Halloween party ideas 2015
.


இன்று  19-12-2016,  திங்கள்கிழமை  மாலை சரியாக 04 .30  மணியளவில் ஈரோடு –கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு தமிழ்நாடு சுற்றுசூழல்  பாதுகாப்பு இயக்கம் ,  சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க அமைப்பின்   ஒருங்கிணைப்பாளரும்,  கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு பொறுப்பாளரும், காவிரி ஆறு பாதுகாப்பு  இயக்க பொறுப்பாளருமான தோழர்.முகிலன் மீது  கரூரில்  மணல் கொள்ளையர்களின் அடியாட்கள் நடத்திய கொலைவெறி  தாக்குதலை கண்டித்து  இன்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது...   


முகிலன் அவர்கள்  மீது கரூர்-வாங்கலில்  தமிழக முதல்வர் ஓபி எஸ் மைத்துனர் என சொல்லிக் கொள்ளும்   மணல் கொள்ளை மாபியாவான பாஸ்கரின்  அடியாட்கள் நடத்திய கொலைவெறி  தாக்குதலை கண்டித்து நடக்கும் இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களும் , பல்வேறு  அரசியல் கட்சி தலைவர்கள் , சுற்றுசூழல் செயல்பாட்டாளர்கள், விவசாய அமைப்பு தலைவர்கள், பல்வேறு மக்கள் இயக்க தலைவர்கள், புரட்சிகர இயக்கங்கள் , முற்போக்கு இயக்கங்கள்  பங்கேற்கின்றனர்.

 

தமிழர் ஒருங்கிணைப்பு குழு  ஈரோடு ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்கிறது.

 

அனைத்து பத்திரிக்கையாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டுமாயும் , நாட்டிற்கு உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமாய்  கேட்டுக் கொள்கிறோம்  


இப்படிக்கு  : தமிழர் ஒருங்கிணைப்பு குழு ,  ஈரோடு . 9976334334, 8760444600

==========================================================================================

இணைப்பு : 

1.முகிலன் அறிக்கை 

2.அய்யா .வைகோ  அவர்களின் கண்டன அறிக்கை

3.அய்யா .நல்லகண்ணு   அவர்களின் கண்டன அறிக்கை

4.அய்யா .நெடுமாறன்   அவர்களின் கண்டன அறிக்கை

5. முகிலன் படங்கள் 

6 .பத்திரிகை செய்திகள் 

7.முகிலன் புகார் மனு 

8. ஈரோடு ஆர்பாட்ட துண்டறிக்கை, சுவரொட்டி  


1.முகிலன்  மீது கரூர் - வாங்கலில் மணல்கொள்ளையர்கள் நடத்திய 

கொலைவெறி தாக்குதல்  பற்றி முகிலனின் அறிக்கை

  ======================================================

கரூர் மாவட்டம் வாங்கலில் புதிய மணல்குவாரி அமைப்பற்கான அனுமதியை அரசு கொடுத்துள்ளது. அது சம்மந்தமாக வாங்கல் பொது மக்கள், விவசாய சங்கங்கள், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் இனணந்து வாங்கல் புதுவாங்காலம்மன் திருமண மண்டபத்தில் மணல்குவாரி பற்றி கலந்தாலோசனை கூட்டம் நடந்த ஏற்பாடு செய்து இன்று மாலை சுமார் 05.00 மணிக்கு தொடங்கியது. ..


கூட்டத்தை நடத்த விடாமல் தகராறு செய்து தடுக்க வேண்டும் என மண்டபத்திற்குள் வந்த மணல் மாஃபியா கொள்ளையர்களின் அடியாட்கள் சுமார் 20 பேர் (ஏற்கனவே கடம்பன்குறிச்சியில் மக்களை கல்வீசி தாக்கிய அதே கும்பல்) பல்வேறு வகையில் ரகளையில் ஈடுபட்டனர். ரவுடிகள் 20 பேராக இருந்தாலும் கூட்டத்திற்கு வந்த 250 பேர் தேவையில்லாத பிரச்சினை வேண்டாம் என அமைதியாக இருக்க, காவல்துறை ஆய்வாளர் ஞானசேகர் அங்கு வந்து அரங்க கூட்டமாக இருந்தாலும் முறையாக அனுமதி வாங்கி கூட்டம் நடத்துங்கள் என்று கூறவே காவல்துறையின் அனுமதி பெற்று வந்து கூட்டத்தை நடத்தி முடித்தோம்...



கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் புதிய மணல் குவாரி அமைக்க முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்களை திரட்டி இன்று மாலை வாங்கலில் புதிய மணல்குவாரி அமைக்காதே! - என இன்று 13-12-2016 செவ்வாய் கலந்தாய்வுக் கூட்டம் இரவு சுமார் 07.15 மணியளவில் முடித்து, TN66B 1139 எண் கொண்ட FORD காரில் வாங்கலில் இருந்து கிளம்பினோம். காரை 69 வயதான அய்யா.கே ஆர் எஸ் மணி மணி அவர்கள் ஓட்டி வந்தார்.



நிகழ்ச்சி நடந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரத்தில் மாரியம்மன் கோவில் வீதி வழியாக கரூர் நோக்கி வந்த எங்களை (முகிலன், தமிழ்க்கவி,முருகேசன், K.R.S.மணி, சிறு குழந்தைகள் கிஷோர்,தனுசு,ஹரிதாஸ்ரீ ஆகியோரை) கும்மிருட்டில் ஆள் அரவம் இல்லாத பகுதியில் மணல் லாரியை காருக்கு முன்னாள மெதுவாக போக வைத்து, காரை வேகமாக செலுத்த முடியாமல் செய்தனர். மெதுவாக சென்ற காரின் முன்பாக மணல்கொள்ளையர்களின் அடியாட்கள் பைக்குகளை காரின் குறுக்கே போட்டு வழிமறித்து, காரை நிறுத்தினர்,



நாங்கள் வந்த காரை வழிமறித்து, காரின் கதவை திறக்க முயற்சித்து முடியாததால் அனைத்து ரவ்டிகளும் காரை தங்கள் பலம் கொண்ட மட்டும் கைகளால் ஓங்கி குத்தினர். அய்யா மணி அவர்கள் காரை விட்டு இறங்கியவுடன் அவரது கையை பிடித்து திருப்பி முறுக்கவே , அவர் விட்டுவிடு இல்லைஎன்றால் நடப்பதே வேறு எனக் கூறவும் அவரது கையை விட்டு விட்டனர். காரின் பின்பக்கம் அமர்ந்து இருந்த என்னை பித்து இழுக்க காரை ஓங்கி ஓங்கி கைகளால் அடித்தனர். காரின் கதவை வேகமாக குத்தி இழுக்கவே கார் கதவு திறந்து கொண்டது.



காரில் இருந்த என்னை வெளியே இழுத்து தாக்க முயற்சித்தும் நான் வெளியே வராததால் எனது சட்டை பனியனை பிடித்து வெறியோடு இழுத்து அதை கிழித்து எறிந்தனர். பின்பு எனது கழுத்தை நெறித்தும், வெளியில் இருந்து காலால் எட்டி காருக்குள் எட்டி உதைத்தும், கைகளால் எனது மார்பை குத்தியும் கொலைவெறியோடு உன்னை கொல்லாமல் விடமாட்டோம் எனக் கூறி தாக்குதல் செய்தனர்


6 பைக்கில் வந்த 11 க்கு மேற்பட்ட அடையாளம் தெரிந்த மணல்கொள்ளையர்களின் அடியாட்களின் குண்டர்கள் எங்கள் காரை சுற்றி சுற்றி வந்து தாக்குதல் நடத்தி போது காரில் இருந்த மூன்று குழந்தைகளின் அழுகுரல்களும், தோழர். தமிழ்க்கவி போன்றவர்கள் போட்ட அபாய கூக்குரலைக் கேட்டு, பொதுமக்கள் ஓடிவருவதைப் பார்த்த மணல்கொள்ளையர்களின் அடியாட்களை தப்பி ஓடினர்..


பின்பு நாங்கள் வந்த காரை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி திருப்பினோம். நாங்கள் 20 பேர் கரூர் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்று ஆட்சியரை பார்க்க வேண்டும் சொன்னதற்க்கு, ஆட்சியர் இங்கு இல்லை என்றும், கரூர் மாவட்ட ஆட்சியர் வாங்கல் சென்று அங்கு உங்களுக்காக காவல்துறை ஆய்வாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் காத்துக் கொண்டு உள்ளனர் . அவர்களிடம் புகார் கொடுங்கள் என்று கூறியுள்ளார் எனக் கூறவே, நான் (தோழர் முகிலன்) வாங்கலில் காவல்துறையினர் அருகாமையிலேதான் எங்களை கொலைவெறியோடு தாக்கினர் . எனவே வாங்கல் செல்ல மாட்டோம், எந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் வருகிறாரோ அப்போது வரை இங்கு கரூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் காத்துள்ளோம் என்று சொன்னோம்.


சுமார் 20 நிமிடத்தில் கரூர் கோட்டாட்சியர், மணமங்கலம் வட்டாட்சியர், கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வீட்டில் உள்ள அலுவலகம் சென்றனர்.


சில நிமடங்களில் இங்கு(மாவட்ட ஆட்சியர் வீட்டில்) இல்லை வெளியே உள்ளார் என சொல்லப்பட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் அவரது வீட்டில் இருந்து கோட்டாட்சியர், மணமங்கலம் வட்டாட்சியர் ஆகியோருடன் வீட்டில் இருந்து வெளியே வந்து எங்களைப் பார்த்து வந்தார்.அப்போது நேரம் சுமார் 08.00 மணி இருக்கும். அவர் எங்களிடம் என்ன நடந்தது எனக் கேட்டார்.


அவரிடம் இரவு வாங்கலில் நடந்தவற்றை தெரிவித்து, காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மணல்கொள்ளையர்களின் அடியாட்களுக்கு ஏவல்துறையாக இருப்பதை எல்லாம் சுட்டிக்காட்டி,..

1. அய்யா நல்லக்கண்ணு 10-07-2016 அன்று கடமன்குறிச்சி மணல்குவாரியை பார்வையிட்ட போது அவரை குவாரிக்குள் போகக் கூடாது எனக் கூறி தகராறு செய்தவர்கள் ...

2. 26.10.2016 அன்று கடம்பன்குறிச்சி- தோட்டக்குறிச்சி வரை மணல்குவாரியை பார்வையிட்ட அய்யா.நெடுமாறன் -தோழர் .மகேந்திரன் உடன் வந்தவர்களை தாக்கியவர்கள்

3. புகலூரில் அய்யா.விசுவநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்று மணல்குவாரியை எதிர்த்து போராடாதே என கொலைமிரட்டல் விடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் மைத்துனர் என்று சொல்லிக் கொள்ளும் பாசுகர், புதுக்கோட்டை சித்திரவேல்,கடம்பன்குறிச்சி மனோ ஆகியோர் மீது


நடவடிக்கை என்பது இதுவரை காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தால் எதுவும் எடுக்கப்படவில்லை . கரூர்மாவட்டம் முழுவதும் மணல்கொள்ளையர்களின் ரவடி ராஜ்ஜியமாக உள்ளது. காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மணல்கொள்ளையர்களின் அடியாட்களுக்கு கைகட்டி சேவகம் செய்து வருகிறது என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் எனக் குறிப்பிட, கரூர்மாவட்ட ஆட்சியர் "கட்டாயம் நீங்கள் இப்போது புகார் கொடுங்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார். அவரிடம் "இதுவரை உங்களிடம் கொடுத்த எந்த புகாரின் மீது நடவடிக்கை இல்லாததால்தான் மணல்கொள்ளையர்களின் ரவடி ராஜ்ஜியமாக கரூர் மாவட்டம் உள்ளது என்றேன். அதற்க்கு அவர் கடந்த 3 மாதங்களாக எவ்வளவு மனஉளைச்சலில் நான் உள்ளேன் தெரியுமா? எனக் கூறிக் கொண்டு புகாரை கொடுங்கள் என்றார். மாவட்ட செயல்துறை நடுவர் என்ற முறையில் உங்களிடம்தான் புகார் தருகிறேன்.அதன் மீது நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றோம்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேப்பர் வாங்கி மாவட்ட செயல்துறை நடுவராகவும், மாவட்ட ஆட்சியராகவும் இருக்கும் திரு.கோவிந்தராசு அவர்களிடம் புகார் மனுவை எழுதி கொடுத்து வந்தோம் .

மணல்கொள்ளையர்களின் அடியாட்களை  உடனே கைது செய்யாவிட்டால், கரூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில்தான்  அடுத்த கட்டப் போராட்டம் இருக்கும் என மாவட்ட ஆட்சியரிடமே தெரிவித்து வந்தோம்.

@ முகிலன் (14-12-2016) 


அவரை தொடர்பு கொள்ள ...

முகிலன் ,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு சுற்றுசூழல்  பாதுகாப்பு இயக்கம் ,

 சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்,

அலைபேசி : 94436-75048, 75022 25658

மின் அஞ்சல் : sagayamaaivukkuzhu@gmail.com


2. அய்யா .வைகோ  அவர்களின் கண்டன அறிக்கை :

=====================================

Vaiko
2 hrs · 

கரூர் - வாங்கலில்
முகிலன் மீது கொலைவெறித் தாக்குதல்

வைகோ கண்டனம்

கரூர் மாவட்டத்தில் ஆற்று மணலைக் கொள்ளை அடிக்கின்ற கொடுமையில் பலர் ஈடுபட்டு வருவதை எதிர்த்து, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. இந்த நிலையில், கரூர் மாவட்டம் - வாங்கல் பகுதில் புதிய மணல் குவாரி அமைக்க சிலர் முயற்சிப்பதைக் கண்டித்து 13.12.2016 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பொதுமக்களைத் திரட்டுவதற்காக கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்திவிட்டு, வாங்கலிலிருந்து கரூர் நோக்கி வந்தபோது இருளில் ஆள் அரவம் இல்லாத பகுதியில் மணல் லாரியை காருக்கு முன்னாள் மெதுவாக போக வைத்து, காரை செல்லவிடாமல் தடுத்தனர். மணல் கொள்ளையர்களின் குண்டர்கள் பைக்குகளை காருக்குக் குறுக்கே போட்டு வழிமறித்தனர். அதன்பின்னர் காரை ஓட்டி வந்த கே.ஆர்.எÞ.மணி அவர்களையும் தாக்கினர். காரின் கதவை வேகமாக அடித்துத் திறந்து முகிலனைக் கடுமையாகத் தாக்கினர். அவர் அணிந்திருந்த சட்டை, பனியன் அனைத்தையும் கிழித்து எறிந்ததோடு, அவரது கழுத்தை நெறித்தும், கால்களால் அவரை உதைத்தும், கைகளால் அவரது மார்பின் மீது தாக்கியும், உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று கொலை செய்ய முயன்றுள்ளனர். காரில் இருந்தவர்கள் போட்ட கூக்குரலைக் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்ததால், ஆறு பைக்குகளில் வந்த 11க்கும் மேற்பட்ட அடையாளம் தெரிந்த மணல் கொள்ளையர்களின் அடியாட்கள் ஓடிவிட்டனர்.

மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் சென்றபோது, முதலில் அவர் இல்லை என்று கூறியுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்கு முன்னால் தர்ணா செய்ய நேர்ந்ததால், மாவட்ட ஆட்சியர் நடந்ததைக் கேட்டு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் எந்தவிதமான உரிய நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் நல்லகண்ணு அவர்கள் 2016 ஜூலை 10 ஆம் தேதி, கடமன் குறிச்சி மணல் குவாரியை பார்வையிட்டபோது, அவரை குவாரிக்குள் போகக்கூடாது என்று கூறி தகராறு செய்தனர். 2016 அக்டோபர் 26 ஆம் தேதி அன்று கடம்பன்குறிச்சி, தோட்டக்குறிச்சி மணல் குவாரிகளை பார்வையிட அண்ணன் நெடுமாறன் அவர்களும், தோழர் மகேந்திரன் அவர்களும் சென்றபோது அவர்களுடன் வந்தவர்கள் தாக்கப்பட்டனர். புகளூரில் சகோதரர் விசுவநாதன் அவர்கள் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் செய்தவர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், மணல் கொள்ளையர்களுடைய வன்முறைத் தாக்குதல் தொடர்வதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பாளர் முகிலனுடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கரூர் மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தினரோடு இணைந்து அறப்போராட்டம் நடத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
'தாயகம்' 
சென்னை - 8
19.12.2016

(https://www.facebook.com/TheVaiko/?fref=nf&pnref=story)


3. பழ.நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை

===========================================

முகிலன் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல்!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

கரூர் மாவட்டம் வாங்கலில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் மணல் குவாரியை எதிர்த்து அங்குள்ள மண்டபம் ஒன்றில் முகிலன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் 13-12-2016 அன்று மாலையில் நடைபெற்றது. திரளான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டம் நடைபெறும் போது மண்டபத்தின் முன்னால் மணல் கொள்ளையர்களின் கையாட்கள் கூடி கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றிபெறவில்லை. கூட்டம் முடிந்து முகிலனும் மற்றும் தோழர்களும் சென்ற காரை வழிமறித்து அவரை காரிலிருந்து வெளியே இழுத்துத் தாக்கினர். ஆனால், அங்கிருந்த காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, காலிக் கும்பலைக் கைது செய்யவில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடும் காவிரி பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த முகிலன், விசுவநாதன் போன்றோரின் உயிருக்கு தொடர்ந்து அபாயம் உள்ளது. உடனடியாக காலிக் கும்பலைக் கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

அன்புள்ள

பழ.நெடுமாறன்

-ஆவல்.கணேசன்-செய்தித்துறைப் பொதுச்செயலாளர்

தமிழர் தேசிய முன்னணி -9444920486



Post a Comment

Powered by Blogger.