Halloween party ideas 2015
.

முதல் தமிழ் நூல்கள் எப்பொழுது அச்சிடப்பட்டன?

1554 ஆம் ஆண்டு - 16 ஆம் நூற்றாண்டில் முதல் தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டன. ஹென்றிக் ஹென்றிக்ஸ் என்பவர் அச்சிட்டார். எங்கே அச்சிடப்பட்டது என்றால், கிறிஸ்தவ பாதிரிமார்கள் வெள்ளைக்காரர்கள்தான் அச்சுக்கூடத்தைக் கண்டுபிடித்து, அச்சடித்து நமக்குத் தமிழ் நூல்களைக் கொடுத்தனர். வெள்ளைக்காரர்கள் மட்டும் வராமல் இருந்திருந்தால், நாமெல்லாம் காட்டுமிராண்டிகளாக, கடைசிவரையில் இருட்டில்தான் இருந்திருப்போம்.

அவர்கள் இல்லையென்றால், நமக்கு வாழ்வு கிடையாது. நம்முடைய வரலாற்று ஆசிரியர்களே இதனை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதை சரியான கண்ணோட்டத்தோடு, பாடப் புத்தகங்களில், வகுப்புகளில், இளம் தலைமுறையினர்களுக்கு சொல்லவேண்டும்.

இன்றைக்கு இளம் தலைமுறையினர்கள் இணையத்தைப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் மூலாதாரம் எங்கே? இதற்கு விதை எப்பொழுது போடப்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

நம்மைப் படிக்கக் கூடாது என்று சொன்னவர்கள் நம்மை ஆண்ட அரசர்கள்!

முதன்முதலில் எல்லோரும் படிக்கக்கூடிய பள்ளிக்கூடத்தை நிறுவியது  யார்? 1706 ஆம் ஆண்டு - 18 ஆம் நூற்றாண்டில் - வெள்ளைக்காரர்களான பாதிரிமார்கள் வந்தபொழுது - மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள தரங்கம்பாடிக்கு - டென்மார்க்காரர்கள் டேனிஷ் பாதிரியார்கள் வந்தார்கள். சீகூன் பால்கு என்பவரும், புரூட் சே என்கிற பாதிரியாரும் சேர்ந்து, பார்ப்பனர் அல்லாதாருக்கு - அதுவரையில் நமக்குப் படிப்பறிவே கிடையாது - நம்மைப் படிக்கக்கூடாது என்று தடுத்து வைத்திருந்தார்கள். நம்முடைய ராஜாக்களான சேரன், சோழன், பாண்டியன், பல்லவர்கள் செய்யவில்லை. வெள்ளைக்காரர்களான பாதிரிமார்கள் இந்தியாவிற்கு வந்தார்கள் பாருங்கள் - அவர்களுக்கு முன்பு - நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு சொல்லிக் கொடுத்த பெருமை சமணர்களுக்கும், பவுத்தர்களுக்குமே சாரும்.

வேத மார்க்கத்தை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் - அது ஒரு நெறி - பின்னாளில் அது மதமாக மாற்றப்பட்டது. அவ்வளவுதானே தவிர, சமணம் என்று பெயர். மகாவீரும். அதேபோன்று புத்தரும். அவர்கள்தான் நமக்கு முதலில் பள்ளி வைத்துக் கொடுத்தார்கள். பெண்கள் படிக்கலாம் என்று சொன்னவர்களும் அவர்கள்தான். அதற்கடுத்து வெள்ளைக்காரர்கள்.
17.5.2016 அன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேசு வரி பேட்டையில் உள்ள லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரையிலிருந்து .

Post a Comment

Powered by Blogger.