Halloween party ideas 2015
.

வணக்கம்,

ஐ.நா அமைர்வுக்கு முன்பு விவாதங்கள் நடை பெற வேண்டும் என்றாலும் அதனை சிதைக்கும் விதமாக தான் மே 17 கும்ப
ல் மாற்ற முயன்று வருகிறது. நான் இரண்டு வருடம் முன்பு திருமுருகனின் ஈழ துரோகம் மற்றும் இந்திய ஆதரவு நிலையை எதிரித்து நான் வெளியேறினேன்.  

தோழர் அருள் ரத்தினம் கூறிய கருத்தின் சில பகுதிகளை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்றாலும் அவரை நோக்கிய தனி நபர் தாக்குதல் மற்றும் பசுமை தாயகத்தின் மீதான அவதூறு தாக்குதலை மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

துரோகத்தின் தந்தையும், மூன்று கருணாநிதியின் சதிக்கு ஒப்பான செயல்களை திருமுருகன் செய்திருக்கிறார். நேர்மை பற்றி பேச அறவே தகுதியில்லாத நபர் திருமுருகனும் அவர் ஆட்டு மந்தை கும்பலும். பொய் கூறுதல், தவறான வழிநடுத்துதல் என்று இந்த இனம் சந்தித்த பின்னடைவுகள் ஏராளம். 

உதாரணமாக இரண்டை மட்டும் கூறுகிறேன் 

1. ப்ரேமென் தீர்ப்பாயத்தில் இந்தியாவை காத்து புலிகளை மறைமுகமாக குற்றம் சாட்டியவர். புலிகளின் கப்பலை அழிக்க இந்தியா உதவியது என்று கூறுவதட்கு பதில் புலிகளின் கப்பலை எதிர்க்க என்று சண்டையில் ஈடுபடாத புலிகள் மீது குற்றச்சாட்டு வைத்து இந்தியாவை பாதுகாத்தது  

2. போர் குற்ற ஆதாரங்களை OISL கேட்ட பொழுது, அதனை பல்வேறு வகையில் திடைத்திருப்பி ஆதாரங்களை சென்றடையாமல் செய்தது. ஐ.நா ஒரு அயோக்கிய அமைப்பு அங்கு எந்த தீர்வும் கிடைக்காது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து தமிழகம், ஈழம் மற்றும் புலத்தில் இருந்து ஆதாரங்கள் சமர்பிக்காத வண்ணம் பார்த்து கொண்டது என்று பல நுணுக்கமான துரோகங்கள்

ஐ.நா நமக்கு தீர்வு தராது என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியது நமது கடமை. தமிழர்களுக்கு என்று ஒரு ஆவண களஞ்சியம் தற்போழுது இல்லை. சிங்கள அரசு புலிகளுக்கு எதிராக பல ஆவணங்களை ஐ.நாவில் சமர்பித்துவிட்டது. இனப்படுகொலை நடந்த ஈழத்தை அடுத்து தமிழகத்தில் தான் பெரிய சனம் கொண்ட முகாம் இருக்கிறது. இங்கு இருந்து தான் ஆதாரங்களை திரட்டி ஐ.நாவில் சமர்பித்திருக்க வேண்டும். அதனை செய்யாத இந்த கும்பல் இன்று பேச என்ன தகுதி இருக்கிறது      
    

ப்ரேமென் தீர்ப்பாயத்தில் இந்தியாவை காக்க பல பொய்கள், அயோக்கியத்தனம் செய்த திருமுருகன் பல நேர்மையாக உழைத்தவர்களின் உழைப்பை திருடி மிக நுணுக்கமாக இந்தியாவை காக்க போராடியதை தோழர் உமர் தனது 424 பக்க அறிக்கையில் விவரித்திருக்கிறார். இது வரை இதுக்கான பதிலை சொல்ல முனையாமல் மீண்டும் மீண்டும் ஈழ தமிழர்களை தனது மாயாஜால பேச்சு மூலம் ஏமாற்றி வருகிறார். இவரது பேச்சு மற்றும் செயல் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பது போல இருக்கும் ஆனால் எங்கு எதிர்க்க வேண்டுமோ அங்கு தந்திரமாக விளையாடுவதில் வல்லவர்கள். உடன் இருந்து அவதானித்தால் மட்டுமே அதனை அறிய முடியும். மேலும் ஈழ தமிழர்கள் இந்த அயோக்கியர்களை கொடுக்கும் அங்கீகாரம் தான் இவர்களின் மூலதனம். ஆனால் இவர்களை தாண்டி இன்று ஈழ விடுதலையை நேர்மையான தமிழர்கள் கையில் எடுத்து விட்டார்கள். ஐ.நா வில் இனிமேல் எமது நேர்மையான குரலே ஒலிக்கும். 


தோழர் அருள் ரத்தினம் மற்றும் பசுமை தாயகம் போன்ற அமைப்புகள் திருமுருகன் மற்றும் அவரின் ஆட்டு மந்தை கூட்டதிற்கு பதில் கூற எந்த தேவையும் இல்லை. ஐ.நா தொடர்பான வேலைகள் நிறைய இருக்கிறது அதனை கவனிப்பதால் நம்மால் சில நகர்வுகளையேனும் செய்யலாம்.  இவர்கள் தோல்வியுற்ற இந்திய அபிமானிகள். இவர்களின் இந்திய ஆதரவு அரசியலை மக்கள் என்றோ புரிந்துவிட்டார்கள், புரியாதவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.  
   
          
பசுமை தாயகம் அமைப்பை ஐ.நாம் வில் இருந்து நீக்க வேண்டும் என்று உழைக்கும் மே 17 கும்பலை உலக தமிழர்கள் அனைவரும் தமிழர் விரோத இந்திய அரசின் ஆதாரவு பெற்ற கும்பலை புறம்தள்ள முனைந்தால் மற்றுமே ஈழ விடுதலை நோக்கி சிறிதேனும் நகர முடியும் 

நன்றி 

ரதிஷ் குமார் 


2016-06-22 4:52 GMT-04:00 ARUL Rathinam arulgreen@gmail.com [tamil_araichchi] <tamil_araichchi@yahoogroups.com>:
 

மே 17 இயக்கத்தின் கட்டுக்கதை: பசுமைத் தாயகம் இனப்படுகொலையை மறைக்கிறதா?

//”இனப்படுகொலை என்ற மாயமான்” – பசுமைத் தாயகத்தின் சதி அரசியல்// - என்கிற ஒரு மின்னஞ்சலை மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலருக்கும் அனுப்பியுள்ளார்கள். அதில், ஏதோ இனப்படுகொலை என்கிற வார்த்தையை பசுமைத் தாயகம் எதிர்ப்பதுபோல - இட்டுக்கட்டி எழுதியுள்ளார்கள்.

ஆனால், இந்த 'மூடர்கூடம்' மறைக்கும் உண்மை என்னவென்றால், "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை" என்கிற வார்த்தையை ஐநா மனித உரிமைப் பேரவையில் மிக அதிகமுறை பயன்படுத்தியுள்ள ஒரே அமைப்பு பசுமைத் தாயகம் மட்டும்தான். 

பசுமைத் தாயகம் சார்பில் 2009 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளிலும் (Written statement) பேச்சுகளிலும் (Oral statement) "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை" என்கிற வார்த்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஐநா ஆவணங்களில் தேடுவோர் எளிதில் காண முடியும்.

அப்பட்டமான கட்டுக்கதை

மே 17 இயக்கத்தின் பித்தலாட்ட பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக - //2015 முதல் இனப்படுகொலை என்பதை பசுமைத் தாயகம் முற்றிலுமாக மறைத்து வருகிறது//- என்று கூறியுள்ளார்கள்.

"2015 க்கு முன்பு அயோக்கிய அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்தாலும் கூட, இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்த பசுமைத் தாயகம், 2015 இலிருந்து இனப்படுகொலை என்பதை முற்றிலுமாக மறைத்து அல்லது மறுத்து வருகிறது." - என்று கூறுகிறது மே 17 இயக்கம்.

இந்தக் கூற்று எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பதை அறிய பின்வரும் செய்தியைத் தருகிறோம்.

-------------------------------------------
கடந்த ஆண்டு (2015) ஐநா மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத்தில் பசுமைத் தாயகம் சமர்ப்பித்த அறிக்கை (Written statement), செப்டம்பர் மாதம் 8 ஆம் நாள் ஐ.நா.வால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மிகத் தெளிவாக "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை" என குறிப்பிடப்பட்டுள்ளது. (ஐநா ஆவண எண்: A/HRC/30/NGO/125. இதனை ஐநாவின் இணையதளத்தில் நேரடியாகக் காணலாம்: http://ap.ohchr.org/documents/alldocs.aspx?doc_id=25440

செப்டம்பர் 2015 இல் ஐநா அவை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆவணத்திலேயே - இனப்படுகொலையை பசுமைத் தாயகம் வலியுறுத்தியுள்ள நிலையில் - "2015 முதல் இனப்படுகொலை என்பதை பசுமைத் தாயகம் முற்றிலுமாக மறைத்து வருகிறது" என்று மே 17 இயக்கம் தற்போது பரப்புரை செய்கிறது. 

அந்த அமைப்பின் உண்மை நோக்கம் என்ன?

தற்போது ஜெனீவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தில், 2015 தீர்மானத்தின் மூலம் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட நிலைமாற்று நீதி (Transitional Justice) பொறிமுறையை இலங்கை அரசு பின்பற்றவில்லை என்பது விவாதமாக எழவுள்ளது. 

இதனை திசைதிருப்பவே - மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் குழுப்பங்களை ஏற்படுத்த முயல்கிறார்களோ, என்று ஐயம் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், எப்போதெல்லாம் - ஐநாவில் இலங்கை விவகாரம் சூடுபிடிக்கிறதோ - அப்போதெல்லாம் ஏதாவது ஒரு குழுப்பத்தை இவர்கள் கிளப்புகிறர்கள் என்பது கடந்தகால வரலாறாக உள்ளது.

-------------------------------------------
பசுமைத் தாயகத்தின் 2015 செப்டம்பர் அறிக்கை:
-------------------------------------------
ஐநா ஆவண எண்: A/HRC/30/NGO/125

The Secretary-General has received the following written statement which is circulated in accordance with Economic and Social Council resolution 1996/31.

Written statement submitted by Pasumai Thaayagam Foundation, non-governmental organizations in special consultative status

....The mandate of the OISL is not limited to war crimes but also includes international crimes, which is further defined in Article V of the Rome Statute of the International Criminal Court as consisting of the crime of genocide; crimes against humanity; war crimes; and the crime of aggression. Article II of the 1948 Genocide Convention defines genocide to mean “any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group as such.” By this very definition of genocide, the Sri Lankan State, controlled almost exclusively by the Sinhala ethnic group, will not be able to adjudicate any charge of genocide by the Sri Lankan State against the Tamils, whether as part of a hybrid mechanism or a domestic mechanism. Therefore, an outside, independent international mechanism is essential for a fair adjudication of the crimes which fall within the purview of the mandate. 

.....The Sri Lanka's constitution has no provisions to investigate War Crimes, Crimes against Humanity, Genocide or mass atrocities. The constitution does not allow retrospective legislation to be passed either . Therefore, it is technically impossible to investigate the allegations of war crimes, crimes against humanity and crime of Genocide under the same international norms within the domestic process. 

The Tamil people in the island of Sri Lanka have lost faith in the domestic institutions. The ongoing structural genocide has been a result of complex political and economic policies of the Sri Lankan state. On 10 February 2015 the Northern Provincial Council (NPC) unanimously passed a resolution stating what happened to the Tamils in Sri Lanka is Genocide . This was the lived experience of the Tamils in the island of Sri Lanka and elsewhere

The following extract from the Northern Provincial Council resolution sums up the need for an international tribunal in the island of Sri Lanka:

“The obligation to prevent and punish genocide under the Genocide Convention is not a matter of political choice or calculation, but one of binding customary international law. This Council urges OISL to comprehensively investigate and report on the charge of genocide in its submission to the UN Human Rights Council in March 2015. The UN Security Council should refer the situation in Sri Lanka to the International Criminal Court for prosecutions based on war crimes, crimes against humanity, and genocide.” 

Pasumai Thaayagam Foundation would like to highlight the member States of the plight and sufferings of the victims, who have been waiting for a long a time for justice and accountability. Any sort of domestic or hybrid mechanism will de-rail the genuine accountability process. Only an international tribunal to investigate crimes under international law that includes war crimes, crimes against humanity and the crime of genocide in the Island of Sri Lanka can deliver sustainable peace, address impunity and non-recurrence of the crime in the future.
-------------------------------------------
(குறிப்பு: மே 17 இயக்கத்தின் பசுமைத் தாயகம் குறித்த அவதூறு ஒரு கட்டுக்கதை என்பதை நாம் இங்கே நிரூபித்துள்ளோம். ஆனால், அவர்கள் இதற்கு பதில் சொல்லாமல், புதிதாக கட்டுக்கதைகளைக் கட்டுவார்கள்)

இணைப்பு: ஐநா அவையால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள பசுமைத் தாயகம் அறிக்கை 2015
__._,_.___


Posted by: Rathish <rathismail@gmail.com>        

Post a Comment

Powered by Blogger.