Halloween party ideas 2015
.


இன்று 17/05/2016 மாலை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் அரங்கில் முல்லிவாய்க்கால் முடிவல்லை என்கிற புத்தக வெளியீடு நிகழ்வு பற்றிய அழைப்பிதழ் இணையத்தில் பார்க்க நேரிட்டது.

அந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் சீமான்,மணியரசன்,வெள்ளையன்,திருச்சி வேலுச்சாமி,கெளதமன்,மகேந்திரன்,காசி ஆனந்தன்,மணிவண்ணன், உமர்,செம்பியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றுவோராக இருந்தது.

இதில் ஆச்சிரியம் என்னவென்றால் பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.இவர் 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது  தொடர்பாக பல்வேறு நாடுகளில் இந்த இனப்படுகொலை சம்மந்தமான விசாரனை நடக்கும் பொழுது டப்ளிங் நீர்ப்பாயத்திலும் விசாரனை நடைபெற்றது.இந்த விசாரனை மிகவும் முக்கியமான விசாரனையாகவும் இருந்த நேரத்தில் அங்கு இந்த பால்நியூமன் விடுதலைப் புலிகளுக்கும்,ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் புலிகள் குழந்தகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும் அதற்கு பயந்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவதாகவும்,அதையும் மீறி புலிகள்  குழந்தைகளை தூக்கிக் கொண்டு போய் கட்டாயமாக சேர்த்தாகவும் அவ்வாறு திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக் கலைப்பை விடுதலைப் புலிகள் செய்ததாகவும் மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் ,விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும் பதிவு செய்திருந்தார் என பலர் பதிவு செய்திருந்தனர்.

இச்செயல் புலிகள் எந்த மக்களுக்காக உயிரை கொடுத்து போராடினார்களோ அவர்களுக்கான நீதியை பெறவும்,தமிழ்ஈழத்தை பெற்றுத்தரவும் உருவாக்கிய கட்சி என கூவிக்கொண்டு தமிழகத்தில் இனவெறியை தூண்டி ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளர் பதிவு செய்தது அவர்களின் கட்சி தலைமைக்கு தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை.இது சம்பந்தமான கேள்விகள் எழும் வேலையில் பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது.
ஆதாரம் https://m.facebook.com/story.php?story_fbid=195627727497262&id=100011501076165

மேலும் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒரு பிரிவான வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்டி நாயக்கர் என்னும் ஆவணப்படத்தில் தமிழர்களை கொன்றது சிங்களர்கள் இல்லை நாயக்கர்கள் தான் ஒரு அப்பட்டமான பொய்யையும்,வரலாற்று பிழையையும் உருவாக்கி தமிழீழ தேசியத்தரைவர் பிரபாகரன் மற்றும் அவர்களோடு இருந்த மற்ற தலைவர்களால் இத்தனை வருடங்களாக கண்டுபிடிக்க முடியாத உண்மையை வெளிகொண்டு வந்து அவர்களை விட இவர்கள் (சீமான்) அறிவானவர் என்கிற மாதிரியான  மாயையை கொண்டு வருகின்றார்.இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில் காசிஆனந்தன்,கெளதமன்,தோழர் மகேந்திரன் போன்றோர் அவரோடு (பால்நியூமன்)ஒரே மேடையில் அமர்வது,இத்தனை நாள் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று மேடைகளில் உணர்ச்சி பொங்க பேசியது அனைத்தும் வெறும் வசனங்கள் தானா என்றும் இதன் மூலம் தாங்கள் அனைவரும் அந்த பிழைப்புவாதிகளின் அறிக்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற கேள்வியை இளையதலைமுறை உங்களிடம் வைக்கிறது.

மேலும் இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு இல்லாது விழா ஏற்பாட்டாளர்கள் பிரச்சனைகுரியவர்கள் தவிர்க்கவேண்டும் அப்படி முடியாமல் போகும் பட்சத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் அந்த நிகழ்வை புறக்கணிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் இல்லையேல் ஏற்கனவே சீமானின் முகத்திறையை புலிப்பார்வையில் பாடல் வெளியீட்டில் கிழித்தது போல் மாணவர்கள் மற்றும்  இளைஞர்கள் நாளை உங்களிடம் இதே கேள்விகளோடு அரங்கில் சந்திக்க வேண்டி வரும் என்பதினை தெரிவித்துக்கொள்கிறோம்......

மாறன் தாணப்பன் 
ஒருங்கிணைப்பாளர்
இளையதலைமுறை கட்சி
Itktamilnadu@gmail.com
8124 63 8124


Post a Comment

Powered by Blogger.