Halloween party ideas 2015
.

பிரான்ஸ் - இவ்றி நகரசபை பெருவிழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பங்கெடுக்கின்றது !

பிரான்ஸ் – இவ்றி சுர் சென் (94) நகரசபையின் வருடாந்த பெருவிழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பங்கெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

140க்கும் மேற்பட்ட பன்முக அரசு சார நிறுவனங்கள், தொண்டமைப்புக்கள், சங்கங்கள் பங்களிப்புடன் இவ்வருட பெருவிழாவினை இந்நகர சபை முன்னெடுக்க உள்ளதாக நகரசபை அறிவித்துள்ளது.

http://ivrymaville.ivry94.fr/actualites/archives/2016/ivry-en-fete-2016.htm#

வரும் ஜூன் 11-12 சனி, ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

பிரென்சு அரசியற் பிரதிநிதிகள், பிரமுகர்கள், என பல்வேறு சமூகப்பிரதிநிதிகள் மற்றும் பல்லின மக்களும் பங்கெடுக்கின்ற இப்பெருவிழாவில், நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்ப நலன்பேண் அமைச்சகம் மையமொன்றினை இடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்கள் எதிர்கொள்கின்ற தற்போதைய நிலைகள் தொடர்பில் இம்மையத்தின் ஊடாக பரப்புரை செய்யப்பட இருப்பதோடு, முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்ப நலன் தேவைகளுக்குரிய நிதி சேகரிப்பும் இடம்பெற இருப்பதாக துணை அமைச்சர் கமல் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் இம்மையத்தில் கூடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது



Post a Comment

Powered by Blogger.