Halloween party ideas 2015
.

ஆதித்தமிழர் பேரவையின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், நிறுவனர் 'அய்யா' அதியமான் தலைமையில் 7.1.2017 பிற்பகல் 3.30 மணியளவில் கோவை ஆதித்தமிழன் அரங்கத்தில் தொடங்கி இரவு 8 மணிவரை நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் 70 கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் கூட்டத்தில் பேரவை நிறுவனர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
""""""""""""""""""""
தீர்மானம்.1)
ஆணாதிக்கம் நிறைந்த பார்ப்பனிய சமூகத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஒன்றுக்கு மேற்பட்ட முறை பொறுப்பில் இருந்து, தனக்கென தனித் தகுதியை வகுத்துக்கொண்டு தனிப்பெரும் தலைவராக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த மாண்புமிகு முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 5.12.2016 அன்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார், அவரது மறைவிற்கு இந்த செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறது.
தீர்மானம்.2
திராவிட இயக்க வரலாற்றில் இன்றுவரை உறுதியான கொள்கை நிலைப்பாட்டோடு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக செயலாற்றி வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகம், 6.க்கு மேற்பட்ட முறை ஆட்சியில் இருந்த போது, தந்தை பெரியாரின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக நின்று சமூகநீதிச் சிந்தனையோடு பல்வேறு கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்து வந்துள்ளது.
அப்படி முத்திரை பதித்து வந்துள்ள, தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், தற்போதைய தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், செயல்தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த பொறுப்பு தளபதியாரின் அயராத உழைப்பிற்கும், அவர் செய்த தியாகங்களுக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு, இந்த வாய்ப்பின் அடிப்படையில் தற்போது திமுக வின் செயல்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு, தனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் இந்த செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்.3)
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிவை தடை செய்து, இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டும், அதை மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமலும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்காமலும், காலம் தாழ்த்தும் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் கடந்த ஆண்டு 2016 .ல் 50 க்கு மேற்பட்ட தூய்மைப் பணி புரியும் தொழிலாளர்கள் மலக்குழியில் இறங்கி மரணமடைந்துள்ளனர், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தனிக்கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்.4)
தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர் பங்கீட்ட்டு உரிமையை நிலைநாட்டிட, காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழகத்தில் நாளும் நாளும் நடந்தேறும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும், இதுவரை மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், இந்த செயற்குழு தமிழக அரசு வலியுறுத்துகிறது.
தீர்மானம்.5)
நாட்டின் உயர் மதிப்பு மிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து கருப்புப் பண மற்றும் கள்ள நோட்டுப் பேர்வழிகளை தப்பிக்க விட்டு விட்டு, உழைக்கும் எளிய மக்களை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி நடுத்தெருவில் நிறுத்தி உள்ள மத்திய மோடி அரசை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம்.6)
தமிழகத்தில் தொடர்ந்து நடந்தேரும் சாதி ஆதிக்க ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்திட, தனிச்சட்டம் இயற்றி தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்ட தீர்மானங்களோடு பொள்ளாச்சி வீரன் நன்றி கூற மாநில சிறப்பு செயற்குழு நிறைவடைந்தது.
_____________
ஆதித்தமிழர் பேரவை
பொதுச்செயலாளர்.
7.1.2017


Post a Comment

Powered by Blogger.