Halloween party ideas 2015
.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்க செயற்பாட்டாளர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வேண்டுகோள்....

தங்களது 54ஆவது பிறந்த நாளில் தங்களை வாழ்த்தி மகிழும் கோடிக்கணக்கான தமிழர்களில் ஒருவனான

கரூர் தமிழ் இராஜேந்திரன் சமர்ப்பிக்கும் அன்பு வேண்டுகோள்...

2001ஆம் ஆண்டு கரூர் நகரில் நான் முன்னின்று நடத்திய ஹிந்துத்துவ எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்த் தேசிய பேரியக்க பெ.மணியரசன், கம்யூனிஸ்ட்  திருப்பூர் சுப்பராயன் , ஆகியோருடன் தங்களை கரூர் வரவழைத்து உரையாற்றச் செய்து மகிழ்ந்தவன் என்ற முறையிலும்,

2002 ஆம் ஆண்டு கரூரில் எனது முக்கிய பங்களிப்புடன் நடைபெற்ற
முதலாவது உலகத் தமிழ் வழிபாட்டு மாநாட்டில்

மதுரை, தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், வடலூர், கோவை பேரூர், பழனி உள்ளிட்ட ஆதீனகர்த்தர்கள் உடன் தங்களை மேடை ஏற்றி , அவர்களால் உங்களுக்கு பொன்னாடை அணிவிக்கவைத்து, சரி சமமாக மேடையில் அமரவைத்து கண்டு மகிழ்ந்தவன் என்ற முறையிலும்,

தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  தெரிவிப்பதுடன்

பிறந்த நாள் வேண்டுகோளாக நான் தங்களை கேட்பது,

தங்கள் இயக்கத்து உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்துள்ள மக்கள் நல கூட்டணி தொண்டர்கள், மற்றும் பொதுமக்களிடம்

அவரவர் வீடுகளில் பிறக்கும் குழந்தைகள் யாவருக்கும் தமிழ்ப்பெயர் மட்டுமே சூட்டவேண்டும் என வலியுறுத்த தங்களை அன்புடன் வேண்டுகிறேன்...

எனது மகன் பெயர்

" அன்புத்தேன் "

என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....

என் மருமகள் " அன்பரசி "

எனது மைத்துனர்கள் பெயர்கள்

இராச ராச சோழன்,

பாண்டியன் நெடுஞ்செழியன்,

சேரன் செங்குட்டுவன்

பாரி வள்ளல்

ஆகும்.

உங்கள் நண்பனான

எனது கோரிக்கையை ஏற்று செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன்....

வாழ்க ....வளர்க....

Post a Comment

Powered by Blogger.