Halloween party ideas 2015
.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

இது ஆசுகவி காளமேகப்புலவர் எழுதிய ஓரெழுத்தோர்மொழியாக அமைந்த பாடல்...! பாடல் முழுவதும் க வரிசையில் அமைந்திருப்பது இதன் சிறப்பு.

#பொழிப்புரை

காக்கையை ஆந்தை இரவில் வெல்லும். ஆந்தை காக்கையிடம் பகலில் தோற்கும். ஒன்றுக்கொன்று ஆகாது. அதனால் இவை போல இல்லாமல் நாடாளும் மன்னவன் கொக்கை போல இருக்க வேண்டும். கொக்கு சரியான இரை வரும் வரை காத்திருக்கும். அப்படி இருந்தால் தான், எதிரிகளிடமிருந்து தன் மக்களை அவனால் பாதுகாக்க முடியும்.

#விரிவுரை:

காக்கைக்காகா - காக்கைக்கு ஆகாது
கூகை - ஆந்தை
கூகைக்காகா - ஆந்தைக்கு ஆகாது
காக்கை - காக்கை

கோக்கு - கோவாகிய மன்னனுக்கு
கூ - கூவை அதாவது நாட்டை
காக்கைக்கு - காப்பதற்கு
கொக்கொக்க - கொக்கைப் போல இருக்க வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால்

கைக்கைக்கு - கைக்கு கை சண்டை போடும் பகையிடமிருந்து
காக்கைக்கு - தன் மக்களை காப்பதற்கு

கைக்கைக்கா கா = கைக்கு + ஐக்கு + ஆகா
ஐ - தலைவன்
கைக்கு ஆகா - தலைவனால் தன் கையால் செய்ய இயலாமல் போய்விடும்.

இப்ப மறுபடியும் பாடலை படியுங்கள். சொல்லழகும் சுவையழகும் புரியும்....🍇🍇🍇🍇🍇🍇 அன்புடன்..
வளையல் ராஜா..
⛱⛱⛱⛱⛱⛱

Post a Comment

Powered by Blogger.