Halloween party ideas 2015
.

தன்னை எந்த விதத்திலும் சமரசம்  செய்து  கொள்ளாமல் கருஞ்சட்டை அணிந்த நாள் முதல் எந்த நிலை ஆனாலும் தன்னிலை மாறாத வெண்தாடி வேந்தரின் (தந்தை பெரியாரின்)கொள்கை தொண்டராக இன்றுவரை பண்பில் எந்த மாற்றமும் இல்லாத மக்கள் தொண்டரான  இன்று பிறந்த நாள் காணும் ஐயா கொளத்தூர்மணி ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

தலைவர் பிரபாகரன் பக்கத்தில் நின்று ஒரேயொரு ஒரு  படம் எடுத்த  தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் நாடில் அரசியல் செய்கிறாவர்கள்மத்தில் தன்னை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் கருஞ்சட்டை அணிந்த நாள் முதல் எந்த நிலை ஆனாலும் தன்னிலை மாறாத வெண்தாடி வேந்தரின் கொள்கை தொண்டராக இன்றுவரை பண்பில் எந்த மாற்றமும் இல்லாத மக்கள் தொண்டரான இன்று பிறந்த நாள் காணும் ஐயா கொளத்தூர்மணி ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

மேலும்:
தனக்கு தானே விளம்பரம் செய்துகொள்ளும் ஈழ பிண வியாபாரிகளுக்கு பின்னல் செல்லும்  இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு  , ஐயா கொளத்தூர்மணி அவர்களுக்கும் தமிழ் ஈழத்துக்கும் இடையே உள்ள நெருக்கம் பற்றிய சிறுகுறிப்பு.

கொளத்தூர்மணி ஐயா1982ஆம் ஆண்டு ஈழ விடுதலைப் போராளிகளின் அறிமுகம் கிடைக்கப் பெற்றார்.

1983 இறுதியில் மதுரையில் நடைபெற்ற ஈழ விடுதலை ஆதரவு மாநாட்டில் பெருமுனைப்புடன் பங்காற்றினார்

இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு இராணுவ பயிற்சி அளிக்க அவர்களை இந்தியாவிற்கு வரவழைத்த போது, ஏறத்தாழ 3 ஆண்டுகள்  இவரது சொந்த நிலத்தில் நடைபெற்றது தமிழீழ விடுதலைப் புலிகள் பயிற்சி அளிக்கப்பட்டது .

பயிற்சி பெற்ற புலிகளை மதிப்பீடு செய்ய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அங்கு தங்கியிருந்த போது இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு மலர்ந்தது.

மாவீரர் நாளுக்கு மேதகு பிரபாகரனால் அழைக்கப்பட்ட ஒரே தலைவர் கொளத்தூர்மணி ஐயா அவர்கள் தான் .

1989 டிசம்பர் 9-ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் இருந்த வன்னிக்காட்டிலிருந்த பயிற்சி முகாமில் 10 நாட்கள் அவரோடிருந்தார்.

     மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வதந்தி நிலவி வந்த காலகட்டங்களில் கொளத்தூர்மணி ஐயா தலைவர் மேதகு  பிரபாகரனைச் சந்தித்து வந்ததை புகைப்படத்துடன் அளித்த பேட்டியின் மூலமாகத்தான் மக்கள் அந்த வதந்தி பொய் என்பதை அறிந்தனர்.
சிறைவாசம்

       நீண்ட காலம் சிறையிலிருந்தவை மட்டும் இங்கே  பட்டியலிடப்பட்டுள்ளன. 8.2.1991 – 27.4.1991 (விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது)
28.5.1994 – 2.1.1995 (விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக அடக்குமுறைச் சட்டமான தடா ச்ட்டத்தின் கீழ் கைது)

10.9.1995 – 8.9.1996 (வேலூர் சிறப்பு முகாமிலிருந்து சுரங்கம் வெட்டி போராளிகள் தப்பியதற்கு உதவியாதாக போடப்பட்ட வழக்கில் கைது; ஒராண்டு சிறை). இவர், நீதிமன்றத்தில் தானே வாதாடி குற்றமற்றவர் என நிரூபித்து விடுதலையானார்.

8.3.2002 – 15.4.2003 (வீரப்பன் வழக்கில் அடக்குமுறைச் சட்டமான தடா ச்ட்டத்தின் கீழ் கைது. ஓராண்டுக்கு மேலாக சிறை)

28.2.2009 – 4.5.2009 (திண்டுக்கலில் புலிகள் ஆதரவு உரைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது)

2.11.2013 – 15.2.2014 (இலங்கையில் நடைபெறவிருந்த காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதற்காக சேலத்திலும், சென்னையிலும் நடந்த இரு வேறு வன்முறை நிகழ்வுகளில் இவரையும் இணைத்து வழக்கு புனையப்பட்டது. அதனால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது)

கிட்டத்தட்ட தமிழ் ஈழ விடுதலைக்காக 32 வருடங்கள் தன்னை அர்ப்பணித்த ஒரு தலைவர் ஐயா  கொளத்தூர்மணி
- தோழர் விஜி, காஞ்சி மக்கள் மன்றம் 

Post a Comment

Powered by Blogger.