Halloween party ideas 2015
.

திருக்குறள் எண் 314 ஐ பின்பற்ற தமிழக முதல்வர் ஜெ.ஜெ.வுக்கு வேண்டுகோள்...

சரித்திரம் படைத்த சாதனையாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தை

வெற்றிமேல் வெற்றி பெறும் நிலைக்கு உயர்த்திய தாங்கள்

புதிய சட்ட மன்ற நடவடிக்கைகளில்

உங்களை வானளாவ புகழ்வதை மட்டுமே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் பிரதான கடமையாக எண்ண விடாமல்

பணியாற்றுமாறும்,

எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கோரிக்கைகள் பற்றிப் பேச அனுமதித்து,

சிறந்த சட்டமன்றமாக இயங்க வையுங்கள்.

அதிகாரத்தை பரவலாக்கி ,
பொது மக்கள் நலம் பேண
தேவையான உடனடி முடிவுகள் எடுக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுமதியுங்கள்.

முதல்வர் குறை கேட்கும் பிரிவில், 100% தீர்வு எட்ட ஏற்பாடு செய்யுங்கள்.

மாவட்டத்தில் திங்கள் தோறும் பொதுமக்களை பிச்சைக்காரர்களைப் போல நீண்ட வரிசையில் மணிக்கணக்காக நின்று காத்திருக்க விடாமல்,

மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலம் மனுக்களைப் பெற்று குறை தீர்க்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்திரவிடுங்கள்.

அனைத்து தரப்பு மக்களும் மகராசி என உங்களை வாழ்த்தும்படி செயல்படுங்கள்.

புரட்சித்தலைவர் உழைப்பில் வளர்ந்தது தான் தி.மு.க. என்பதை மறவாமல்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண , நன்னயம் செய்துவிடல் என்னும் திருக்குறளுக்கு ஏற்ப,

எதிர்க்கட்சியை  எதிரிக்கட்சியாக பாவிக்காமல்

பெருந்தன்மை காட்டுங்கள்.

தீமைக்கு தீமை செய்வது மனித நிலை.

நன்மைக்கு தீமை செய்வது
விலங்கு நிலை.

தீமைக்கு நன்மை செய்வது

தெய்வ நிலை..

ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியத்தில்

கொடுங்கோலனான சர்வாதிகாரிக்கு

நன்மை செய்த எம்.ஜி.ஆர் போல

தெய்வ நிலையில் பணியாற்றுங்கள்.

மென்மேலும் புகழ் பெறுங்கள்...

அத்துடன் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161 ஆவது பிரிவை

பயன்படுத்தி இராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவித்து

உலக தமிழர்கள் மனங்களில்

மங்காப் புகழடையுங்கள்....

Post a Comment

Powered by Blogger.