Halloween party ideas 2015
.



 மகிந்த ராஜபக்சவின் சிறீலங்கா சுகந்திர கட்சி உறுப்பினர் K.T.இராஜசிங்கம்  மற்றும் நோர்வேயில் வாசிக்கும் கமல்   ஏற்பாட்டில்  வரும் ஜூலை மாதம்  யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இசை நிகழ்வு நடை பெறவுள்ளது, இதில் சிறப்பு அழைப்பாளராக  இசைஞானி  இளையராஜா அவர்கள் கலந்து கொள்கின்றார். அவருடன் பாடகர் மனோ ,சித்திரா,சாதனாசர்க்கம், காத்திக் மற்றும்  ஹரிச்சரன் ஆகியோரும் கலந்து  கொள்கின்றனர்.
  
மதிப்புக்குரிய இசைஞானி  இளையராஜா  அவர்களே!

இலங்கையில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடாத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அதைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உலகை எமாற்றும் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இசை நிகழ்வு நடத்துகின்றது.  இந்  நிகழ்விற்கு நீங்கள் பங்கு பெற கூடாது என்பது உலகதமிழர்களின் வேண்டுகோள். 

நீங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால்  இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொலைகார இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது போலாகிறது. எனவே உலகதமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந் நிகழ்வை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சிறிலங்காவின் ஆட்சியாளர்களும், அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களான மேட்டுக்குடியினரும், மகாவம்ச மனோபாவத்திலிருந்து விடுபடும்வரை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை.

வடகிழக்கு  காணிகளை விடுவிக்க கோரி இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காணாமல் போனவர்களின் உறவினர்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் நீங்கள் இலங்கை சென்று இசை நிகழ்வு நடத்துவது  தமிழர்களின் போராட்டங்களை கொச்சப்படுத்துவதாக அமையும்.

ஜூலை மாதம் என்பது எம்  மக்களை அழித்து எம் மண்ணை ஆக்கிரமிக்க பெரும் படைப்பலத் துணையுடன் வந்த எதிரியை எதிர்கொள்ள தம் உயிரையே ஆயுதமாக்கி, உடலை வெடிமருந்தாக்கி மனபலத்தை எமது இனத்தின் கவசமாக்கிய கரும்புலிகள் மாதம்.

கரும்புலிகள் காலத்தால் மறைந்து போகாத வரலாற்றைப் பதித்து, இரும்பையொத்த வீரத்தை விதைத்து, எம்மினத்தின் வரலாற்றைப் புதுப்பித்த புனிதர்களின் மாதத்தில் நீங்கள் இசை நிகழ்வு மகிந்த ராஜபக்சவின் சிறீலங்கா சுகந்திர கட்சியினருடன் இணைந்து நடத்துவதை உலகதமிழர்கள் 
ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

 பேரினவாத சிங்கள இன வாதிகளினால் தமிழர்களின் உரிமை, உடைமை, உயிர் எனச் சூறையாடி தமிழர்வாழ்வில் தீராத பெரும் ஏற்படுத்திய மாதம்   ஜுலை.    புத்தரின் பெயரால் தமிழனை சிங்களவன்உயிரோடு விழுங்க முடியும் என்று சொன்ன மாதம் ஜுலை.

எனவே உலகத்தமிழார்களின் உறவுக்கு மதிப்பளித்து இந் நிகழ்வை இரத்து செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
பேரினவாத சிங்கள இன வாதிகளினால் தமிழர்களின் உரிமை, உடைமை, உயிர் எனச் சூறையாடி தமிழர்வாழ்வில் தீராத பெரும் வலிய ஏற்படுத்திய மாதம்   ஜுலை.    புத்தரின் பெயரால் தமிழனை சிங்களவன்உயிரோடு விழுங்க முடியும் என்று சொன்ன மாதம் ஜுலை.

 பேரினவாத சிங்கள இன வாதிகளினால் தமிழர்களின் உரிமை, உடைமை, உயிர் எனச் சூறையாடி தமிழர்வாழ் வில் தீராதப்பெருவலியை ஏற்படுத்திய மாதம்   ஜுலை.    புத்தரின் பெயரால் தமிழனை சிங்களவன்
உயிரோடு விழுங்க முடியும் என்று சொன்ன மாதம் ஜுலை.

எனவே உலகத்தமிழார்களின் உறவுக்கு மதிப்பளித்து இவ் நிகழ்வை ரத்து செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


Post a Comment

Powered by Blogger.