Halloween party ideas 2015
.

எதிர் வரும் ஐந்து ஆண்டுகள்- களத்தில் இறங்கிப் போராட தி.மு.க.விற்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் தமிழக மக்கள். தி.மு.க.நினைத்தால் போராட்டத்தின் மூலம் உடனே முடிவு கட்டக் கூடிய பிரச்னைகள் நிறைய இருக்கின்றன.
.
1. சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க.. படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க..
2. மக்கள் அதிகாரத்தின் பாணியில் டாஸ்மாக்கை மூட..
3. மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அவசரச் சட்டம் கொண்டு வர...
4.லோக்-ஆயுக்தா கொண்டு வர..
5. நூறு நாள் வேலையை 150 நாட்களாக்க( கமிஷன் பிடித்தம் இல்லாமல்)
6. பால் கட்டணம், மின் கட்டணம் , பேருந்துக் கட்டணம் குறைக்க...
7. மீத்தேன், ஷேல் திட்டங்களைக் கைவிட...
8. கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட...
9. மீனவர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்ய...
10. அரசே மின் உற்பத்தியை அதிகப் படுத்த... அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்ய...
11. கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் திருட்டைத் தடுக்க...
12. காலியாகவுள்ள ஆசிரியர், அரசுப் பணியிடங்களை நிரப்ப..வீட்டுக்கு ஒருவருக்கு அரசுப் பணி என்பதை செயல்படுத்த..
13. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த...
14. கந்து வட்டிக்காரர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட கடுமையான சட்டம் கொண்டுவர..
... இப்படி நிறைய இருக்கிறது.
எப்பொழுதும் உழைக்கும் மக்களுக்கான போராட்டங்களில் முன்னணி வகிக்கும் இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும்...இன்னபிற ஜனநாயக முற்போக்கு அமைப்புகளும்,  ஒன்றிணைந்து களம் காண வேண்டிய காலம்தான் இனி வரும்காலம்.
ஏனெனில் -
' மரம் அமைதியை விரும்பினாலும், காற்று விடுவதில்லை'

எழுத்தாளர் முருகேசன் பதிவு..

Post a Comment

Powered by Blogger.