Halloween party ideas 2015
.

மற்றவர்கள் நலம் பெறுவதற்காக துன்பத்தை ஏற்று, தியாகம் செய்து பாடுபடுவதை கேலி செய்வது சரி அல்ல. கொளத்தூர் மணியும், கோவை இராமகிருஷ்ணனும் மற்றவர்கள் நலனுக்காக போராடி , கைதை ஏற்று சிறையில் வாடுவது உண்டே, அப்போது சிறை கம்பிகளை புடுங்கமுடியாதவர்கள் என அவர்களை கேலி செய்தால் அது சரியாகுமா ?

மத குருமார்களை எதிர்த்து போராடிய புரட்சியாளர் இயேசு.  அவரது தியாகத்தை கேலி செய்தால் அதன் மூலம் என்ன நன்மை வந்துவிடும் ? சிலர் மனம் புண்படுத்தப்படுவதை தவிர ?

இயேசு சாதி வேறுபாடு பார்க்கவில்லையே ....
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசம் பார்க்க கூடாது என்றுதானே சொன்னார்...

உன்னைப் போல பிறனை நேசி என்றுதானே பரப்புரை செய்தார் ?

வன்மையுள் வன்மை மடவார் பொறை என்ற திருக்குறள் வரிகளை படித்தது இல்லையா ?

நீங்கள் வேறு ஏதாவது குற்றச்சாட்டு இயேசு மேல் இருந்தால் கூறுங்கள்.

தயவு செய்து

சிலுவை மரணத்தை சகித்த
இயேசுவையோ,

கல்லடிகளை சகித்த முகமது நபியையோ,

பார்ப்பனர்களின் கொடுமைகளை சகித்து கழுவில் ஏற்றி கொல்லப்பட ஒப்புக்கொண்ட  தமிழர்களான  சமணர்களையோ

பழித்து

பாவி ஆக வேண்டாம்...

நல்லது செய்கிறோம் என நினைத்து

கெட்டது செய்ய வேண்டாம்....

நாத்திகரான பெரியார்

ஆத்திகரான குன்றக்குடி அடிகளாரை கேலி செய்தது உண்டா ? இல்லையே.....

இப்படிக்கு

பகுத்தறிவு ஆத்திகன்.....

Tamil Sivakkannu

என்னும் முகநூலர் பதிவுக்கு எனது பதில்.....

Post a Comment

Powered by Blogger.