Halloween party ideas 2015
.

இந்த நான்கு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள்
" பியூஸ்க்கு என்ன ஆச்சு?
எதற்க்காக கைது செய்பட்டுள்ளார்?
இப்போது சிறையில் எப்படி உள்ளார்?
இங்கே ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நானே வழக்கறிஞரை ஏற்பாடு செய்து ஹைகோர்ட்டில் ஜாமீன் பெற்றுத்தருகிறேன்..
அதற்க்கு உண்டான வழக்கு செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன்..
அதற்க்கு முன் கண்டன கூட்டம் ஏதாது சேலத்தில் நடந்தால் சொல்லுங்கள் எங்கள் அமைப்பும் கலந்துகொள்ள வழிவகை செய்கிறோம் என்று பல பேர் அவர்களது ஆதரவை தெரிவிரித்தனர்..

ஆகவே நாளை சேலத்தில் சந்திப்போம் நண்பர்களே..

பியூஸ் மானுஷ் பற்றிய காணொளியை பகிர்ந்த போது திண்டுக்கல் நண்பர் ஒருவர் இன்று
"தொன்னூறுறாயிரம் பேர் வீடியோவை பார்த்திருக்காங்க,
ஆனா எத்தனை கையெழுத்து பெட்டிஷன்ல போட்டு இருக்கா ங்கனு பாருங்க,
பேஸ்புக் என்பது வெறும்  லைக்கும், கமெண்டுக்கான ஒரு பொழுது போக்குதான்,
ஒரு கூட்டத்தை வச்சு பாருங்க எத்தனை பேர் வருவாங்கனு தெரிஞ்சிடும் " என்றார்..
அது இருக்கட்டும் நீங்க பெட்டிஷன்ல கையெழுத்து போட்டீங்களா?  என்றேன்..
இதோ இப்ப போட்டுவிவேன் "என்று விடை பெற்றார்..

அவரது இந்த கேள்வி மெய்யாகவோ, பொய்யாகவோ ஆக நாளை எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என்பதில் இருக்கிறது..

கட்டாயம் நமது முகநூல் சொந்தங்கள் பெருமளவு கலந்துகொள்ளவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..
காரணம்..
நாளை நடக்கும் விவாதம்,
பியூஸை காப்பாற்ற நடக்கும் விவாதம் அல்ல ..
நம் அடுத்த சந்ததிகளை காப்பாற்ற நடத்தபடும் விவாதம்..

நாளை கபாலிக்கு பாலபிஷேகம் செய்ய போகும் இளைஞர் படையே..
கொஞ்சம் இந்த பொதுநலம் கொண்ட மனிதனை காப்பாற்ற  கை கொடு..
இல்லை என்றால் உனது பொது சொத்து இந்த கபாலிகளால் களவாடபட்டுவிடும்..!!

அப்படி பயந்து கூட்டம் கூடவில்லை என்றால்
வரலாறு  படிக்கும் நம் சந்ததி
நம்மை தூற்றும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை..

---------------------------------------

பியூஸ் கைது மற்றும் அவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து விவாதிக்க, அதற்கான உங்களுடைய கண்டனத்தை தெரிவிக்க, அவருக்கு ஆதரவாக கரம் கோர்க்க வாருங்கள் தோழர்களே..
இடம்: ஜெயின் பவன், நாராயண் நகர், சேலம் 15. நேரம்: காலை 11 மணி முதல் 5 மணி வரை
தேதி: 17-7-2016
தொடர்புக்கு:  9566607077, 9003212914

#StandWithPiyush

Jain bavan, Salem. Land mark

https://goo.gl/maps/HrndAKgFwKt

Post a Comment

Powered by Blogger.