Halloween party ideas 2015
.

BHEL-ல் 28.6.2016 அன்று சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக தொழிற் சங்கமான LPF, அதிமுக தொழிற் சங்கமான ATP, சிபிஎம் தொழிற் சங்கமான CITU உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் போட்டியிட்டது, இதில் டாக்டர் அம்பேத்கர் யூனியனும் அடங்கும்.

அய்ந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சங்க அங்கீகாரத்திற்கான இத்தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் யூனியனை முதன்மைச் சங்கமாக ஆக்கிட
BHEL SC/ST EWC ன் கௌரவத் தலைவரும் ஆதித்தமிழர் பேரவை நிவனருமான சமூகநீதிப் போராளி 'அய்யா' இரா.அதியமான் அவர்கள் கடந்த 24.06.2016 அன்று BHEL EAST gate ல் நடைபெற்ற சிறப்பு வாயிற்கூட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்து உரையாற்றினார்,

அவர் ஆற்றிய உரை எஸ்சி/எஸ்டி தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது, அதன் காரணமாக இதுவரை அய்ந்தாம் இடத்தில் இருந்து வந்த அம்பேத்கர் யூனியன் எஸ்சி/எஸ்டி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வாக்களித்த காரணத்தினால் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.

இது என்ன? சாதனையா என்று கூட எண்ணத் தோன்றும், சாதனைதான்! ஏனென்றால் 1990 க்கு முன்புவரை ஆதிக்க சக்திகள் நடத்திய தொழிற் சங்கங்களில் கொடி தூக்கவும், கோசம் போடவும், போஸ்ட்டர் ஒட்டவும் இன்ன பிற எடுபிடி வேலைகளை செய்யவும் மட்டுமே பயன்படுத்தபட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். 1991.ல் ஏற்பட்ட அம்பேத்கரின் நூற்றாண்டு எழுச்சி "யாருக்கும் நான் அடிமை இல்லை! எனக்கடிமை எவருமில்லை!!" என்ற புரட்சிகர கருத்துக்கு இட்டுச்சென்று அம்பேத்கர் பெயரில் சங்கத்தை தொடங்க காரணமாக அமைந்தது. அப்படி உருவானதே இந்த அம்பேத்கர் யூனியன்.

யூனியன் தொடங்கப்பட்ட போது முதன்மை சங்கமாக இருந்த அம்பேத்கர் யூனியன் பின்நாளில் தலித்துகளுக்குள் ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு பாகுபாட்டின் காரணமாக சில மனமாச்சரியங்கள் ஏற்பட்டு அம்பேத்கர் யூனியன் அய்ந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதை உணர்ந்த தொழிலாளர்கள் இனிமேல் சங்க பொறுப்புகளை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவுக்கு வந்து தங்களுக்குள் சில ஏற்பாடுகளை செய்துகொண்டு தற்போது, இந்த தேர்தலில் அம்பேத்கர் யூனியன் களம் கண்டு இரண்டாம் இடத்தை எட்டியுள்ளது.

இதற்கு காரணம் தலித்துகளில் பெரும்பன்மையாக உள்ள மூன்று பிரிவுகளான அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திரர் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு, கடந்த 22.6.2016 அன்று தமிழக முன்னேற்றக் கழக தலைவர் திரு, பெ.ஜான்பாண்டியன் அவர்களும், 24.6.2016 அன்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர், திரு, இரா.அதியமான் அவர்களும், 25.6.2016 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு, தொல்.திருமாவளவன் அவர்களும் வாக்கு சேகரித்து உரையாற்றினர்,

இதில் பேசிய திரு, அதியமான் அவர்கள் தலித் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று யார் சொன்னது, நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றோம், நீங்கள் நினைத்தால் வெற்றி விழா கூட்டத்தில் ஒரே மேடைக்கு வர தயாராக இருக்கின்றோம், என்று பேசியது தொழிலாளர்கள் மத்தியில் மேலும் எழுச்சியூட்டியது.

இதன் காரணமாக நடந்து முடிந்த தேர்தல் நல்ல மாற்றத்தைக் கொடுத்துள்ளது,

வாக்குகள் விபரம்.
"""""""""""""
தகுதியுடைய மொத்த வாக்குகள் =5803
பதிவானவை =5594
செல்லாதது =18

திமுக
BHEL- EPU/LPF =891
அம்பேத்கர் யூனியன்
BPDr.AEU =814
அதிமுக
BPAWU/ATP =730
சிபிஐ(எம்)
BHEWU/CITU =655
BMS =634
BHEL-DTS/AITUC =559
BPEU/INTUC =541
BPWU/PJTM = 326
BCEU =119
BNSU = 307

அரசியல் பலம், அதிகாரபலம் பணபலம் கொண்ட மிகப்பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் களம்கண்டு சாதிக்க முடியாததை தலித் தொழிலாளர்களின் ஒற்றுமை சாதித்துக் காட்டியுள்ளது.

இந்த சாதனையும் வெற்றியும் நீடித்து மேலும் முதல் சங்கமாக வரவேண்டும் என்றால் இப்போது உள்ள ஒற்றுமை நிலை நிறுத்தப்பட வேண்டும், அப்படி தலித் ஒற்றுமை நிலைத்து வலுப்பெற வேண்டும் என்றால், அம்பேத்கர் யூனியனில் உள்ள அதிகாரம் மிக்க பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர், பதவிகள் சுழற்சி முறையில் அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திரர், சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் படவேண்டும், மேலும் பெல் நிறுவனத்தில் உள்ள பணி நியமனங்களிலும், பதவி உயர்வுகளிலும் உரிய பங்கீடு கிடைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இது போன்ற அனுகுமுறைகளை கடைபிடித்தால், பெல் நிறுவனத்தில் மட்டுமல்ல அனைத்து தளங்களிலும் தலித்துகள் அதிகாரம் பெறமுடியும்.

இந்திய நாட்டில் உள்ள உழைக்கும் தொழிலாளர்களில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் தலித் மக்களே! எனவே இந்தியாவில் தலித் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து அந்தந்த தளங்களில் வலுவான தொழிற் சங்கங்களை கட்டமைத்து விட்டாலே! மத்தியிலும், அந்தந்த மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தைக் எளிதாக கைப்பற்ற முடியும் என்று அம்பேத்கர் நம்பினார், அதன் காரணமாகவே சுதந்திர தொழிலாளர் கட்சியை கூட தொடங்கினார், ஆனால் பார்பனிய சூழ்ச்சியாலும், நமக்குள் இருக்கும் பார்ப்பனிய பாகுபாட்டுக் கூறுகளாலும் நமது ஒற்றுமை சிதைந்து வலுவிழந்து இருக்கின்றோம், எனவே இதைப்புரிந்து கொண்டு எல்லா தளங்களிலும், நமக்கான பிரதிநிதத்துவத்தை நமக்குள் பாகுபாடின்றி பகிர்ந்து கொண்டு தொழிற்சங்கங்களை கட்டி எழுப்பினால் அரசியல் அதிகாரம் சாத்தியம்!
அதற்கு நடந்து முடிந்த பெல் நிறுவன தேர்தலே முன்னுதாரணம்!!
________________
தோழமையுடன்
பொதுச்செயலாளர்
ஆதித்த்கமிழர் பேரவை.


--

என்றும் சாதி ஒழிப்புப் பணியில் 
ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு

வலைத்தளம்: www.aathithamizharperavai.com
வலைப்பூ: www.atptamilnadu.blogspot.com
முகநூல் பக்கம்: https://www.facebook.com/aathithamizhar.peravai

Post a Comment

Powered by Blogger.