Halloween party ideas 2015
.

நேற்று ஆரம்பமான இவர்களின் போராட்டத்திற்கு இதுவரையில்  தமிழக  அரசோ அரச அதிகாரிகளோ இவர்களை பார்த்து இவர்கள் கோரிக்கைகளை செவிமடுக்கவும் இல்லை  இறங்கவோ  ஏறெடுத்து கூடப் பார்க்கவில்லை.

பல ஆண்டுகளாக ஆடுமாடுகள் போல் சிறப்பு முகாம்களுக்குள் அடிப்படை மனித உரிமைகளை கூட வழங்காமல்  அடைத்து வைத்திருக்கும் தமிழக அரசுக்களின் நயவஞ்சனையை கண்டிப்போம்.

நம்புங்கள் இவர்கள் வதை பல ஆண்டுகள் அடைக்கப்பட்டு இருப்பது எதோ ஒரு வேற்றுக் கிரகத்தில் அல்ல. அன்னை தமிழகத்தில் !!!! அன்னையாக காக்கும் தாய் தமிழக உறவுகள் வாழும் மண்ணில் மனித உரிமைகளை மிதித்து ஈழ அகதிகளை வதைக்கும் சித்திரவதை முகாம்கள்!!!!! அன்னை தமிழக உறவுகளே சிறப்பு முகாம்களை மூட உதவுகள்...அரசை கண்டித்து போராட முன்வாருங்கள்!

விடுதலை வேண்டி சாகும் வரை உண்ணா நோன்பிருக்கும்  திருச்சி சிறப்பு முகாமில் போராடிக்கொண்டு இருக்கும்  4 உறவுகளினதும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Post a Comment

Powered by Blogger.