Halloween party ideas 2015
.




ஈழத்தில் எம் உறவுகளை கொல்வதற்காக ஆயுதமும் - ஆதரவும் தந்த 
காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கு 
கருப்புக் கொடி காட்டுவோம்! 
சென்னை பெருநகரக் காவல் ஆணையரை  சந்தித்தபின் மாணவர்கள் உறுதி!
போராட்ட இடம் நாளை காலை அறிவிக்கப்படும்!
 
பெரும் மரியாதைக்குரிய ஊடகத்துறை தோழமைகளுக்கு வணக்கம். 

தனது ரத்தக்கறை படிந்த கைகளோடு திருமதி சோனியாகாந்தி அவர்கள் வருகின்ற 5. 5. 2016 வியாழக்கிழமை அன்று சென்னை தீவுத்திடலில் நடக்கவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது மாணவர்கள் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்திற்கு அனுமதி பெறுவதற்காக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். 

அவர்கள் சரியான இடத்தை காட்டினால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இல்லையேல் திருமதி சோனியாகாந்தி அவர்கள் வரும் வழியில் நின்று கருப்புக்கொடி காட்டுவோம் என மாணவர்கள் உறுதி எடுத்திருக்கின்றனர். 

அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்வதோடு உணர்வுள்ள தமிழர்களும் கூட்டம் கூட்டமாக கலந்து கொள்ளும்படி உரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம். 

நாளை காலை இடம் எதுவென்று முகநூலில்(https://www.facebook.com/vagowthamandir) அறிவிக்கப்படும்.   

இப்படிக்கு,
தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு, மற்றும்
இயக்குனர் வ. கெளதமன். 
பேச: 98413 25400

Post a Comment

Powered by Blogger.