Halloween party ideas 2015
.

குற்றவாளியை தெரிந்தும் அரசுக்கு தெரியப்படுத்தவில்லை என ஏன் இன்னமும் ஒய்.ஜி.மகேந்திரன் கைது செய்யப்படவில்லை?

இதே காரணத்தை கூறி கழக தலைவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்ததே தமிழக காவல்துறை. இப்போது ஒய்.ஜி.மகேந்திரனுக்காக சட்டமும், காவல்துறையும் தன் கடமையை செய்யாமல் கைகட்டி நிற்கிறதே ஏன்?

- நினைவு படுத்துகிறோம் -

23.06.2001 அன்று மாலையில் கோபியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் நிருபர் ஒருவர், ”வீரப்பன் சிங்கப்பூருக்கோ, மலேசியாவிற்கோ சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறதே?” என கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி,
”வீரப்பன் சிங்கப்பூருக்கோ, மலேசியாவிற்கோ எங்கும் சென்றுவிடவில்லை,காட்டில்தான் உள்ளார்” என கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலை வைத்து ”குற்றவாளி இருக்கும் இடம் அறிந்தும் அரசுக்கு தெரியப்படுத்தவில்லை” என கூறி கழகத் தலைவர் மீது (179) தமிழக அரசு வழக்கு தொடுத்து 26.06.2001 அன்று கைது செய்து சிறையில் அடைத்தது. வழக்கு எண் 1/2001. சேலம் கியூபிராஞ் காவல்பிரிவு அந்த ஆண்டில் பதிவு செய்த ஒரே வழக்கும் இதுதான்.மேலும் தேசத் துரோக குற்றப் பிரிவும் (124A) இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது.
-------------------------------------------------------
நிருபர் கேட்ட கேள்விக்கு அளித்த ஒரு சாதாரண பதிலிற்கே கழக தலைவர் மீது இவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதே?
இவ்வளவு துல்லியமாக குற்றாவாளியை தெரிந்தும் மறைக்கும் ஒய்.ஜி.மீது கைது நடவடிக்கை இல்லை என்றால்..........

இந்த அரசும் காவல்துறையும் யாருக்காக சேவை செய்கிறது என்கிற அய்யம் பொது மக்கள் மத்தியில் எழுகிறது.

இது உண்மையில் நடுநிலையான,அனைத்து மக்களுக்கான ,பாரபட்சமற்ற அரசா?

Post a Comment

Powered by Blogger.