Halloween party ideas 2015
.

இன்று 29/05/16 கரூரில் நடைபெற்ற

தமிழ்நாடு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்

கரூர் தமிழ் இராஜேந்திரன்

பங்கேற்றார்

விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், கள்ளக்குறிச்சி , அந்தியூர், கிருஷ்ணகிரி , திருப்பூர், கோவை, பொள்ளாச்சி ,மணப்பாறை , சென்னை , புதுக்கோட்டை , ஈரோடு, சேலம், திருச்சி , நெல்லை, மதுரை, உட்பட்ட பல பகுதிகளில் இருந்து சான்றோர்கள் வந்தனர்.

நான் வரவேற்புரை ஆற்றி, சமீபத்தில் மறைந்த தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் , நந்தன் இதழ் ஆசிரியர்  , அனா ரூனா @ அருணாசலம் ஐயா நினைவாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினேன்.

தமிழ்க் காப்புக் கழக தலைவர் திருவள்ளுவன் இலக்குவனார் அனுப்பிய செய்தி அரங்கில் படிக்கப்பட்டது.

உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும்,

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்

சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு மீளப் பெற ஏதுவாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

உயர்நீதிமன்ற உத்திரவுக்கேற்ப
திருக்குறள் முழுவதையும் தமிழக மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

தூய தமிழில் பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு பரிசு தர வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் நடந்துவரும் ஆங்கில வழி பாடப்பிரிவை நிறுத்த வேண்டும்

1 முதல் 5 வகுப்புவரை தாய்மொழிக்கல்வியை கட்டாயப்படுத்த வேண்டும்..

என்பது உட்பட்ட பல தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன..

Post a Comment

Powered by Blogger.