Halloween party ideas 2015
.

நேற்று 01.06.2016 அன்று மாலை 5 மணியளவில் உடல்நலக்குறைவினால் தோழர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்கள் முடிவெய்தினார்.இன்று 02.06.2016 மாலை கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில்  நடைபெற உள்ள இறுதி நிகழ்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மிகச்சிறந்த பெரியாரியல்வாதி,

திராவிடர் கழக இளைஞர் அணி தலைவராக பணியாற்றி ஏராளமான இளைஞர்களை அமைப்பிற்கு அழைத்து வந்தவர்,

1974 இந்தியாவே திரும்பிப்பார்த்த அன்னை மணியம்மையார் நடத்திய ராவணலீலா நிகழ்வில் முன்னின்று செயல்பட்டவர்,அதற்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மகத்தான அற்பணிப்புகளை செய்தவர்,

ஈழவிடுதலை போராளிகளுக்கு தன்னுடைய  சொத்துக்களை வழங்கியவர், பெருமளவு நிதி உதவி செய்தவர்,

திராவிடர் விடுதலைக் கழக ஏடான புரட்சிப்பெரியார் முழக்கம் ஏட்டை குடந்தை மற்றும் சுற்றுப்பகுதிகளில் முடிதிருத்தும் நிலையங்களில் எல்லாம் கொண்டு போய் சேர்த்தவர்,

தமிழ்நாடு இந்திய தேசியத்தில் இருந்து விடுபட வேண்டும் என்கிற விடுதலைக் கனலோடு வாழ்ந்தவர்,

இப்போது பலரால் உரிமை கோரப்படும்,குடிதாங்கி ஜாதிக் கலவரத்தில் சிக்கலை சுமுகமாக தீர்க்க திருப்பனந்தாள் டி.எம்.மணி (உமர்பாரூக்) அவர்களுடன் இணைந்து களப்பணியாற்றியவர்,

கீழ்வெண்மணி கோபால கிருஷ்ண (நாயுடு) கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட காரணமாய் இருந்தவர்,

தோழரின் மறைவு பேரிழப்பே ஆகும்.

...திராவிடர் விடுதலை கழகம்

Post a Comment

Powered by Blogger.