Halloween party ideas 2015
.

"தமிழர்களுக்கும்,சிங்களர்களுக்கும் இடையில் ஒருபோதும் மதச்சண்டைகள் நடைபெற்றதே இல்லை"

தமிழர்களுக்கும்,சிங்களர்களுக்கும் மதச்சண்டை நடந்ததாக யார் சொன்னது?எல்லாளன் காலத்தில் தமிழர்கள் இந்துக்களாக இருந்தார்களா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பவுத்தம் வாழ்வியல் நெறியாக இருந்ததே தவிர மதமாக இருந்ததா? தமிழகத்திலும் பவுத்த நெறி செழித்து வளர்ந்து மன்னர்களும் மக்களும் பவுத்தகொள்கைகளை ஏற்று வாழ்ந்த வரலாறு உண்மையா இல்லையா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
சாலையோரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு ஆபத்து என்றாலும் அலறுகிற இராமகோபாலன் வகையறாக்கள் ஈழத்தில் தமிழர்களின் கோவில்கள் சிங்களவர்களால்
இடிக்கப்பட்டபோது வாயைபொத்திக்கொண்டு கமுக்கமாக இருந்தது இது மதப்பிரச்சனையல்ல, இன உரிமைப்போர் என்பதால்தான்! தேவையில்லாமல் " நாம்தமிழர்கள்" தேரையிழுத்து தெருவில் விடவேண்டாம்.
தமிழர்களும்,சிங்களர்களும் மதவேற்றுமையின்றி ஒற்றுமையுடன் இருந்தார்கள் என்று எப்போதோ நடந்த கதையை இப்போது பேசுவதால் யாருக்கு இலாபம்?
பராந்தகசோழனுக்கும், இராஜசிம்மன் என்ற
பாண்டியமன்னனுக்கும் நடைபெற்றபோரில்
சோழனிடம் தோற்ற பாண்டியன் இலங்கைக்கு தப்பிசென்று சிங்கள அரசனிடம் தனது மணிமுடியை ஒப்படைத்ததாகவும் நூறாண்டுகள் கழித்து முதலாம்இராசேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்து பாண்டியர் மணிமுடியை மீட்டதாகவும் வரலாற்று பதிவுகள் உள்ளது அதற்காக இப்போது, தமிழர்கள் தங்கள் மணிமுடியை ( ஆட்சி உரிமையை) சிங்களவர்களிடம் ஒப்படைத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார்களா நாம்தமிழர்கள்?  ஈழப்படுகொலையாளர்களுக்கு உரிய தண்டனையை வாங்கித்தரவேண்டும் என்று உலகளாவிய நிலையில் மாந்தநேய சிந்தனையாளர்களும், இன உணர்வாளர்களும் முயற்சித்து வரும் வேளையில் இப்படி குறுக்குசால் ஓட்டி இவர்கள் யாரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்? தெலுங்கு மக்களிடம் தங்களுக்கிருக்கும் அளவுகடந்த வெறுப்புணர்ச்சியால் சிங்களவர்களை நல்லவர்களாக்கி இனத்தை காட்டிக்கொடுக்கும் வேலையை "கண்டிநாயக்கர்" மூலம் கச்சிதமாக செய்திருக்கிறார்கள் நாம்தமிழர் கட்சிக்காரர்கள்!
                                     ( தொடரும்...)

- சீனி விடுதலையரசு.தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சாரத் துணை செயலாளர்

Post a Comment

Powered by Blogger.