Halloween party ideas 2015
.

வழக்குரைஞர்கள் போராட்டம் வெல்க |  கடந்த பல வாரங்களாக வழக்குரைஞர்கள் தமிழகத்தில் தொடர் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு மன்றத்தில் வாதாடும் பொழுது வழக்குரைஞர்கள் புருவத்தை உயர்த்திப்பேசக்கூடாது, சத்தம் போட்டுப் பேசக்கூடாது, நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறக் கூடாது போன்ற ஏற்க இயலாத நிபந்தனைகளை விதித்தும், அப்படி வழக்குரைஞர்கள் நடந்து கொண்டால் அவர்களை விசாரணை இன்றி இடைநீக்கம் செய்யலாம் என்றும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டு உள்ளது. இத்தகைய நிபந்தனைகளைக் காணும் பொழுது நாம் சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற ஐயம் உண்டாகிறது. வழக்குரைஞர்களை அச்சுறுத்தவும், கொத்தடிமைகள் ஆக்கவும், அவர்களது நடவடிக்கைகளை முடக்கவுமே இத்தகைய கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்படும். தமிழக வழக்குரைஞர்களுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. தமிழகத்தில் நடைபெறுகின்ற எந்தவொரு நியாயமான போராட்டமாக இருந்தாலும், அதில் தாமாகவே முன்வந்து அப்போராட்டங்களில் கலந்து கொண்டு தங்களது சனநாயகக் கடமைகளை ஆற்றுபவர்கள் தமிழக வழக்குரைஞர்கள் .பல சமயங்களில் நம்மைப் பாதிக்கக்கூடிய நெருக்கடிகள் வரும் பொழுது அதை உணராமல், அதற்கெதிராக மக்கள் கிளர்ந்தெழாமல் இருக்கும் பொழுது வழக்குரைஞர்கள்தான் அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச்சிறந்த முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாகவும் தமிழக வழக்குரைஞர்கள் விளங்கி வருகின்றனர். ஆனால் இவை எல்லாம் நாட்டைஆளுவோர்க்குச் சகிக்க முடியாததாகத்தான் இருந்திருக்கும். எனவே இவர்களைக் கொஞ்சம் தட்டி வைக்க வேண்டும் என அவர்கள் கருதித்தான, இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் , இங்கு மட்டும் இப்படிச் சனநாயக விரோதமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள் என நாம் கருத வேண்டியுள்ளது. எனவே மக்களுக்காகக் குரல் கொடுக்கும் வழக்குரைஞர்களுக்கு நெருக்கடி ஏற்ப டும் பொழுது, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். அத்தகைய நியாயமான கடமையைக் கட்சிகளும் இயக்கங்களும் உடனடியாகச் செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் 13 | 07 | 2016 புதன்கிழமையன்று கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக மக்கள் முன்னணி சார்பாகப் பல்வேறு இயக்கங்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது. இதைப் போன்ற போராட்டங்கள் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட வேண்டும். தீ  பரவட்டும்!

Post a Comment

Powered by Blogger.