Halloween party ideas 2015
.


16.05.2016 அன்று நடந்து முடிந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் முதலமைச்சாரக வெற்றி பெற்றமைக்கு ஈழத்தமிழர்கள் சார்பாகவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பாகவும் தமது வாழ்த்துக்களை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துக்கொள்ளுகின்றது.

இந்த வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்த தமிழகத்து மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

ஈழத்தமிழர்களது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கும், இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வுக்கும் ஜெயலலிதா அவர்களின் வெற்றி மிக முக்கியம் வாய்ந்ததாகும். இதனை நாங்கள் தேர்தலுக்கு முன்னர் மே 10, 2016 அன்று வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா அவர்களின் வெற்றிக்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் தமிழகத்து உறவுகளிடம் கேட்டிருந்தோம்.

ஆகவே ஜெயலலிதா அவர்களின் வெற்றி எமக்கான வெற்றியாக எடுத்துக்கொள்ளுகின்றோம். மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னர் ஈழத்தமிழர்களின் இன்னல்களை தீர்ப்பாற்காக விரைவாக செயலாற்றுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

மேலும் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளை அவர் மேற்கொள்ளும் அனைத்துக் கருமங்களும் வெற்றியடையவும், அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும் வண்ணமும் எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்திக்கின்றோம்.


நன்றி

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு




 


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்; ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.


 


Post a Comment

Powered by Blogger.