Halloween party ideas 2015
.

[7/5, 7:09 AM] Tamil Raajendiran: தமிழ்பணியாளர் அறிமுகம்...

ஏராளமான பழந்தமிழ் நூல்களை இணையத்தில் தன் சொந்த செலவில் வலையேற்றி பாதுகாத்துவருபவர்,
தமிழம் பண்பலை வானொலி இயக்குநர்,
தமிழ்நூல்களை பாதுகாக்கும் பணிக்கு இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக திருமணம் செய்யாமல், தனது ஓய்வூதியம் முழுவதையும் நூல்களை படம் பிடித்து வலையேற்றும் கருவிகள் வாங்க மட்டும் பயன்படுத்திவரும் தன்னலமற்ற தமிழ்த் தியாகி

பொள்ளாச்சி நசன்....வாழ்க.....
[7/5, 7:09 AM] Tamil Raajendiran: அனைவருக்கும் வணக்கம்

உலகஅளவில் இயங்குகிற நூல்கள் பாதுகாப்புக் குழுவினரால் பல்வேறு தமிழ் நூல்கள் படவடிவக் கோப்புகளாகப் (PDF) பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் சங்ககாலத்திலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான நூல்கள் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டு விட்டன.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை வெளியாகி பாதுகாக்க விடுபட்டுள்ள நூல்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படங்களில் (jpeg format ) நான் வரிசைப்படுத்தியுள்ளேன்.

தமிழ் ஆர்வலர்கள், பல்கலைக்கழகங்கள், தமிழ்க்காப்புப் கழகங்கள், தமிழ் நூலகங்கள், பாதுகாக்கும் தனியார் மற்றும் அரசு அமைப்புகள் இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு தேடவும்.

ஒவ்வொரு நூலாக விடுபட்டவை அனைத்தையும் திரட்டிப் பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மறைந்த தமிழ் நூல்கள் பட்டியலில் இந்த நூல்களும் இடம் பெற்றுவிடும்.

எத்தனையோ தமிழ் நூல்களை நாம் ஓலைச்சுவடியிலிருந்து பாதுகாக்கத் தவறியதால் அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட இயலவில்லை.

தமிழில் வெளிவந்த நூல்களைப் பாதுகாப்பதுதான் உண்மையான தமிழ்ப் பாதுகாப்பு, வெளியான அனைத்து நூல்களிலும் ஒரு படியையாவது நாம் பாதுகாத்தால்தான் அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட முடியும்.

இழப்பது தெரியாமலேயே நாம் நிறைய இழந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொன்றாக நாம் மீட்டெடுப்போம். இது வெறும் செய்தி மட்டுமல்ல. தமிழின் வரலாற்றை எடுத்துக் காட்டுகிற அளவுகோல்.

இயங்குகிற நண்பர்கள் தங்கள் இயக்கத்தைக் குறிப்பிட்டால் அதை இணைத்துக் கொள்கிறேன்.

அன்புடன்
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை - தமிழம்.பண்பலை 9788552061

Post a Comment

Powered by Blogger.