Halloween party ideas 2015
.

தருண் விஜய்க்குப்  பாதுகாப்பளிக்க வேண்டும்    இந்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
------------------------------------------------  நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.தருண்விஜய் அவர்கள் கடந்த21-05-2016அன்றுகல்வீச்சுத்தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலித்துகளை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தார் என்பதற்காக சாதி ஆதிக்கச் சக்திகளால் தாக்கப்பட்டுள்ளார். உத்ரகாண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட கோவில்களில் தலித்துகள் வழிபாடு செய்யக்கூடாது என தடுக்கப்பட்டுள்ளதால் அதனை எதிர்த்து தருண்விஜய் அவர்கள் கோவில் நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைப் பொறுத்துக்கொள்ள இயலாத சாதியவாதசக்திகள் இத்தகைய கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர் நுலிழையில் உயிர்த்தப்பியுள்ளார். சாதியவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹாரிஷ் ராவத் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். எனினும் அவருக்கு முன்கூட்டியே உரிய பாதுகாப்பை வழங்கத்தவறியது ஏன் என்று விளங்கவில்லை. அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன் போதிய பாதுகாப்பு வழங்கிட  இந்திய அரசு முன்வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேணாடுகோள் விடுக்கிறோம். அத்துடன் தலித்துகள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள அனைத்துக் கோவில்களிலும் தலித்துகள் வழிபாடு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளவேண்டுமெனவும் உத்தரகாண்ட் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

Powered by Blogger.