Halloween party ideas 2015
.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கேலிக்கூத்து

ஹில்லாரி கிளிண்டன் பெற்ற மக்கள் வாக்குகள் 47.7 
டொனால்டு ட்ரம்ப் பெற்ற மக்கள் வாக்குகள் 47.5

அதாவது, ட்ரம்பை விட ஹில்லாரி சில லட்சம் வாக்குகள் கூடுதலாகத்தான் பெற்று இருக்கின்றார் (இறுதி விவரம் வெளியாகவில்லை)

ஆனால், ட்ரம்புக்குக் கிடைத்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் 306
ஹில்லாரிக்குக் கிடைத்தது 232

முன்பு
கிளிண்டன் காலத்தில் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த அல் கோர் பெற்ற வாக்குகள் 5 கோடியே 3 லட்சம்
வெற்றி பெற்ற ஜார்ஜ் புஷ் பெற்ற வாக்குகள் 4 கோடியே 98 இலட்சம்

அது எப்படி? 
அதுதான் அங்கே உள்ள தேர்தல் நடைமுறை.

விளக்குகிறேன் 
கற்பனை செய்து கொள்ளுங்கள் 
நீங்களும் நானும் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் எனக்குக் கிடைத்த வாக்குகள் 2 கோடி 
உங்களுக்குக் கிடைத்த வாக்குகள் 1.50 கோடி என்றால்

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளும் எனக்குத்தான்.
அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் நீங்கள் என்னை விட 100 வாக்குகள் கூடுதலாகப் பெற்றாலும் அங்கே உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளும் உங்களுக்குத்தான்.

அப்படியானால் மக்கள் வாக்குகள் எனக்குக் கூடுதலாகக் கிடைத்தாலும் நாடாளுமன்றத்தில் என்னை விட இரண்டு மடங்கு இடங்கள் உங்களுக்குக் கிடைத்து விடும்.

நீங்கள் வெற்றி பெற்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகி விடுவீர்கள்.

உடனே கனவில் மிதந்து விடாதீர்கள். சும்மா கற்பனைதான்.

அன்றைக்கு அமெரிக்காவில் என்ன நடந்தது தெரியுமா?

அல் கோருக்கு 269 இடங்கள் கிடைத்து விட்டன. 
வெற்றி பெறுவதற்கு இன்னும் இரண்டு இடங்கள்தான் வேண்டும்.

அப்போது ஜார்ஜ் புஷ்சுக்கு 246 இடங்கள்தான் கிடைத்து இருந்தன.
கடைசியாக புளோரிடா மாநிலத்தில் மட்டும் வாக்குகளை எண்ண வேண்டும். 
அங்கே வாக்குச் சீட்டு முறைதான்.
அந்த மாநிலத்தில் 25 தொகுதிகள். 
அங்கே 
ஜாரஜ் புஷ்சுக்கு 153 வாக்குகள்தான் கூடுதலாகக் கிடைத்தன. 
வாக்கு வேறுபாடு மிகக் குறைவாக இருந்தால் அந்த மாநில ஆளுநர்தான் முடிவை அறிவிக்க வேண்டும்.

ஆளுநர் என்ன செய்தார் தெரியுமா?

புஷ் வெற்றி பெற்றதாக அறிவித்தார்..

246+25= 271 புஷ் வெற்றி பெற்று விட்டார்.

அந்த மாநில ஆளுநர் யார் தெரியுமா? 
அதே ஜார்ஜ் புஷ்சுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையான ஜெப் புஷ்.

இதை எதிர்த்து அல் கோர் நீதிமன்றம் சென்று இருக்கலாம். இந்த முடிவை அறிவிப்பதற்கே பல நாள்கள் இழுபறி ஆயிற்று. 
அல் கோர் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தார்.

அப்படித்தான் இப்போதும் ஹில்லாரிக்கு மக்கள் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்து இருந்தாலும் அவர் தோல்வி அடைந்து இருக்கின்றார்.


அருணகிரி
வரலாற்றுப் பதிவாளர்


Post a Comment

Powered by Blogger.