Halloween party ideas 2015
.

1895லேயே கெரில்லா யுத்தத்தை கையிலெடுத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தை கதிகலக்கிய வீரம்செரிந்த பழங்குடி பிர்சா முண்டாவின் நினைவு தினம் இன்று.

பழங்குடிகள் மத்தியில் பிர்சா முண்டாவுக்கு ஆதரவு வலுப்படுவதைக் கண்ட பிரிட்டிஷ் அரசு அவரைத் தந்திரமாக சதிசெய்து, ஆகஸ்ட் 23, 1895 அன்று கைதுசெய்தது.

இரண்டு ஆண்டுகள் ஜெயில் வாசத்துக்குப் பிறகு 1897-ல் பிர்சா முண்டா விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு 1900-ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா முண்டா, ஜூன் 9-ம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அவரது சாவுக்கு காலரா நோய்தான் காரணம் என்றது பிரிட்டிஷ் அரசு. ஆனால் விஷம் கொடுத்துக் கொல்லபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

தகவல் : Lakshmanasamy Odiyen Rangasamy

Post a Comment

Powered by Blogger.