Halloween party ideas 2015
.

பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள்-

பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறோம் என உலகுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் இதுநாள் வரை தெரியாமல் போனது ஏனோ?
மட்டுமின்றி, பர்மாவின் புகழ் உலகமெங்கும் கோடிகட்டி பறந்த காலமும் இருந்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன், உலக சமாதானமும் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் ஒங்கவேண்டும் என்பதற்காக ஐம்பெரும் தலைவர்கள் செயலாற்றினார். இந்திய உபகண்டத்தின் பண்டித நேரு, சீனத்து சூயேன்லாய் இவர்களுக்கு இணையாகப் பணியாற்றிய பர்மிய நாட்டு தலைவரும் ஒருவர். ஆசிய ஆபிரிக்க மாநாடு பாண்டாங் மாநாடு என 20 ஆம் நுற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்த வியக்கத்தக்க உலக சாமாதான செயல்பாடுகளாகும். 1975 இல் இயற்கை அடைந்த ஏந்தல் ஊத்தான் எனும் பெருமகன் உலக நடுகல் மன்றத்தின் பொதுச் செயலாளாராக இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் தன்னுடைய அறிவாற்றலைக் கொண்டு போரிலிருந்து உலகை மீட்டவர்களை குறிப்பிடத்தக்கவர் இவர் என்பதை உலகம் அறியும். இரண்டாம் உலக போரின் கொடூரம் ஆசியாவை உலுக்கி எடுத்ததை யாரும் இன்று வரை மறந்திருக்க முடியாது
  நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லிக் கொள்வதில் பயனில்லை என்பது எங்களுக்கு படுகிறது. அதன் வழியில் 50 ஆண்டுகள் பின்தள்ளப்பட்ட இடத்தில் தள்ளாடித் தள்ளாடி எங்கள் வலுவுடன் எழுந்து நிற்கின்றோம் முன்னேற்றம் காணவேண்டும் என்ற  உணர்வோடு கால்நூற்றண்டுகளுக்கு மேலாக பர்மிய நாட்டு தமிழர்கள் புத்துணர்வுபெற வேண்டும் என்பதற்காக கடும் நெருக்கடிக்கிடையிலும் கட்சி பேதங்கள் காட்டாது சமய வெறி கொள்ளாது தன்மான உணர்வுடன் சுயமரியாதை வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக முற்போக்காளர்கள் அணிதிரண்டு செயலற்றியதன் விளைவால் இன்று பல பிரிவில் தமிழுணர்வும் தன்மான எழுச்சியும் பெற்று வருவது குறிப்பிடதக்கதாக இருந்தாலும் முழு மன நிறைவு கொள்ள இயலாது தவிப்புடன் இருப்பதை காண முடிகிறது

        இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது முற்போக்கு அணியினரின் நம்பிக்கை சுடராகும். 1962 ஆம் ஆண்டிற்குப்பின் பர்மா தமிழர் வெளி உலகில் இருந்து ஒதுங்கி விட்டனர் எனபத? ஒதுக்கி வைக்கபட்டு விட்டனர் என்பதா? எதுவும் விளங்க வில்லை இருப்பினும் உலகெங்கும் பறந்து வாழும் தமிழர்களுக்கு இணையாக இருக்க முடியாது போனாலும் பர்மாவில் தமிழர்கள் தமிழர்களாகவே கலை கலாச்சாரம் பண்பாடு குன்றாது வாழ்ந்து வருகின்றனர் பர்ம தமிழர்கள் கலை கலாச்சாரம் பண்பாடுகள் மாறாமல் வாழ்த்து வருகிறார்கள் என்று உலகமும் தமிழ் சமூகமும் அறிய வேண்டும். உலக மயமாக்கல் மத்தியிலும் இந்த சமுதாய சீரழிவுகள் மத்தியிலும் பர்மா தமிழர்கள் தமிழர்களாகவே வாழ்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை
        இந்திய விடுதலைக்கு நேதாஜியின் தலைமையில் ஆயுதம்தாங்கிய போராட்டத்தில் உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈந்து விடுதலைப் போராட்டத்தில் குழுப் பங்கு கொண்ட தியாகத்தின் சிகரங்களாக தமிழர்கள் இருந்தபடியால்தான் எனக்கு மறுபிறவி இருக்குமானால் அப் பிறவியில் நான் ஒரு தமிழனாக பிறக்கவேண்டுமென நேதாஜி கூறினார் என்றால் தமிழரின் விடுதலை வேட்கையும் நாட்டு பற்றும இனப்பாசம் இவைகளையும் குறைத்து மதிப்பீடு செய்து விட முடியாது இப்படி நேரு உரையில் குறி இருப்பதுடன் ஈழத்து இனப்படுகொலை நடைபெற்றதையும்
       தமிழ் உள்ளத்தோடு தொலை நோக்கிறோம் பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறோம் என உலகுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் இதுநாள் வரை தெரியாமல் போனது ஏனோ? மொரீசியஸ்,பிஜிதீவுகள், ஆபிரிக்க, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா(தமிழ் நாடு) என தமிழர்கள்
     தத்தம் சிறப்புகளை அடையாளப்படுத்தும் பொழுது எங்களுக்கு (பர்மா தமிழர்கள்) சின்ன இடம் கூட கிடைக்க வில்லையே என்பது எங்கள் மனதை வாட்டி எடுக்கிறது.

      தமிழைப் பேசி தமிழை வளர்ப்போம் என்று பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம் என முழங்கி வருவதுடன் கோவில்களிலும் தமிழ் போதிகப் பட முயற்சிகள் மேற்கொள்கிறோம் இத்தனை காரியங்கள் தொடர்ந்து செய்தாலும் எங்களை அடையாளம் காணப்படாது போய்கொண்டு இருப்பது ஊமைகள் பேசுவதாக பார்கிறார்கள் என்றோ தோன்றுகிறது ஊமைகள் பேசுவது ஒருநாள் உலகுக்கு கேட்கும் என்பதே உறுதி..!!!
நன்றி http://malar2009.blogspot.com/2010/06/myanmar.html
மியான்மார்-தமிழ்-சங்கம் https://www.facebook.com/pages/Myanmar-Tamil-Sangam-மியான்மார்-தமிழ்-சங்கம்-/143156799041739
https://www.facebook.com/media/set/?set=a.10150185852112473.307876.141482842472
பர்மா தமிழர்கள் (மியான்மர் தமிழர்கள்)
ஆயிரம் வருடத்துக்கும் முற்பட்டது பர்மாவுக்கும்  தமிழ்நாட்டுக்கும்
உள்ள  உறவு. ராஜராஜ சோழனின் புதல்வர் ராஜேந்திர சோழனின்
காலத்தில் பர்மா சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.
பர்மாவில் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் இரண்டு
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அது அந்தக்காலத்து நிலை.  பின்னர் ஏகப்பட்ட படையெடுப்புகள்.
சீனத்தின் ஆதிக்கத்திலும், மங்கோலியரின் பிடியிலும்  சிக்கி
கடைசியாக ஆங்கிலேயரின் ஆட்சியில் “பிரிட்டிஷ் இந்தியா”
வின்  ஒரு பகுதி ஆயிற்று.
இரண்டாம் உலகப்போரின்போது  ஜப்பானியருக்கும், ஆங்கிலேயருக்கும்
இடைப்பட்ட  முக்கிய போர்க்களமாக ஆனது பர்மா.
போருக்குப்பின்  பிரிட்டிஷ் அரசிடமிருந்து
விடுதலை பெற்ற பர்மா,  நீண்ட காலமாக மாறி மாறி
ராணுவ ஆட்சியின் கீழேயே உள்ளது.மியான்மர்  எனப் பெயர்
மாற்றமும் செய்துகொண்டது பர்மா.
சுமார் 5 கோடி மக்கள் தொகை கொண்ட  மியான்மரில்
10 லட்சம் இந்திய  வம்சாவளியினர் உள்ளனர்.இவர்களில்
ஏறத்தாழ  70 சதவீதம் பேர்  தமிழர்கள். இவர்கள்  அனைவரும்
பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ் நாட்டிலிருந்து விவசாய வேலைக்காகவும்,
வியாபாரம் செய்யவும்  சென்றவர்கள்.
உள்ளூர் மக்களாலும்,  அரசை ஆட்சி செய்பவர்களாலும்,
வெறுத்து அடக்கி ஆளப்படுகிறார்கள் இங்குள்ள தமிழ் மக்கள்.
மிகப்பெரிய எண்ணிக்கையிலான தமிழர்கள்  1960 களில்
தமிழ் நாட்டிற்கே  திரும்ப வந்து விட்டனர்.( விரட்டி
அடிக்கப்பட்டனர் என்றும்  சொல்லலாம்). இன்று அங்கு மிச்சம்
இருப்பவர்கள்  கிட்டத்தட்ட  தமிழ் நாட்டின் தொடர்பின்றியே
இருக்கிறார்கள்.
மகிழ்ச்சி கொள்ளத்தக்கதாக இல்லை இவர்களின் நிலை.
பர்மா  நாட்டை நினைவுறுத்தும்  சில  காட்சிகள் -
பர்மா தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? 1963 ஆம் ஆண்டு."கப்பலை விடுங்கள். கண்ணீரைத் துடையுங்கள்' என்று பர்மா தூதுவரகத்தின் முன்பு முழக்கமிட்டார்கள் பர்மா தமிழர்கள். அதற்குப் பிறகு கப்பல் விட்டார்கள். ச
பர்மா தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்?
1963 ஆம் ஆண்டு."கப்பலை விடுங்கள். கண்ணீரைத் துடையுங்கள்' என்று பர்மா தூதுவரகத்தின் முன்பு முழக்கமிட்டார்கள் பர்மா தமிழர்கள்.
அதற்குப் பிறகு கப்பல் விட்டார்கள். சென்னைக்கு வந்திறங்கினார்கள் பர்மா தமிழர்கள்.
சொந்தத் தொழிலும் ஊரில் பூர்வீக வீடும் உள்ள சிலர் தப்பித்தார்கள். சொந்த ஊரில் சேர்ந்து கொண்டனர். பல தலைமுறைகளாக அங்கேயே பிறந்து வாழ்ந்து வந்தவர்களுக்குப் பல்வேறு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.
இன்று சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பர்மா தமிழர்கள் வாழ்கின்றனர். சென்னை வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, எண்ணூர், செங்குன்றம் பகுதிகளில் அதிகமாக வாழ்கிறார்கள். வணிகத்தில் ஈடுபட்டவர்களுக்காக சென்னைத் துறைமுகத்தையொட்டிய பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டு, இன்று "பர்மா பஜார் ' எனப் பிரபலமாக இயங்குகிறது.
ஆனால் பர்மாவில் இருந்து திரும்பியவர்கள் அங்கு வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பெருமூச்சுவிடாமல் இல்லை.
இவர்களின்- இவர்களுடைய முன்னோர்களின் - சொந்த ஊர் எது? பர்மாவிலிருந்து வந்து சென்னையில் தங்கியது ஏன்? எப்படி?
84 வயதாகும் ரெங்கசாமி ஒரு பர்மா தமிழர். இளைஞராக இருந்தபோது நேதாஜியின் "இந்திய சுதந்திர லீக்' என்ற அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டவர். இப்போது சென்னை அண்ணாநகரில் "நேதாஜி வணிக வளாகத்தை' ஏற்படுத்தி அதன் தலைவராக இருக்கிறார். வீடு மகாகவி பாரதி நகரில் இருக்கிறது.
""நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பர்மாவில் ரங்கூனுக்கு அருகில் உள்ள சிறிய ஊரில்தான். என்னுடைய அப்பாவுக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டைக்கு அருகில் உள்ள திருவாடனை. அப்பா பர்மாவில் வியாபாரம் செய்து வந்தார். என்னுடைய 16 வயதில் நேதாஜியின் இந்திய சுதந்திர லீக் அமைப்பில் சேர்ந்து செயல்பட்டேன். நேதாஜி என்றவுடனேயே அவருடைய இந்திய தேசியப் படைதான் எல்லாருடைய நினைவுக்கும் வரும். நான் இருந்தது அவருடைய அரசியல் இயக்கம். அந்த இயக்கத்துக்காக பிரசாரம் செய்வது, நிதி வசூல் செய்வது எனத் தீவிரமாகச் செயல்பட்டேன்.
அதன் பிறகு திரைப்பட விநியோகத் தொழில் செய்து வந்தேன்.
1950 ஆம் ஆண்டுகளில் நிறைய இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பர்மாவின் அரசுப் பணிகளில் அதிகம் இருந்தார்கள். பர்மா ரயில்வே, நீர்வழிப் போக்குவரத்துத்துறை, சுங்கத்துறை, தபால், தந்தி, பொதுப் பணித்துறை போன்றவற்றில் அதிக அளவில் வேலை செய்தார்கள். இதற்குக் காரணம் இந்தியாவும், பர்மாவும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளாக இருந்தன. அதனால் தமிழகப் பகுதிகளில் வேலை செய்த அரசு ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்து ரங்கூன், மாத்தளை போன்ற பகுதிகளுக்கு அனுப்பினார்கள். பர்மா சுதந்திரம் பெறப் போராடியபோதே, பர்மியர் அல்லாதவர்கள் மீது வெறுப்பு ஊட்டப்பட்டது. அதன் பின்பு தமிழர்களை நீக்கிவிட்டு, பர்மாவைச் சேர்ந்தவர்களை அந்த இடங்களில் நிரப்பினார்கள். 1962 - ஆம் ஆண்டுக்குப் பிறகு பர்மாவில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. ஜெனரல் நி வின் என்பவரின் ராணுவ ஆட்சி அப்போது நடந்தது.
இந்திய குடிமகன்கள் அங்கே தொழில் செய்யக் கூடாது என்றார்கள். சிறுவியாபாரம் செய்யக் கூட அனுமதிக்கவில்லை. அதற்கு முன்பு தமிழர்களுக்குக் கிடைத்து வந்த சலுகைகள் எல்லாம் நிறுத்தப்பட்டன. பர்மிய மொழியில் மட்டுமே கல்வி என்று கொண்டு வந்தார்கள். இந்திய குடிமகன்களுக்கு என்று தனி வரியெல்லாம் விதித்தார்கள். சொத்துகளைப் பறிமுதல் செய்தார்கள். அரசுடைமை ஆக்கினார்கள். ஆயிரம் ரூபாய், ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று அறிவித்தார்கள். அவர்கள் அங்கே சம்பாதித்ததை இந்தியாவுக்கு எடுத்து வர தடை செய்தார்கள். பெண்களின் கழுத்தில் தொங்கும் தாலியைக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கே தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே பர்மா தமிழர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள்.
திரும்பி வந்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்குப் போகலாம் என்று நினைத்தார்கள். ஆனால் சொந்த ஊரிலுள்ள உறவினர்களுடனான தொடர்புகள் விட்டுப் போயிருந்தன. அதுமட்டுமல்ல, அவர்களுடைய முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துகளை ஊரிலிருந்த உறவினர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். பர்மாவிலிருந்து வந்தவர்களை வரவேற்றால் எங்கே சொத்துக்களில் பங்கு கேட்டு விடுவார்களோ என்று ஊரிலிருந்தவர்கள் பயந்தார்கள்.
இதனால் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர்கள் சொந்த ஊரின்றி, கால் வைக்க இடமின்றி நின்றார்கள்.
அப்போது அரசாங்கம் பர்மா தமிழர்கள் வாழ்வதற்கான பல சலுகைகளைச் செய்து தந்தது. கும்மிடிப்பூண்டி, சோழவரம், எண்ணூர், செங்குன்றம் பகுதிகளில் பர்மா தமிழர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டன. சென்னை பீச் ரயில்வே நிலையத்துக்கு அருகில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து பர்மா தமிழர்கள் வியாபாரம் செய்ய அண்ணாதுரை காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. கப்பலில் வரக் கூடிய பொருட்களை வாங்கி, பர்மா தமிழர்கள் விற்றார்கள். இப்போதுள்ள பர்மா பஜார் அப்படித்தான் உருவானது.
நான் கொத்தவால் சாவடியில் "சிவசக்தி தேங்காய் மண்டி' என்ற பெயரில் கடை வைத்து நடத்தினேன். எனக்குக் கொஞ்சம் இரக்க சுபாவம். நிறைய கடன் கொடுத்ததால் நஷ்டம் ஏற்பட்டது. கடையை மூடிவிட்டேன்.
அதுவுமில்லாமல் எனக்குப் பொதுப் பணிகளில் ஆர்வம் அதிகம். எனவே "பர்மா தமிழர்கள் நல உரிமைச் சங்கம்' என்ற சங்கத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்'' என்கிறார்.
ஐ.வியாகுலம் ஒரு பர்மா தமிழர். சென்னை திருவொற்றியூரில் உள்ள என்ஃபீல்டு தொழிற்சாலையில் வேலை செய்கிறார். வீடு மகாகவி பாரதி நகரில் இருக்கிறது. அவரிடம் பேசினோம்.
""எங்களுடைய குடும்பம் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தபோது தஞ்சாவூர் முகாமில் தங்க வைக்கப்பட்டோம். ஒரு மாதம் அந்த முகாமில் இருந்தோம். எத்தனை நாள் முகாமில் இருக்க முடியும்? சென்னைக்கு வந்தோம்.
பிழைக்க வழியில்லாமல் திணறிக் கொண்டிருந்தோம்.
இப்போது பக்தவத்சலம் நகர், சாஸ்திரி நகர் இருக்கும் இடங்களில் அப்போது ஒரு பெரிய ஏரி இருந்தது. வியாசர்பாடியில் அப்போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த மந்தொவானி என்ற கிறிஸ்தவப் பாதிரியார் இருந்தார். அவர்தான் ஏரியின் மேட்டுப் பகுதிகளில் வீடுகட்டச் சொல்லி, சாஸ்திரி நகர், பக்தவத்சலம் நகர் காலனிகளை உருவாக்கினார். பர்மா தமிழர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு நிறைய உதவிகள் செய்தார். இலவசக் கல்வி தரும் பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்தார். ஹாஸ்டலில் இலவச உணவுக்கும் ஏற்பாடு செய்தார். உணவு என்றால் பால், சிக்கன் எல்லாம் உள்ள உணவு. மத வேறுபாடு பார்க்காமல் எல்லா மதத்தைச் சேர்ந்த பர்மா தமிழர்களுக்கும் உதவி செய்தார். நிறையப் பேரை படிக்க வைத்தார். பர்மா தமிழர்களுக்கு வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கித் தந்தார்.
படித்த பர்மா தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தது அரசு. ஃபாதர் மந்தொவானியின் உதவியால் படித்த பல இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்தது. எனக்குக் கூட பொதுப்பணித்துறையில் ஜூனியர் அஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது. நான் அந்த வேலையை விட்டுவிட்டு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன்'' நன்றியுடன் சொல்கிறார் வியாகுலம்.
""ஃபாதர் மந்தொவானிக்குப் பிறகு சலூஸ் என்ற ஃபாதர் வந்தார். அவரும் நிறைய உதவிகளைப் பர்மா தமிழர்களுக்குச் செய்தார்.
1965 முதல் 1975 வரை அரசின் சலுகைகள் எங்களுக்குக் கிடைத்து வந்தன. ஆனால் இப்போது இல்லை.
இங்குள்ள பர்மா தமிழர்களுக்கு உறவினர்கள் பர்மாவில் இருந்தாலும் பெண் கொடுப்பது, பெண் எடுப்பது இப்போது அநேகமாக இல்லை. காரணம், இவ்வாறு திருமணம் செய்வதில் நிறையச் சட்டச் சிக்கல்கள் உள்ளன.
1973 வரை பர்மாவிலிருந்து தமிழர்கள் இங்கே வந்தார்கள். அதற்குப் பின்பு யாரும் வரவில்லை. பர்மாவிலேயே தங்கிவிட்டார்கள். பர்மாவிலுள்ள பெரும்பாலான தமிழர்கள் விவசாயம்தான் செய்கிறார்கள். இங்குள்ள பர்மா தமிழர்கள், பர்மா பஜாரில் வியாபாரம் செய்கிறார்கள். என்னைப் போல தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். அலுவலங்கங்களில் வேலை செய்கிறார்கள்'' என்கிறார் வியாகுலம்.
""பர்மா பஜாரில் முன்பைப் போல் இப்போது வியாபாரம் பிரமாதமாக இல்லை'' என்கிறார் பி.மார்க்கஸ் வருத்தத்துடன். அவர் பர்மா பஜார் வியாபாரி.
""முதலில் வெளிநாட்டுப் பொருட்களை வாங்க வேண்டுமென்றால் பர்மா பஜாருக்குத்தான் வர வேண்டும். ஆனால் இப்போது எல்லாக் கடைகளிலும் வெளிநாட்டுப் பொருட்கள் கிடைக்கின்றன. அதனால் பர்மா பஜாரில் கடை வைத்திருக்கும் தமிழர்களின் பிழைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.
நான் பர்மா பஜாரில் 28 வருடங்களாக வியாபாரம் செய்து வருகிறேன். முதலில் எல்லாம் கப்பலில் இருந்து வருகிற பொருட்களை விற்று வந்தோம். சிங்கப்பூரிலிருந்து வருபவர்கள் எங்களிடம் தரும் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தோம். அப்போதும் சரி, இப்போதும் சரி நிறைய எலக்ட்ரானிக் பொருட்கள்தாம் பர்மா பஜாரில் அதிகமாக விற்பனையாகும். ஹோம் தியேட்டர், கீ போர்டு, கால்குலேட்டர், வீடியோ புரஜெக்டர், கேமரா போன்றவைதாம் அதிகமாக விற்பனையாகும். இப்போது எல்சிடி டிவி அதிக அளவில் விற்பனையாகிறது.
வியாபாரம் குறைந்ததற்கு இதுமட்டும் காரணமல்ல. பர்மா பஜாரில் உள்ள ஒரு சில புரோக்கர்கள் செய்யும் தவறுகளால் எங்களுடைய வியாபாரத்தின் நம்பகத்தன்மையில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் வேறு கடைகளில் பொருட்களை அதிக அளவில் வாங்குகிறார்கள்.
பர்மாவிலிருந்து நாங்கள் இங்கு வந்த புதிதில் அரசாங்கம் எங்களுக்குப் பல உதவிகள் செய்து தந்தது. இப்போது எங்களை யாரும் கவனிப்பதில்லை. பத்து வருடங்களுக்கு முந்தைய வியாபாரம் இப்போது இல்லை. இப்போது பர்மா ஜனங்கள் கஷ்டப்படும் நிலைக்கு வந்துவிட்டார்கள்'' - கவலையுடன் சொல்கிறார் மார்க்கஸ்.
வியாசர்பாடியில் ஒரு முனீஸ்வரர் கோவிலைப் பார்த்தோம். பெயர் வித்தியாசமாக இருந்தது. பீலிக்கான் முனிஸ்வரர் ஆலயம். அதென்ன பீலிக்கான்? மிகுந்த பக்தியுடன் காணப்பட்ட ஜோதிடர் கே.கே.சுப்பையாவைக் கேட்டோம்.
""பர்மாவில் வாழும் தமிழர்கள் பீலிக்கான் என்ற இடத்தில் முனீஸ்வரர் ஆலயத்தை ஏற்படுத்தி வழிபாடு செய்கிறார்கள். பர்மா தமிழர்கள் இங்கே வந்ததும் அதே பெயரில் கோயிலைக் கட்டிவிட்டார்கள். இங்கு மட்டுமல்ல, எண்ணூருக்கு அருகே உள்ள அன்னை சிவகாமி நகரிலும் இந்த முனீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து பர்மாவுக்குச் சென்ற தமிழர்கள் முனீஸ்வரனையும் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். அந்த முனீஸ்வரனைப் பர்மா தமிழர்கள் இப்போது தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
பர்மாவில் முனீஸ்வரர் வழிபாடு மட்டுமல்ல, முருகன் வழிபாடும் உள்ளது. சக்தி அங்காள பரமேஸ்வரி வழிபாடும் உள்ளது. இங்குள்ள பர்மா தமிழர்களும் அதே வழிபாட்டு முறையைப் பின்பற்றுகிறார்கள்.
வழிபாட்டில் மட்டுமல்ல, உணவு உண்பதிலும்கூட பர்மா உணவு வகைகள் சிலவற்றை விரும்பி உண்கின்றனர். நீங்கள் மகாகவி பாரதி நகர் பகுதியில் மாலை நேரங்களில் பர்மாவின் மொஹிங்காவை வாங்கிச் சுவைக்க முடியும். மொஹிங்கா என்பது நூடுல்ஸ் உணவு வகை. இதை ரோட்டுக் கடையில் கூட விற்பனை செய்கிறார்கள். மொஹிங்கோவை வீட்டில் செய்ய முடியாத பர்மா தமிழர்கள், கடையில் வாங்கி ஆர்வத்துடன் சுவைப்பதைக் காண முடியும். சிலர் வீட்டிலும் செய்வார்கள். இங்கு மட்டுமல்ல, பர்மா பஜார் பகுதியில் செகண்ட் லைன் பீச்சில் தள்ளுவண்டியில் பர்மா உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்க முடியும்.
பர்மா தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மறக்க முடியாதது. பெரியவர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை அதிகம். இப்போது கூட இங்கிருந்து பர்மாவுக்குச் செல்பவர்கள் ஒரு மாதம் அங்கே தங்கினாலும் ஒரு காசு செலவு இல்லாமல் இருக்க முடியும். தினம்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் விருந்துக்கு அழைப்பார்கள். தங்கச் சொல்வார்கள். மிகுந்த அன்போடு கவனித்துக் கொள்வார்கள்.
அதனால் பர்மாவிலிருந்து தமிழர்கள் யாராவது இங்கு வந்தால், இங்குள்ள பர்மா தமிழர்கள் விழுந்து விழுந்து அவர்களைக் கவனிப்பார்கள்.
வயதில் மூத்தவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள், பர்மாவில் உள்ள தமிழர்கள். இங்கே அந்தப் பண்பு, சற்றுக் குறைந்ததுபோல இருக்கிறது'' - குரலில் சற்று வருத்தம் தொனிக்கிறது.
பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள்-
பகிர்ந்தளிக்க :

20
தொடர்புடைய செய்திகள்

சமஸ்டிக்கு ஒப்புக் கொண்டு ஒரு மண் சட்டி கூட தமிழருக்கு கொடுக்காத சிங்கள இனம்,...
ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள்.
சிங்கள... [ மேலும் ]
[ 2016-08-02 11:46:08 ]
புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்,...
தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE.Zurich.Switzerland-இன்று ஈழத்தமிழரின் பூர்வீகமான வாழிடங்களில் சிங்களமயமாக்கல் நடைபெறுகின்றது. இதே போன்றதொரு கலாச்சார... [ மேலும் ]
[ 2016-08-02 11:36:11 ]
சதிகாரரின் சூழ்ச்சியை வென்ற தேசியத் தலைவன் பிரபாகரன்,...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையான விசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த... [ மேலும் ]
[ 2016-07-18 15:45:23 ]
உலகின் மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்,...
தொகுப்பு .மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE-Zurich-Switzerland,1948 திசெம்பர் மாதம் 10ம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனத்தை ஏற்றுச்... [ மேலும் ]
[ 2016-07-05 21:27:55 ]
பாடசாலை இடைவிலகலும் இலங்கையில் சிறுவர் உரிமையும்,...
தொகுப்பு மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE-Zurich.Switzerland.. இயல்பான சுதந்திரத்தோடு வாழவும், தான் இசைந்து வாழும் சமுதாயத்திற்கான கடமைகளை முழுமையாகச் செய்ய மனிதன்... [ மேலும் ]
[ 2016-07-05 21:08:09 ]
அரசியல்
[ 2013-11-08 15:52:20 ]
சஷ்டி விரதம் இருந்தால் சத்புத்திர யோகம் உண்டாகும்,...
தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB)Mayuraagoldsmith Swtzerland,சஷ்டி விரதம் இருந்தால் சத்புத்திர யோகம் உண்டாகும்.கந்த சஷ்டி விரத நிர்ணயம்
    கந்த சஷ்டி விரத... [ மேலும் ]
உலக சட்டம்
[ 2016-08-11 01:35:46 ]
ஐ.நா பாதுகாப்புச் சபைப் பிரேரணைகள் 1325உம் 1820உம்,...
தொகுப்பு.மார்கண்டு தேவாரஜா(LLB)MP.TGTE.Zurich Switzerland. ஐ.நா பாதுகாப்புச் சபை பற்றிய அறிமுகம்
சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதை முக்கிய... [ மேலும் ]
[ 2013-09-06 20:35:55 ]
சர்வதேச சட்டமும் சட்டமூலங்களும்,...
தொகுப்பு.மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE-Zurich-Switzerland.மனித சமுதாயத்தில் சட்டங்களும் நியதிகளும் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றன.  சமதாயக்... [ மேலும் ]
[ 2013-09-06 20:16:57 ]
சட்டம் என்றால் என்ன,...
தொகுப்பு.மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE.Zurich.Switzerland.சட்டம்,,ஓவ்வொரு அரசாங்கமும் நிர்வாகம் செய்வதற்காகச் சில விதிகளையும் ஒழுங்குகளையும் உருவாக்குகின்றன.... [ மேலும் ]
வினோத நிகழ்வுகள்
[ 2016-08-10 16:19:04 ]
64 நாட்கள் தொடர்ந்து நித்திரை கொள்ளும் விசித்திரப்பெண்,...
இருபது வயதே நிரம்பிய அழகிய பெண் நிக்கோல். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது.  முதல் முறையாக ... [ மேலும் ]
[ 2016-08-10 15:54:24 ]
உலகின் மிகவும் சிறிய குட்டி நாடு,...
உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ. கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் உள்ள வாட்டிகனுக்கு அடுத்து உலகில் உள்ள குட்டி நாடு இது.
மொத்தமே 499.2... [ மேலும் ]
[ 2016-08-10 15:52:19 ]
900 கோயில்கள் உள்ள உலகின் ஒரே அதிசய மலை,...
ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே பிராயச்சித்தம் அளிக்கும் புண்ணியத் தலமாக பாலிதானா என்ற புனித ஸ்தலம் கருதப்படுகிறது.... [ மேலும் ]
[ 2016-08-03 00:09:11 ]
ஆரம்பகாலத்தில் வினோதமாக இருந்த மருத்துவ முறைகள்,...
எல்லா துறைகளின் ஆரம்பக் காலகட்ட வடிவமைப்புகளோடு ஒப்பிட்டு பார்க்கையில், இப்போது மிகவும் வினோதமாகத் தான் தெரியும். என்ன செய்வது அறிவியலும்,... [ மேலும் ]
மங்கையர் பகுதி
[ 2016-08-10 18:16:06 ]
கூந்தல் அலங்காரமும் பராமரிப்பும்,...
பெண்களின் கூந்தலைப் பற்றி காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் அதிகமாக பேசப்பெறுகின்றன. நீண்ட தலைமுடியையே கூந்தல் என அழைக்கின்றோம். நீண்ட... [ மேலும் ]
[ 2016-08-10 18:00:53 ]
கண்கள் - பராமரிப்பும் அலங்காரமும்,...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகிற்கு மெருகூட்டுவதும், கவர்ச்சியைக் கொடுப்பதும் கண்களே. கண்களின் பார்வையில் பல... [ மேலும் ]
[ 2015-04-15 18:03:11 ]
உங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேச வேண்டுமா,...
குழந்தைகள் பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில் அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள்... [ மேலும் ]
[ 2015-04-15 17:59:33 ]
பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதால் ஏற்படும் விளைவுகள்,...
பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதால் ஏற்படும் விளைவுகள்! மகப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவாகும். ஆனால் போதிய குழந்தைகளை... [ மேலும் ]
மரண அறித்தல்
மரண அறிவித்தல்,
பெ திரு நல்லரட்ணம் சிவராசா
பி அவுஸ்திரேலியா Melbourne
வா Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia.
தி மட்டக்களப்பு கோட்டைமுனை
மரண அறிவித்தல்,
பெ திரு நாகமணி பூபாலசிங்கம்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- நீர்பாசனத் திணைக்களம் V.C.O)
பி மட்டக்களப்பு சின்ன உப்போடையை வசிப்பிடமாகவும்
வா திரு நாகமணி பூபாலசிங்கம்
தி யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும்,
மரண அறிவித்தல்,
பெ திரு அரியரட்னம் அரியதவசிங்கம்
பி யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும்,
வா சுவிஸ் Olten ஐ வசிப்பிடமாகவும்,
தி மறைவு : 17 மே 2015,
மரண அறிவித்தல்
பெ திரு ஆதிநாயகம் நமசிவாயம்
பி மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும்,
வா களுவாஞ்சிக்குடியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்
தி உதிர்வு : 25 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெ திரு கந்தையா ஜீவரெத்தினம்
பி மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும்
வா மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்
தி இறப்பு : 1 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெ திரு பூபாலப்பிள்ளை நவரெத்தினம்
பி மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும்,
வா முனைத்தீவை வசிப்பிடமாகவும்
தி கண்நெகிழ : 11 மார்ச் 2015
மரண அறிவித்தல்
பெ திருமதி சந்திரசேகரம் மனோன்மணி
பி மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும்,
வா சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும்
தி இறப்பு : 3 மார்ச் 2015
மரண அறிவித்தல்
பெ திரு ராமசாமிபிள்ளை பெருமாள்பிள்ளை
பி இந்தியா திருச்சி இலுப்பையூரைப் பிறப்பிடமாகவும்,
வா புசல்லாவையை வசிப்பிடமாகவும்
தி இறப்பு : 20 ஓகஸ்ட் 2013
மரண அறிவித்தல்
பெ திரு வெஸ்லி நடேந்திரா கிருஷ்ணபிள்ளை
பி மட்டக்களப்பு பெரிய கல்லாறையைப் பிறப்பிடமாகவும்,
வா கனடா Toronto வை வதிவிடமாகவும்
தி ஆண்டவன் அடியில் : 16 டிசெம்பர் 2014
மரண அறிவித்தல்,
பெ திரு கதிர்காமத்தம்பி சிவானந்தராஜா (ஆனந்தன்)
பி மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைப் பிறப்பிடமாகவும்,
வா பிரான்ஸ் Paris, பிரித்தானியா Grantham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்
தி விண்ணில் : 18 ஒக்ரோபர் 2014
முகப்பு | செய்திகள் | சினிமா | விளையாட்டு | இலக்கியம் | ஆன்மீகம் | தொழிநுட்பம் | வாழ்த்துகள் | மங்கையர் உலகம் | மரண அறிவித்தல்கள்
WORLDTAMILSWIN (c) 2013, All rights reserved.Worltamilswin.com. Developed by : Yellowwin Media

Post a Comment

Powered by Blogger.