குழியில் இறங்கமாட்டோம்

மானத்தோடு வாழ்வதற்கு அய்ந்து ஏக்கர் நிலம் வழங்கு! என மாமன்னர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நிறுவனர் அதியமான் எழுச்சியுரை.

""""""""""""""""""""

ஆகத்து.20 காலை 11.30 மணியளவில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பேரவை தோழர்களுடம் சுமார் 50.க்கும் மேற்பட்ட வாகன அணிவகுப்பில் சென்று ஒண்டிவீரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்க உறையாற்றினார்.

அதில் மத்திய மோடி அரசின் புதிய குலக்கல்வி கொள்கைக்கு எதிராகவும், சமக்கிருத திணிப்பை எதிர்த்தும், பசுப்பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்படும் இந்து பாசிச அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு வேடிக்கை பார்ப்பது அவமானத்துக்குறியது என்று மத்திய அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்வதோடு

முதல் இந்திய விடுதலை வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை போற்றுவதற்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டு மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது, மக்கள் விரோதப்போக்கையே காட்டுகிறது. அது மட்டுமல்லாது தோழர்கள் வந்த வாகனங்களை வழிமறித்து பரிசோதனை என்ற பெயரில் பல்வேறு வாகனங்களை திருப்பி அனுப்பி தனது வீரத்தைக் காட்டியுள்ளது காவல்துறை இந்த சம்பவங்களை நினைத்து ஆளும் அரசுதான் வெட்க்கப்பட வேண்டும், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 1 சதம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது அந்த ஒரு சதம் வாக்குகள் அருந்ததியர்கள் அளித்தது, அதை மாற்றி அமைத்தால் அதிமுக ஆட்சி நிலைக்காது என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசிற்கு தெரியபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், இதை எல்லாம் சாதிக்க அறிவுப்பூர்வமாக பகுத்தறிவோடு இளைஞர்கள் முன்வர வேண்டும் , அதைவிடுத்து பால் அபிசேகம் செய்வ முளப்பாரி எடுப்பது, செருப்பை கையில் எடுத்து செல்வது, போன்ற செயல்கள் மாவீரனை கடவுள் ஆக்கும் பார்ப்பனிய செயல் எனவே நெல்லையில் அமைந்துள்ள மணிமண்டபத்தினுள் வைக்கப்படுள்ள குதிரையுடன் கூடிய மாமன்னர் ஒண்டிவீரன் சிலையை மண்டபத்துக்கு வெளியே வைக்க தொடர் போராட்டங்கள் எடுக்க வேண்டும், மணிமண்டபத்திற்குள்ளும் சிலை கைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேசினார், உடன் பொதுச்செயலாளர் உட்பட பேரவை நிவாகிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

_________________

செய்தி தொகுப்பின் சுருக்கம்

பொதுச்செயலாளர்.

நாகராசன்.

20.8.2016.


அய்யா அவர்களின் உரையை காண சொடுக்கவும்என்றும் சாதி ஒழிப்புப் பணியில் 
ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு

வலைத்தளம்: www.aathithamizharperavai.com
வலைப்பூ: www.atptamilnadu.blogspot.com
முகநூல் பக்கம்: https://www.facebook.com/aathithamizhar.peravai

அன்பான உறவுகளே

சிட்னியின் தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள்ளி விழா நிகழ்வுக்கு ஒஸ்ரேலியாவிற்கான சிறிலங்கா தூதுவரை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையை அறிந்து, கவலையும் அதிர்ச்சியும் அடைகின்றோம்.

குறித்த அமைப்பைச் சார்ந்த சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக, அரங்கேற்றப்படும் இத்தகைய நடவடிக்கைகள், எமது தாயக உறவுகளின் அரசியல் செயற்பாடுகளுக்கும், மறுக்கப்பட்ட நீதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கும், பெரும் தடையாகவே அமையும்.

இத்தகையை நிகழ்வை புறக்கணிப்பதுடன், அதற்கான எதிர்ப்புக்குரலாக இணைந்துகொள்ளுமாறு அனைவரையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு - இத்துடன் சிட்னி தமிழ் மக்கள் சார்பில் வெளியான துண்டுப்பிரசுரத்தின் தமிழ் ஆங்கில பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வண்ணம்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஒஸ்ரேலியா

தமிழ் இளையோர் அமைப்பு – ஒஸ்ரேலியா

நாடுகடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் - ஒஸ்ரேலியா
இராமன் புலாலுண்டவனே – வால்மீகி இராமாயணம்

- டாக்டர் இராதாசியாம் பிரம்மச்சாரி (Dr. Radhasyam Brahmachari,), கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் இயற்பியல்துறைப் பேராசிரியர்.

- மொழிபெயர்ப்பு: முத்து.செல்வன், பெங்களூரு

இந்தக் கட்டுரை hindtodaynews இணையதளத்தில் :4/18/2008 அன்று பதியப்பட்டது.. இந்தக் கட்டுரையில் காணப்படும் செய்திகள் பண்டித இ.மு.சுப்ரமணியப்பிளை அவர்களுடைய இராமயண ஆராய்ச்சி நூற்தொகுப்பிலும் உள்ளன.  இந்தத் தொகுப்பின் கட்டுரைத் தொடர் விடுதலையில் தொடர்ந்துவருவதையும் அறிவீர்கள். பண்டித இ.மு.சுப்ரமணியப்பிள்ளை – குடி அரசு இதழில் 1929 முதல் சந்திரசேகரப்பாவலர் என்ற பெயரில் ‘இதிகாசங்கள்’ என்னும் தலைப்பில் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்தது; பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, ஆறாம் பதிப்பு பிப்ரவரி 2003)
இருப்பினும் ஒரே பதிப்பில் செய்திகளைத் தொகுத்துக் கொடுப்பதற்காக இந்தக் கட்டுரை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாம் கூரினால் இந்தப் பெரியாரியலார்க்குப் புளுகுவதே வேலை என்று பொய்யுரைத்துப் புறந்தள்ளவே முனைவார்கள். அதனால்தான்  வங்காளப் பேராசிரியர் ஒருவர் தாரகாந்த் காவ்யதீர்த்தர் என்பவர் மொழிபெயர்த்த வால்மீகி இராமயண மேற்கோள்களைக் கொண்டு நிருவிய கட்டுரையை உங்கள் பார்வைக்கும் பகிர்தலுக்கும் முன்வைக்கின்றேன். மு.செ.
**
வேத காலம் புலால் உணவு பரவலாக இருந்த காலம் ஆகும். இந்த நாட்டு துறவிகள் (இருடிகள்) புலால் உணவை உட்கொண்டதை வேத நூல்கள் மூலம் அறியலாம். ஆனால் காலப்போக்கில் புலால் மறுத்தல் வட பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. இன்றுள்ள புலால் மறுப்பாளர்கள் இந்த உண்மையை ஏற்கத் தயங்குகிறார்கள். குறிப்பாக, இராமன், இலக்குவன், சீதை ஊனுணவை உண்டவர்கள் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். வால்மீகி இராமாயணத்திலிருந்து சில பகுதிகளைக் காட்டி அதனை நிறுவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இராமன் இலக்குவனுடனும் சீதையுடனும் அயோத்தியைவிட்டுக்  காடேகினான் அல்லவா? அங்கு ஒரு காட்சியைப் பார்ப்போம்.: அயோத்தியா காண்டம் சருக்கம் 52, பாடல் 102

Tau tatra caturo mahāmṛgān varāham ṛ  śyaṃ mahārurum l
Ādāya medhyaṃ tvaritaṃ bubhukṣitau vāsāya kāle yayaturvanasparitam ll(Ayodhyā/52/102)  

உடன்பிறந்தோர் இருவரும் (இராமனும் இலக்குவனும்) வத்சயத் தேசத்தில் நுழைகின்றனர். மிகுந்த பசியுடனிருந்த அவர்கள், வராக, இரிசிய, பிரிசதா, மகாவுரு என்னும் பெயர்களுடைய நான்கு மான்களைக் வேட்டையாடி அவற்றின் தேர்ந்தெடுத்த ஊன் பகுதிகளை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தடிக்குச் சென்றனர். (tr. By Tarakanta Kavyatirtha, Vālmīki Rāmāyaṇa, P M Bagchi and Company, Calcutta-6, p-177).,

பின்னர், தொடர்ந்து காட்டு வழியே சென்றபோது, இராமனும் இலக்குவனும் யமுனையாற்றங்கரையில் பல விலங்குகளைக் கொன்று அவற்றின் புலாலை உண்டனர். (மேலது பக் 181)
Krośamātraṃ tato gatvā bhrātarau Rāmalakṣaṇau l
Vahun medhyān mṛgān hatvā ceturyamunāvane ll   (Ayodhyā/55/32) 

சித்திரக்கூட மலையை அடைந்த அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்தில்  சிலகாலம் தங்க முடிவெடுத்தனர். அவர்கள் தங்குவதற்காக ஒரு குடிசையைக் கட்டினர். அப்போது இலக்குவனிடம் இராமன், குடிசையினுள் புகுவதற்கு முன் “வாஸ்துயக்ஞ” செய்ய வேண்டுமென்றும் அதற்காகச் சில விலங்குகளைக் கொன்று வருமாறு கூறினான்..
Bhrāturvacanamājñāya Lakṣaṇaḥ paravīrahā l

Cakāra ca yathoktaṃ hi taṃ Rāmaḥ punaravrabīt ll
Aiṇeyaṃ śrapayasvaitacchālāṃ yakṣyāmahe vayam l 
Tvaba soumyamuhūrtoyaṃ dhruva śca divaso hyayam ll (Ayodhyā/56/24,25)

இலக்குவன் அண்ணனின் கட்டளையை நிறைவேற்றினான். அப்போது இராமன் அவனிடம், “ நீ வேட்டையாடிய மானை நன்றாக வேக வைத்துக் கொண்டு வா., அதனைப் படையலாக்கி இந்தக் குடிசையை வழிபடுவோம். இன்றைய நாள் துர்வ என்றழைக்கப்படும் நன்னாள் ஆகும். .இந்த நாளின் ஒவ்வொரு பொழுதும் தூயதே.” என்றான் (மேலது, பக்.182)

Sa Lakṣaṇaḥ kṛṣṇa mṛgaṃ hatvā medhyaṃ pratāpvān l
Atha cik  ṣep saumitriḥ samiddhe jātavedasi  ll
Taṃ tu pakvaṃ smājñāya niṣṭaptaṃ chinnaśoṇitam l
Lakṣaṇaḥ  puru ṣabyaghramatha rāghabamabrabīt ll(Ayodhyā/56/26,27)

இலக்குவன் ஒரு கருப்பு மானை வேட்டையாடி அதன் உடலத்தைக் கொண்டுவந்திருந்தான். இராமன் கூறியதற்கேற்ப அந்த மானின் உடலை நெருப்பில் வீசி வேக வைத்தான். அது நன்றாக வெந்து விட்டது என்பதை அறிந்து, “அண்ணா! நான் மானின் உடலை நன்றாக வேக வைத்து விட்டேன். வேள்விக்குரிய (யக்ஞம்) சடங்குகளைத் தாங்கள் அறிவீர்கள். அதனை நிறைவேற்றிடுங்கள்” என்று கூறினான். (மேலது, பக். 182-183)

அவ்வாறு வேக வைத்த மானின் புலாலை என்ன செய்திருப்பார்கள்? அதை வீசி எறிந்திருப்பார்களா? அதனை அவர்கள் உண்டிருப்பார்கள் என்பதே அறிவார்ந்த முடிவு.
அங்கிருந்து புறப்பட்டு மந்தாகினியாற்றங்கரையை அடைந்தனர். அந்தக் காட்சியை வால்மீகி இராமாயணம் கூறுகிறது.. எப்படி?
Taṃ tadā darśayitvā tu maithilī girinimnagām l 
Niṣasāda giriprasthe sītāṃ māṃsena chandayan ll 
Idaṃ medhyaṃ svādu niṣṭaptamidamagninā l
Evamānte sa dharmātmā sītayā saha rāghavaḥ ll  (Ayodhyā/96/1,2)

இராமன் முதலியோர் காடு, மலைகளைக் கடந்து மந்தாகினியாற்றங்கரையை அடைந்து ஓரிடத்தில் ஓய்வெடுக்கின்றனர். அப்போது, மிகுதியான அளவில் மான்கறி சமைக்கப்படுகிறது. சீதையை மகிழ்விக்கும் பொருட்டு இராமன் சீதையிடம், “இந்த உணவு மிகவும் சுவையாக உள்ளது. புதிதாக நெருப்பில் சுடப்பட்டது .என்பதால் தூய்மையானது” என்று கூறினான். அங்குச் சில காலம் இப்படியே தங்கி இருந்தனர், (மேலது, பக். 233)
இராமன் மான் புனைவில் இருந்த மாரீசனைக் கொன்றபோது, அவன்” ஓ! சீதா! ஓ! இலக்குமணா!” என்று கூவினான்.  அந்த நேரத்தில் இலக்குவனும் சீதையும் எந்த நிலையில் இருந்திருப்பர்கள் என்பது குறித்து இராமன் கவலை கொள்கிறான்.
Nihatya pṛṣataṃ cānya māṃsamādāya  rāghavaḥ l 
Tvaramāṇo janasthānaṃ sasārābhimukhaṃ tadā ll  (Araṇya/44/27)

கவலை கொண்ட அவன் மற்றொரு மானைக் கொன்று அதன் ஊனைத் தின்றுவிட்டு, அவர்கள் குடிசையை நோக்கிச் சென்றான். (மேலது, பக். 319)
முனிவன் புனைவில் இருந்த இராவணனுடன் உரையாடிய சீதை அவனிடம்,”என் கணவன் இராமன் விரைவில் பல வகையான பழங்களுடனும்  வேட்டையில் கொன்ற மான் கறியுடனும் (மாமிசம்) பன்றிக் கறியுடனும் (வராக மாமிசம்) உடும்புக் கறியுடனும் வருவான். சற்றே காத்திருங்கள். நீங்கள் அருள்கூர்ந்து உங்கள் பெயரையும் குலப்பிரிவையும் (கோத்திரம்) கூறிடுங்கள். அத்துடன் இந்தக் காட்டில் நீங்கள் எதற்காகத் திரிகிறீர்கள் என்பதையும் கூறிடுங்கள்” என்றாள்.(மேலது, பக். 323)
இதிலிருந்து இராமன் காட்டினுள் வேட்டையாடச் செல்வது வேட்டையில் கொன்ற விலங்குகளின் ஊனைத் தின்பதற்காகவே என்பது புலனாகின்றது.
சீதையை இராவணனிடமிருந்து மீட்கப் போராடிச் செத்துப் போன சடாயுவுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக காட்டிலிருந்த பல மான்களைக் கொன்று அவற்றின் கறியை கடவுள்களுக்குப் படைத்தான். (மேலது, பக்.362)

Rāma atha sahasaumitrirvanaṃ gatvā sa vīryavān l
Sthūlān hatvā mah āroh īnanutastāra taṃ dvijam ll (Araṇya/68/32)

இராமன் கபந்தன் என்னும் அரசனைக் (அரக்கனாம்) கொலை செய்தபோது இறப்பதற்கு முன்னர் கபந்தன், “இந்த இடத்தில் கட்டி வெண்ணெய்யைப் போலக் கொழுத்த பறவைகளைத் தின்னலாம். பம்பை ஆற்றில் உரோகித்த, சக்ரத்துண்ட, நலமீன் போன்ற மீன் வகைகளைக் காண்பாய். நீ உன்னுடைய வில்லை அம்பையும் பயன்படுத்தி அவற்றைக் கொல்வாய். இலக்குவன் அவற்றை நன்றாகக் கழுவி வறுத்து உனக்குப் பக்தியுடன் படைப்பான்” என்று கூறினான். (மேலது, பக் 358)

Ghṛtapiṇḍopamān sthūlāṃstān dvijān bhakṣ ayiṣyatha l 
Rohitān vkratuṇḍāśca nalamīnāṃśca rāghava ll 
Pampāyāmiṣubhirmatsyāṃstatra rāma rabān hatān l 
Nistavakyakṣāṇayastaptānkṛ śānaikakaṇṭakān ll 
Tava bhaktyā samāyukto Lakṣmaṇaḥ sampradāsyati l  (Araṇya/73/24,25,26)

இராமன் வாலியைக் கொன்றபோது, இறக்கும் முன் வாலி, “ ஓ! இராகவா! காண்டாமிருகம், உடும்பு, முயல், முள்ளம்பன்றி, ஆமை ஆகிய விலங்குகள் கூர்நகங்களையுடைய விலங்குகள். பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அவற்றின் ஊனைத் தின்ன ஏற்கப்பட்டிருக்கின்றது” என்று கூறினான். (மேலது, பக் 389).

Pañca pañcanakhā bhakṣyā brahmakṣatreṇa rāghava l 
śalyakaḥ śvābidho godhā śaśaḥ kurmaśca pañcamaḥ ll (Kiṣkindhā/17/39)

வால்மீகி இராமாயணத்தில் இது போன்றுள்ள வரிகளால், வனவாழ்க்கையின் போது காடுகளில் திரிந்த இராமன். இலக்குவன், சீதை ஆகியோர் விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது இலங்கையை வென்ற பிறகு அசோகவனத்திற்குச் சென்ற இராமனுக்குக் காவலாளிகள் பல வகையான பழங்களையும் சமைத்த புலால் வகைகளையும் படைத்துள்ளனர். (மேலது, பக். 667)
******

கி.பி - 1891 இல் வெளிவந்த மனோன்மணீயம் நாடக நூலில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய #தமிழ்த்தாய்_வாழ்த்துப்பா,
=============================================================

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

#மனோன்மணியம்_சுந்தரனார்.இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 31 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது.கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார்.அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.


ஈழம் ரஞ்சன்

Powered by Blogger.