Halloween party ideas 2015
.






சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு குறித்தான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பு, போரில் கொத்தணிக் குண்டுகள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய விடயங்களில் ஆணையாளர் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டினை வரவேற்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் ஊடான பரிகார நீதியே அரசியற் தீர்வுக்கான பொருத்தமான பொறிமுறையாக அமையும் என்பதனை ஐ.நா ஆணையாளரின் அரசியற் தீர்வுத்திட்டம் தொடர்பில் தாம் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை சிறுபான்மையினரென விழிப்பதற்கு அப்பால்,அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஓர் தேசிய இனம் என்பதனை கவனத்தில் கொள்ளுமாறு ஐ.நா ஆணையாளரை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்களை குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு Monitoring Accountability Panel (MAP) ஐ.நா ஆணையாளரை வேண்டுவதாகவும் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாதம் ஊடகசேவை

Post a Comment

Powered by Blogger.