Halloween party ideas 2015
.

தோழர்களுக்கு வணக்கம் ... காலச்சூழல் கருதி தோழமைகளோடு கலந்தாய்ந்து எடுக்கப்பட்ட சில முடிவுகளை செயலாக்கும் முயல்வு இது ... எதிரிகள் பல்வேறு பரிணாமங்களில் தமிழகத்தில் பலமாய் வேரூண்றி வரும் காலக்கட்டத்தில் நம் தோழமைகளின் சந்திப்பு கட்டாயமாகிறது . மதவாதம் 2.30 சதவீதமாகவும், ஜாதியவாதம் 6.00 சதவீதமாகவும், இனவாதம் 1.00 சதவீதமாவும் ஒருவித அச்சுறுத்தும் தோற்றத்தை இந்த தேர்தலில் பெற்று நம் முன் நிற்கிறது . மதவாதமோ பல்வேறு பிரிவுகளாக பிளவுப்பட்டிருந்தாலும், சமூக அழிவிற்கே என்றாலும்,  ( விஸ்வ இந்து பரிஷித், சிவசேனா, பாஜக, இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி, போலி தமிழ் தேசியங்கள் ) அதன் தலைமை ஆர் எஸ் எஸ் ( RSS) ன் கருத்துக்களை விதைப்பதில் ஒற்றுமையே பேணி வருகிறது .. ஆனால் சமூக விழிப்புணர்வை பேசியும், சமத்துவத்துவதை நிலைநாட்டுவதையுமே செயல்பாடாய் கொண்ட நாமோ சில முரண்பாடுகளை பேசியப்படி விலகி நின்றே பயணிக்கிறோம் .. நம் முந்தைய இளந்திராவிடர் கூடல்கள் ஒரு வித நம்பிக்கையும், மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது  நாமறிந்ததே. இருந்தும் ஏன் நாம் விலகி நின்றே போராடி வருகிறோம். புதிய தோழர்கள் பல பேர் முகநூல் களத்தில் உள்ளனர். அவர்களை வீதி அழைத்து வந்து போராட வேண்டியது நம் அவசரமான அவசியமான கடமையும். இந்த சூழலை கருத்தில் கொண்டு அந்தந்த பகுதி தோழர்களை அந்த பகுதியிலேயே வந்து சந்தித்து, ஒருங்கிணைத்து மிகப்பெரிய இளந்திராவிட கூடலொன்றை நிகழ்த்த தோழர்கள் முடிவு செய்துள்ளோம்.  இளந்திராவிடர் கூடலை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் என்று யாருமின்றி, ஓருங்கிணைந்த தோழர்களின் செயல்பாடாகவே இதுவரை நடந்தேறியது. அது போலவே இந்த மூன்றாவது கூடலும் தோழர்களின் ஒருங்கிணைந்த ஆதரவோடு நடத்திடல் அவசியமாகிறது. தோழர்களை சந்திக்க வரும் நிகழ்வை சாதாரணமாக தேநீர் கடைகளில் நடத்திக் கொண்டாலே போதுமானது. அந்த சந்திப்பில் தோழர்கள் மட்டுமல்லாது ஆதரவாளர்கள் கருத்தொத்த நண்பர்களையும் கலந்துக்கொள்ள செய்வது பெரியாரியத்தை பலமாக்கிட உதவும். நிகழ்ச்சிக்கும் பெரும் வெற்றியை பெற்றுத் தரும்.
அதற்கு முன்பாக நாம் இதை ,பல மண்டலங்களாக பிரித்து முக்கியமாக..சென்னை. வேலூர்..சேலம்..கோவை. மதுரை. நெல்லை திருச்சி.புதுச்சேரி.என பிரித்து சந்திப்புகளை நிகழ்த்துவது என முடிவு செய்துள்ளோம்.வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வு நேரங்களில் சிறு சந்திப்புகளை நடத்திக்கொள்ளலாம் ஆர்வமுள்ள தோழர்கள் அந்தந்த பகுதிகளில் சந்திப்புகளை நிகழ்த்த ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகிறோம
      தோழர்கள் இன்று முதல் அலைபேசியில் அழைத்து தங்கள் பகுதி சந்திப்பு நாட்களை குறித்தும், நிகழ்வு குறித்தும் கருத்து பரிமாறிக் கொள்ளலாம்.

தொடர்புக்கு :
கோபால் இராமக்கிருட்டினன் :  96000 02080 /9976069160
ஆனந்த் ( தமிழீழம் மலரும்)  : 9842815340
செல்வேந்திரன்.கு : 9884602084
இரா.செந்தில்குமார் :  80561 03917. பரிமள ராசன் : 78 71 962024

Post a Comment

Powered by Blogger.