Halloween party ideas 2015
.

தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் சனவரி 21ஆம் தேதி
சனிக்கிழமை "எழுக தமிழ்" நிகழ்வு நடைபெறவுள்ளது.
இது காலத்தின் ஒரு முக்கிய வரலாற்று கடமையாகும். சிங்கள பேரினவாதிகள் அரச
ஆதரவோடு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும்
ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்து தமிழ்
மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக.

அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் உள்ள பொது
அமைப்புக்கள் குறிப்பாக சனசமூக நிலையங்களை, விளையாட்டுக்கு கழகங்கள்,
மகளீர் அமைப்புகள், இசுலாம் மார்க்க அமைப்புகள், கிறீஸ்தவ மார்க்க
அமைப்புக்கள், சைவ மார்க்க அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், சட்டவாளர்கள்
கழகங்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர்கள் அமைப்புக்கள், கிராமிய
அமைப்புக்கள், மகளீர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும்
நீங்கள் ஒன்றாய் கூடும் தருணம். ஏழுக தமிழின் வெற்றிக்கு எங்கள் உரிமை
குரலை பலப்படுத்துவோம் அலை அலையாக ஒன்றாக அணி திரள்வோம். எத்தனை
அடக்குமுறை செய்தாலும் எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தமது
உணர்வுகளை ஒருபோதும் இழக்கமாட்டார்கள் என்பதை சிங்கள பெளத்த
தேசியவாதத்தினூடாக கட்டிய எழுப்பிய சிங்கள பெளத்தப் பேரினவாதத்திற்கும்
சர்வதேசத்திற்கும் உண்மையை உரக்கச்சொல்வோம்.

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை (Structured Genocide) எதிர்கொண்டுள்ள தேசம்
(Nation) ஒன்றில் திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்படும் அடையாள அழிப்பு
(Identity Cleansing) என்பது இனவழிப்பின் ஒரு வடிவமே. சிங்களப் பெளத்த
பேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு
கட்டமைப்புரீதியான இனவழிப்புவாதமாக வளர்ந்து நிற்கின்றது.
இராணுவமயப்படுத்தலும் சிங்கள குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும்;
புத்த சமய சின்னங்களின் பரம்பலினால் பௌத்தமயமாக்கலும்; பொருளாதாரச்
சுரண்டல்களும் சூறையாடல்களும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் தாராளமாகவே
தமிழ்ப் பேசும் மக்களிடத்திலும் வாழ்விடங்களிலும்
கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன

இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான நாம் நமது இருப்பையும் பண்பாடடையும் இன
அடையாளங்களையும் தக்கவைத்து கொள்வதர்க்காகவும் எதிர்காலத்தில் தமிழினம்
தனது அபிலாசைகளை வென்றெடுக்கவும்... துரோகத்தால் வீழ்ந்து போன வீரத்தின்
விளை நிலமே கிழக்கே 'எழுக தமிழ்' முழக்கத்துடன் விளித்துக்கொள்.

இன்று தமிழினத்தின் இழி நிலையை அடக்கி ஒடுக்கப் பட்ட நிலையை தமிழ் மக்கள்
உணரத் தவறினால் நாளை எம்மினத்த்தின் வரலாறு மிகவும் பரிதாபகரமாக
இருக்கும்.இன்றுஅடக்கி ஒடுக்கப்பட்‌டு அடிப்படைஉரிமைகள் நசுக்கப்பட்டு
அடிமை நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்." இனமான உணர்வுடன் ஒவ்வொரு
தமிழனும் நாங்கள் தமிழர்கள் என்ற ஒற்றை இன உணர்வுடன் தமிழ் இனத்தின்
விடுதலைக்காக உறுதியாக செயல்படுவோம். வரலாறு ஆழப் பதிய வைத்து சென்ற அந்த
"தாயகக்" கனவை மீறி ஒரு பொம்மைத் தீர்வை தமிழர்கள் இலேசில்
ஏற்கமாட்டார்கள்.

எப்பொழுதெல்லாம் போராடும் மக்களின் பொறுமை பொறை உடைக்கிறதோ
அப்பொழுதெல்லாம் புரட்சி வெடிக்கின்றது.
எப்பொழுதெல்லாம் புரட்சி வெடிக்கிறதோ அப்பொழுதெல்லாம் மக்களுக்கான
மாற்றங்களும் நிகழ்கின்றன.
ஒரு சமூகத்தில் புரட்சியின் தேவை உருவான நிலையில் புரட்சி மலராது
இருக்குமானால் அந்த சமூகம் மாபெரும் உளவியல் பாதிப்புகளை எதிர்கொள்ள
வேண்டியேற்படுகின்றது. மக்களுக்குள் இருந்து மக்களுக்காக போராடும் குணம்
மேலோங்கினால் மட்டுமே மக்களுக்கு நன்மைகள் நிகழும்.

"தமிழர்களே சிந்தியுங்கள் !!" தமிழினமே நீ எளிர்ச்சிக்கும்
புரட்ச்சிக்கும் தலைதுக்கவிலை எனில் நவின உலகு உன்னை தடம் இல்லாது
அழித்துவிடும். இனப்படுகொலைகள் செய்யப்பட்ட எங்கள் ஒவ்வொரு உறவுகளையும்
நெஞ்சில் நிறுத்தி கிழக்கே அலையாக எழுக தமிழினமே! எழுக !

இனமான உணர்வுடன் ஒவ்வொரு தமிழனும் யோசியுங்கள்.
உரக்க சொல்வோம் எங்கள் உரிமையை ! உறுதியாய் கேட்போம் எங்கள் உரித்தை!!


Post a Comment

Powered by Blogger.