Halloween party ideas 2015
.


தந்தை பெரியாரின் எழுத்தையும் பேச்சையும் 
     பொருள்வாரியாகக் காலமுறைப்படுத்திப்
     'பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' எனப் 
      பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவரின் 
      ஒப்புதலைப் பெற்று 1974 இல் வெளியிட்ட 
      பேருழைப்பாளர் திருச்சி வே.ஆனைமுத்து. 

மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்காரியக் கொள்கை 
     விளக்க ஏடாக 'சிந்தனையாளன்' இதழை நாற்பது
     ஆண்டுகளாகக் கடும் நெருக்கடிக்கிடையே 
     தொடர்ந்து நடத்தி வருபவர்.
பெரியாரை முழுமையாக அறிவதற்கும் வளர்ப்பதற்குமான       
    ஓராண்டுகாலத் தொடர்வகுப்பைப் பொருளியல் 
    சுமையோடு ,அம்பத்தூரில் நடத்திக் கொண்டிருப்பவர்.

மண்டல்குழுப் பரிந்துரை நாடாளுமன்றத்தில்    
    வைக்கப்படவும் நடுவணரசில் பிற்படுத்தப்பட்டோர் 
    ஒதுக்கீட்டுரிமை பெறவும் - வடமாநிலங்களில் 
    வகுப்புரிமைச்சுடர் ஏற்றப்படவும் முதன்மைப் 
    பங்காற்றியவர் இவர்! 
தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டை 50 
   விழுக்காடாக உயர்த்தக் காரணமானவர் இவர்! 
   விளம்பர வெளிச்சம் பெறாத சாதனையாளர் இவர்! 
   செயலூக்கம் மிக்க பெரியாரியல் அறிஞர் இவர்!

தமிழ்ச்சமூகத்தை மாற்றியமைக்க விரும்பும் 
    ஒவ்வொருவருக்கும், ஆனைமுத்து நூல்களை  
    ஆழ்ந்துபடிக்கும் எண்ணம் எழ வேண்டும்.

பெரியார் வரலாற்றை -அரிய ஆய்வு நோக்குடன்- 
    நூலாக்கும் பணியில், எவர் துணையும் இன்றி  
    இவர் ஈடுபட்டுள்ளார்.அய்ந்து பாகங்களாக அந்த 
    வரலாற்றுப் பெட்டகம் வெளிவர இருக்கிறது.

தோழர் வே ஆனைமுத்து அவர்களுக்கு 21.6.2016 இல் 
    92ஆம் அகவை தொடங்குகிறது!இவர் முழுநலத்துடன்
    பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் .
   

Post a Comment

Powered by Blogger.