Halloween party ideas 2015
.

தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016

இலக்குவனார் திருவள்ளுவன்      05 சூன் 2016     கருத்திற்காக..

தமிழ்ப்பேராய விருதுகள் – 2016

Thamizh Academy Awards – 2016

பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited)

  திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் – Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணிணித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015ஆகிய 4  நான்கு ஆண்டுகளாக வழங்கிவந்துள்ளது. இவ்வாண்டு முதல் முதல் இவ்விருதுகளின் விதிகளில் சில மாற்றங்களும் புதிய விருதுச் சேர்க்கையும் செய்யப்பட்டுள்ளன.

  இளம் தமிழ் ஆய்வறிஞருக்கு வழங்கப்பட்டு வரும் வளர்தமிழ் விருது மறைந்த நமது மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் இவ்வாண்டுமுதல் ‘அப்துல்கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது’ என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது.

  சிற்பம், ஓவியம் சார்ந்த நூல்களுக்கு ஆனந்தகுமாரசாமி கலை விருதும், தமிழிசை சார்ந்தநூல்களுக்கு முத்துத் தாண்டவர் தமிழிசை விருதும் வழங்கப்பட்டுவந்தன. இந்த இருவிருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் நூல்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு இருவிருதுகளையும் ஒருங்கிணைத்து இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய நான்கு துறைகளுக்கும் சேர்த்து ஒரே விருதாக ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது /முத்துத்தாண்டவர் தமிழிசை விருது என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இதழ்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்க் கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை முன்னிறுத்தும் வார, மாத, காலாண்டு இதழ்களுக்குச் சுதேசமித்திரன் இதழ் விருது நூறாயிரம்  உரூபாய்க்குப் புதிய விருதாக வழங்கப்படவுள்ளது.

  இதேபோன்று தமிழ் மொழியின் வளர்ச்சி, கல்வி, கலை, பண்பாடு போன்றவற்றிற்காக அயராது பாடுபட்டுவரும் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் செயல்பட்டுவரும் தமிழ் அமைப்புகளுக்குத் தனித்தனியாகத் ‘தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதுகள்’இவ்வாண்டுமுதல் புதிதாக வழங்கப்படவுள்ளன.

  சிறந்த நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்களுக்கும் உரிய பாராட்டும் தொகையும் வழங்கவேண்டும் என்ற நோக்கில் தேர்ந்தெடுக்கப்படும் 8 நூல்களையும் வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் விருதுத் தொகையும் பாராட்டும் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.

  இவ்வாறாகத் தமிழ்ப்பேராய விருதுகள் 2016 முதல் 14பேருக்கு 22 நூறாயிரம்  உரூபாய்த் தொகையுடைய விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வழங்கப்படவிருக்கும் விருதுகளும் தொகையும் விதிமுறைகளும் இறுதியில் தரப்பட்டுள்ளது.

பரிந்துரைகளும் நூல்களும் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 30.06.2016.

பரிந்துரைகளையும் நூல்களையும் அனுப்பவேண்டிய முகவரி:

துறைத்தலைவர், தமிழ்ப்பேராயம்,

மைய நூலகக் கட்டடம், நான்காம் தளம்,

எசு.ஆர்.எம். பல்கலைக்கழகம்,

காட்டாங்குளத்தூர் – 603 203.

தொலைபேசி: 044 27417375

மின்னஞ்சல்: tamilperayam@srmuniv.ac.in

https://youtu.be/4d3JHEdk33A


-- +++++++++

இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி. – வாலாசா வல்லவன்

அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016

இலக்குவனார் திருவள்ளுவன்      05 சூன் 2016     கருத்திற்காக..

இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி.

  1955 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தி மொழியை எப்படி எல்லாம் வளர்த்து எடுக்க வேண்டும் என்பதைக் கண்டறிய பி.சி.கெர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு இந்தியா முழுவதும் முழுவதும் சென்று கருத்துகளைக் கேட்டறிந்தது.   மார்கழி 27, 1986 / 1956 சனவரி 11ஆம் நாள் அக்குழு முன்பு ம.பொ.சி.  கருத்துரைத்தார்

இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்பதைத் தமிழரசு கழகம் ஏற்றுக் கொள்ளுகிறது.மத்திய அரசின் நிருவாக மொழியாகவும், மாநிலங்களின் தொடர்பு மொழியாகவும், உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும்.முடிந்தவரையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளும் இந்தியிலேயே இருக்கலாம். மற்ற மொழியினர் அவரவர் தாய்மொழியில் பேசவும் உரிமை வேண்டும்.தமிழகப் பள்ளிகளில் இந்தியை விருப்பப் பாடமாக வைக்கலாம் என்று கருத்துரைத்தார்.

(செங்கோல்  தை 02, 1987 / 15-1-1956)

இவர்தான் இன்றைய தமிழ்த்தேசியவாதிகளின் தலைவர். பெ.மணியரசன், இராசேந்திர சோழன், பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இன்று வரை ம.பொ.சி யின் இந்தக் கொள்கையைப் பற்றி ஒரு சிறு  கருத்துகூட வைத்தது இல்லை. ஆனால் பெரியாரைப் பற்றி மூச்சுக்கு முந்நூறு தரம் பேசுவார்கள்.

 – வாலாசா வல்லவன்

அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652
/ தமிழே விழி! தமிழா விழி! 
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

-- 
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email totamil_ulagam@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
--- 
You received this message because you are subscribed to the Google Groups "tamil_ulagam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email totamil_ulagam+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Post a Comment

Powered by Blogger.