Halloween party ideas 2015
.

சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வெளிவருகிறது என்றாலே கொண்டாட்டத்திற்கும் அட்ராசிட்டிக்கும் பஞ்சம் இருக்காது! இதோ கபாலி ஆடியோ வெளியான உடனே யாரோ சிலர் படத்தின் இயக்குனர் ரஞ்சித்தைப் பற்றி தனிமனித தாக்குதலை சமூக வலைத்தளங்களில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.அது தொடர்பாக பதிவு செய்தவரின் போக்கைக் கண்டித்து புகைப்பட கலைஞர் ரா.குணசீலன் ஒரு பதில் எழுதியிருக்கிறார்- இரண்டும் இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

//‘மேட்டுக் குடியின் (பிற்படுத்தப்பட்டோர்) கூப்பாடு!! நாட்டுக்குள் இனி கேட்காது…கலகம் செய்து “ஆண்டையர்களின்” (வன்னியர்களின்) கதை முடிப்பான்’ -இது எல்லாம் ஏதோ சின்ன பசங்க சுவத்துல எழுதுன பஞ்ச் டயலாக் கிடையாது! கன்னட இன வெறியன் ரஜினிகாந்த் நடித்து, பறையர் சாதிவெறியன் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள கபாலி படத்தின் பாடல் வரிகள்..

## ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் தாக்கி பாடல் வரிகளை உருவாக்கியுள்ள படக்குழுவினருக்கு எதிராக யார் போராட்டம் செய்வது??

## மானமுள்ள சாதிக்காரன் எல்லாம் i கொதித்து எழுவான்! சூடு சுரணையுள்ள சாதி சங்கங்கள் போராட்டம் செய்யும், நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யும்…
போராட்டமெல்லாம் செய்தால் ரஞ்சித் பெரிய தலைவன் ரேஞ்சுக்கு போயிடுவான், பறையருக்கு தன்னை ஒரு தலைவனாக காட்டிக் கொள்வான்,

படத்தை எந்த சொரனை உள்ள சாதிக்கு பிறந்தவனும் பார்க்க கூடாது, தியேட்டர்கள் காற்று வாங்கனும்,ரஞ்சித் கூட சேர்ந்ததற்காக ரஜினி வாயில மண்ணு விழனும், தானு தலையில துண்டு விழனும்! அடுத்த படம் ரஞ்சித்தை நோக்கி வராது, அட்ரஸ் இல்லாமல் போயிடுவான். இணைய செயல்பாடு கடுமையான எதிர்ப்பையும், படத்திற்கு எதிரான ட்ரெண்ட் செய்யனும்.

மேட்டர் ஓவர். வாண்டையார் எனபவரின் பதிவு இது. மேலும் இது போன்ற பதிவுகள் வாட்சப்பில் வலம் வருகின்றன..
சரி இப்போது சகோதரன் ரஞ்சித்தை சாதி வெரியன் என்று சொல்லும் கீழ்த்தரமான சிந்தனையில் இருப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்

தன்னை ஒடுக்கப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் , தலித் என்று இந்த சமூகத்தில் சொல்லுவதே ஒரு புரட்சிதான்.
எந்த தாழ்த்தப்பட்டவனும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள தயக்கத்தை விட பயமே இங்கு அதிகம். பொதுவான துறைகளில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் ஒருவன் “தலித்” என்று அறியப்பட்டால் கிடைக்கும் மரியாதையும் , பார்வைகளும் வேறுமாதிரி அது இந்த பொருளாதார வாழ்க்கைக்கு தடங்கல் என்று பல முன்னணி கலைஞர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை . மாறாக பொருளாதாரத்தைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் தலித் அல்லாத அனைத்து சாதியினைச்சார்ந்தவர்களும் இங்கு வெளிப்படையாக இருக்கமுடியும், ஏன் பெருமைக்கூட பேச முடியும்…

இதுதான் எல்லாத்துறைகளிலும் நடக்கிறது . விஞ்ஞானம் வளர்ந்தது என்பதைவிட அதை வைத்து சாதியை வளர்க்க, சாதி வெரியை ஊட்டத்தான் இந்த சமூகத்தில் நிறையபேர் இருக்கிறார்கள்.

புரட்சிக்கும், சாதி வெறிக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொள்வது அவசியம்… அண்ணல் அம்பேத்கரை உள்வாங்கியவன் புரட்சிகரமான வார்த்தைகளை படைப்பில் கொண்டுவருவதுதான் சிறப்பு , ரஞ்சித் அப்படிப்பட்டவர்தான் . அவர் சாதிப்பெருமை பேசுவதற்கு என்ன இருக்கிறது .

“இவனுக்கெல்லாம் ரஜினி எப்படி கால்சீட் கொடுத்தார்?” என்கிற கேள்வியில் ஒளிந்திருக்கும் நவீன சாதியின் முகங்கள் இப்போதும் கோடம்பாக்கத்தில் உலவுவதுண்டு….!

சினிமாவில் சிலர் வெளிப்படையாக சாதியை சொல்லுகிறார்கள் மீதி இருப்பவர்கள் அனைவரும் நவீன வடிவில் சொல்லுவார்கள், சொல்லுகிறார்கள் …. இதுதான் நடக்கிறது..

“சாதிதான் இந்த சமூகம் அதில் சினிமாவுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? ..
அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்த சாதியின் கோர முகம் பதிவுகள் வடிவில் , வாட்சப் குரூப்புகளின் வழியாக வெளிப்படையாக தெரிவது வேதனையளிக்கிறது.

ரஜினியின் படத்தை பார்க்காதே..! ரஞ்சித்தை சினிமாவில் ஜெயிக்க விடாதே என்கிற கீழ்த்தரமான சிந்தனை ஏதோ ஒரு ஊரில் சாதி வெறிபிடித்தவர்களின் குரல் என்று நினைத்துவிடவேண்டாம் . கலைஞர்கள் , படைப்பாளிகள் என்று சொல்லிக்கொண்டு நம்மோடு உறவாடும் பல ஜந்துக்களின் மன நிலையும் அதுதான். “நவீன தீண்டாமை”
ஜெயித்தபிறகு இந்த ஜந்துக்களின் கோரமுகம் தெளிவாகத்தெரியும்..

சினிமாவை சினிமாவாக பார்க்க சொல்லுது ஒரு கூட்டம்.சினிமா ஒரு மிகப்பெரிய ஊடகம் அதை கவனமாக கையாளவேண்டும் என்கிறது ஒரு கூட்டம்.சினிமாத்துறையில் ஏதோ ஒரு வேலைபார்த்தாலும் தன்னை பெரிய ஜாம்பவானாக காட்டிக்கொள்கிறது ஒரு கூட்டம்.

மற்ற தளங்களில் திறமையானவர்கள் இருந்தாலும் மதிப்புகள் கொடுப்பதில்லை இந்த சினிமாத்துறையில் ஜிங் ஜாங் அடிக்கும் கும்பல்கள்..சினிமாவுக்குள் வரும் போதோ அல்லது வெற்றிக்காக போராடும்பொழுதோ எவனும் தன் சாதிப்பெருமையை பேசுவதில்லை, அனைவரிடமும் சமத்துவம் , சகோதரத்துவம், அன்பு பண்பு பாசம் என்பவர்கள் ஜெயித்தபிறகு தனது சுயஜாதி பெருமை பேச ஆரம்பிப்பதும், தங்களது படங்களில் சாதிப்பெருமையை காட்ட முயற்ச்சிப்பதும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்… ஏன் வரும்போதே நான் இந்த சாதி என்று சொல்லிக்கொண்டு வரவேண்டியதானே? ….

சிலர் சினிமாவில் ஜெயித்தபிறகு சாதி சங்கங்கள் வைப்பதும், சாதி அரசியலுக்காகவும் தங்களது பிரபலத்தை மூலதனமாக்குவதும் நம்மூரில் சகஜம்…..

சாதிபெருமை பேசி சாதிவெறியைத்தூண்டும் படம் எடுப்பவனும் இங்கு படைப்பாளி ,
சரக்கு அடிக்கவைத்து அவுத்துபோட்டு ஆடச்சொல்லி படம் எடுப்பவனும் இங்கு படைப்பாளி ,
படம் நல்ல ஓடணும் அதுக்கு என்னவேணும்னாலும் செய்யலாம் என்பவனும் தன்னை படைப்பாளி என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது….

அண்ணல் அம்பேத்கரையே சாதிதலைவர் என்று இன்னும் அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளக்கூட ஆசைப்படாத சமூகம்தானே இந்த சமூகம்…

சினிமா தியேட்டரில் மட்டும்தான் சமத்துவத்தை காண்கிறோம் என்று சொல்லிக்கொண்டே திரையில் விஷத்தை கொடுக்கும் சாதி வியாபாரிகளே கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள் இன்னும் பல “கபாலிகள்” வரத்தான் போகிறார்கள் அதை யாராலும் தடுக்க முடியாது…

அதிக அழுத்தம் அதிபயங்கர எதிர்வினையாற்றும் இது அறிவியல் . இப்போது அது சமூகத்திலும் நடக்கிறது ,இனி சினிமாவிலும் நடக்கும் .

உங்கள் சாதி பலியிடலுக்கு ரஜினியும் ரஞ்சித்தும் ஆடுகள் அல்ல….!

என்றும் அன்புடன்
இரா. குணசீலன்.

Post a Comment

Powered by Blogger.