Halloween party ideas 2015
.

முகிலன் ,

ஒருங்கிணைப்பாளர்,

இயற்கை வளப் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு                         

தமிழ்நாடு சுற்றுசூழல்  பாதுகாப்பு இயக்கம் ,

அலைபேசி : 94436-75048, 75022 25658

மின் அஞ்சல் : sagayamaaivukkuzhu@gmail.com



 அனைவருக்கும் வணக்கம்.


தமிழகம் முழுக்க செயல்படும் சுற்றுசூழல் அமைப்புகள்- லஞ்ச ஒழிப்பு இயக்கங்கள்- மக்கள் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகள்- விவசாய அமைப்புகள்-  பல்வேறு போராட்ட இயக்கங்கள் இணைந்து,   மே-16, அன்று நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றி தீர்மானித்தோம் .


 

1.   தமிழகம் முழுக்க பல்வேறு போராட்டக் களங்களில் தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும்,சுற்றுசூழலைப் பாதுகாக்கவும்,  ஊழலை ஒழிக்கவும், தமிழ் மக்களின் உரிமைக்காகவும், விவசாயிகளுக்குஆதரவாகவும் இணைந்து போராடி வரும் அமைப்புகள்  மே-16, அன்று நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து அமைப்புகளும்   இயற்கை வளப் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு என்ற பொதுப்பெயரில் இயங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. குறிப்பான தொகுதிக்குள் அங்கு செயல்படும் அமைப்புகள் இயற்கை வளப் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு என்ற பெயருடன் தனது பெயரை இணைத்துக் கொண்டு மக்களிடையே செயல்படும்.


தமிழகத்தில் மக்களுக்கும், 

சுற்றுசூழலுக்கும் எதிராகவும், 

இயற்கைவளங்கள் கொள்ளையடிக்கவும் 

துணை நின்று  செயல்பட்ட

குறிப்பாக அணு உலைக்கு ஆதரவாக செயல்படும் 


 திருசெந்தூர்   சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்  

 சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் அவர்களை   

தோற்கடிக்க  வேலை  செய்வது எனவும்  முடிவு செய்யப்பட்டது.



இந்த தீர்மானத்தின் அடிப்படையில்  இன்று 07-05-2016  சனிக்கிழமை அன்று திருசெந்தூர் தொகுதி முழுவதும் பரப்பரை செய்கின்றோம்.


தொடர்ந்து அணு உலை எதிர்ப்பு போராட்டக் களத்திலும், தமிழகத்தின் சுற்றுசூழலை பாதுகாக்கும் பணியில் உள்ள நாங்கள் இப்பரப்புரையை மேற்கொள்கிறோம் 


இன்று காலை 8.30 மணிக்கு மணப்பாட்டில் பரப்புரை இயக்கம் எனது (முகிலன்) தலைமையில் தொடங்குகிறது .


இன்று 07-05-2016, மதியம் 12.00 மணிக்கு  வீரபாண்டிபட்டணத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்க உள்ளது.


முகவரி :

1/87, ரயில்வே ஸ்டேஷன் சாலை

(அஞ்சல் நிலையம் அருகில்)

வீரபாண்டிய பட்டணம் . 

அலைபேசி : 94436-75048


இன்று நடக்கும்  பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அவசியம் வருகை தந்து,   எப்போதும் எங்களது போராட்டத்தின்  பல்வேறு பணிகளை மக்களிடம் எடுத்து செல்ல எப்போதும் துணை நிற்கும்  ஊடக தோழமைகளான  தாங்கள்,  இந்த செய்தியை நாங்கள் கூறும் உண்மைகளை உலகிற்கு தங்களின் செய்தித்தாள்/இதழ்/ காட்சி ஊடகங்கள் வழியாக எடுத்து சென்று மக்களிடம் சேர்க்க உதவ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 


மக்களிடம் விநியோகிக்கும் துண்டறிக்கை  இணைக்கப்பட்டு உள்ளது.




Post a Comment

Powered by Blogger.