Halloween party ideas 2015
.

சமூக ஆர்வலர்களை கைதுசெய்வது அரசிற்கு நல்லதல்ல.

சமூக ஆர்வலர்களுக்கு அரச பயங்கரவாதம் கொடுக்கும் எச்சரிக்கையாகவே சகோதரர் பியூஸ் மானுஷ்  அவர்களின் கைதினை பார்கின்றேன்.

நீர்நிலைகளை சீரமைத்தல், குப்பைகளை அகற்றுதல்,காடுகளை பாதுகாத்தல், இயற்கையை கெடுக்கும் சக்திகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடுதல் என்று தனது வாழ்வை அர்பணித்து வாழும் மனிதரை காவல்துறை கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவில் சிறைப்படுத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இது பியூஸ் மானுஷ் என்பவற்றின் கைதாக பார்க்க முடியாது. இயற்கை வேளாண்மையை காக்கவும், இயற்கை வளங்கள் அழிப்பினை தடுக்கவும் களமாடும் எங்களைப்போன்ற பலருக்கும் அரசு கொடுக்கும் அச்சுறுத்தலாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம் செய்யவேண்டிய பணிகளை செய்யாமல் எதில் எவ்வளவு பணத்தினை கொள்ளையடிக்கலாம் என்று அலைந்து திரிகிறது. இதனை நன்கு புரிந்துகொண்ட மக்கள் தாங்களே தங்கள் வாழ்வை புரனமைப்பு செய்துகொள்ள முயற்சி செய்கின்றார்கள். சேலம் பகுதி மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் , உண்மையான கதாநாயகனாகவும் சகோதரர் பியூஸ் மானுஷ் மாறி வருகின்றார் என்பதை உணர்ந்து அரசு இந்த கொடிய சதியை அரங்கேற்றியுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக சகோதரரை விடுதலை செய்ய வேண்டும். சமூக ஆர்வலர்கள் தனிநபர் பிரச்சனையாக ,  இன்னொரு அமைப்பின் பிரச்சனையாக கருதாமல் ஒன்றுகூடி  பியூஸ் மானுஷ்  அவர்களை மீண்டும் சமூக பணியை மேற்கொள்ள துணைநிற்க வேண்டுமென்று விரும்புகின்றேன்.

இவரின் விடுதலைக்காக எப்பேற்பட்ட நிகழ்விலும் என்னை இணைத்துக்கொள்ள தயாராக உள்ளேன். எனது தொடர்பு எண்: 7806919891

- ஏனாதி பூங்கதிர்வேல்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
விவசாயிகள் விடுதலை கழகம்,
தமிழ்நாடு.

Post a Comment

Powered by Blogger.