Halloween party ideas 2015
.

நேற்று திருச்சியில் நடைபெற்ற #தந்தை_பெரியார்_திராவிடர்_கழகத்தின் திட்டக்குழு மற்றும் மாணவர் அமைப்பிற்கான செயற்குழுவும் நடைபெற்றது..

திட்டக் குழுவின் உறுப்பினர்களான அண்ணன் ஆறுச்சாமி, தோழர் மனோகரன்,தோழர் கருமலையப்பன் அகியோரும்,,,தோழர் சீனி விடுதலையரசு,தோழர் வின்சன்ட் ஆகியோரும்,,,பொதுச் செயலாளர் கு.ரா அவர்களும் அமைப்பின் துணை அமைப்பாக மாணவர் அமைப்பை வடிவமைப்பது பற்றி ஆலோசித்தனர்..

கழகத்திற்கான மாணவர் பிரிவு பற்றி ஆலோசித்த பிறகு இனி கழகத்தின் மாணவர் அமைப்பு  " #சுயமரியாதை_மாணவர்_இயக்கம் " என்ற பெயரில் இயங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் #STUDENTS_ORGANIZATION_OF_SELFRESPECT
என்ற பெயரில் அழைக்கப்படும்.
சுருக்கமாக #SOS என அழைக்கப்படும் என கழக தலைமையால் முடிவு செய்யப்பட்டுள்ளது..

நேற்றைய கூட்டத்திற்கு வர முடியாத தோழர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்,,,

தற்போது மாணவர்களாக உள்ளோரும்,,படித்து முடித்தோரும்,தற்போது பள்ளி கல்லூரிகளில் படிக்காவிட்டாலும்,,இதில் இணைந்து செயல்பட விரும்புவோர் இணையலாம்,,,

ஐஐடி விவகாரம்,ரோகுத் வெமூலா மரணம்,கன்னய்யா குமார் விவகாரம் என அனைத்திலும் தலையிட்டு ,,ஆளும் பாஜக அரசின் துணையோடு இந்தியா எங்கும் வேர் பரப்பலாம் எனத் திட்டத்தோடு செயல்படும் ABVP ,,

தமிழகத்திலும் தனது வேரைப் பரப்ப முயன்று தீவிரமாக முயன்று வருகிறது..

அதை முறியடித்து,,ABVP என்ற காவி பயங்கரவாத மாணவர் அமைப்பின் வளர்ச்சியை  பெரியார் பூமியில் முடக்க SOS தனது செயல்பாட்டை வடிவமைக்க உள்ளது..

உணரவுள்ள தோழர்கள்,இதில் இணைந்து தங்கள் பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..

தொடர்புக்கு-9842839306

Post a Comment

Powered by Blogger.