Halloween party ideas 2015
.

தாய்த்தமிழ் இணையம்

தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு பதில் என்ன ? பிரித்தானிய பிரதமர் வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !!

தமிழஞ்சலி

அருணாசலம் ஐயாவின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

நீருக்கான புதிய சுதந்திர போராட்டத்தை துவங்க போறேன் : 92 வயதிலும் போராட்டத்தை கைவிடாத போராளி

ச்சீமான்

தமிழ் கற்காதவர்களின் எதிர்காலம் வருந்தத்தக்கது!

ஆய்ஷா... ஆசிரியர்கள் கட்டாயம் படிக்கவும்

திமுகவின் கைகளில் கடிவாளம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

சாதி ஆணவக் கொலைகள்

தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு பதில் என்ன ? பிரித்தானிய பிரதமர் வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !!

தமிழஞ்சலி

அருணாசலம் ஐயாவின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

நீருக்கான புதிய சுதந்திர போராட்டத்தை துவங்க போறேன் : 92 வயதிலும் போராட்டத்தை கைவிடாத போராளி

HomeUnlabelledஅருணாசலம் ஐயாவின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

அருணாசலம் ஐயாவின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

Eve6:57:00 PM

A+A-PrintEmail

'ஆனாரூனா' என்று மதிப்பாக அழைக்கப்படும் மரியாதைக்;குரிய அமரர் நா. அருணாசலம் ஐயா அவர்களின் மறைவு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழினப்பற்று, மொழிப்பற்று மிக்கவரும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக தனது செல்வம், உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் அயராது செலுத்திய ஐயா அவர்களின் மறைவைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரம் கொண்டுள்ளோம் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அருணாசலம் ஐயா 'ஈழரத்தம் எங்கள் இரத்தம்' என்ற முழக்கத்துடன் ஈழத்தமிழரின் விடிவுக்காக தனது பொருளைக் கொடுத்தும், திட்டமிட்ட வகையில் பல்வேறு செயல்களை முன்னெடுத்தும் தமிழின உணர்வை ஊட்டியவர். ஈழத்தமிழரின் நிலையை எடுத்துரைக்கவும், தமிழினத்தை விழிப்புறச் செய்யவும் 'நந்தன்' என்னும் சஞ்சிகையை பல ஆண்டு காலம் பெரும் பொருள் செலவில் வெளியிட்டு வந்தவர்.  தமிழ்நாட்டில் தமிழரின் கல்விமொழி தமிழாக வேண்டுமென்றும், தமிழினமும், தமிழ்மொழியும் மேலோங்க வேண்டும் என்றும் தமிழ் அறிஞர்களை ஒன்று கூட்டித்  'தமிழ்சான்றோர்' பேரவையை நிறுவியவர்.

 தன் இறுதிநாள் வரை ஈழத்தமிழரின் விடிவை எண்ணியும், தமிழினத்தின் நிலையை எண்ணியும் கவலையோடு வாழ்ந்தவர்.

ஈழத்தமிழ் மக்களின் விடிவுக்காக அவர் ஆற்றிய பணிகள், அவ்விடுதலைக்காகப் பாடுபட்டவர்களை ஆதரித்துத், தோள்கொடுத்துத் தூக்கிவிட்ட அவரது செயல்கள் எல்லாவற்றையும் நாம் அறிவோம். தமிழ்நாட்டுக் கலைஞர்கள் பலரை ஈழத்தமிழ் உணர்வாளர்களாக உலகுக்கு அறிமுகப்படுத்தியர் இவர். தான் மட்டுமன்றித் தனது மகனையும் அதே உணர்வோடு இளவயது முதல் செயற்பட ஊக்கமளித்த கொள்கைப் பற்றாளன். 

இவ் உலகை விட்டு இயற்கையடையும் இறுதிக்கணத்திலும் 'அழகான அந்தப் பனைமரம்' எனும் பாடல் உருகிப்பாடப்பட்டபோது அதனைக் கேட்டவாறு ஈழநினைவுகளுடன் இவ் உலகை நீத்தார் என்பதனை அறியும் போது அவரது இதயக்கூட்டில் தமிழீழமும் தமிழீழ மக்களும் ஆழமாக நிலை கொண்டிருந்தமையினை உணர முடிகிறது.

அருணாசலம் ஐயாவின் மறைவுச் செய்தி கேட்டு உலகத்தமிழினம் தனது துயரை வெளிக்காட்டி நிற்கிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உலகத்தமிழினத்தின் சார்பில் எம் அனைவரதும் ஆழ்ந்த இரங்கலையும் இறுதி வணக்கத்தையும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறது. இந்நேரத்தில் அவரின் இழப்பால் வருந்தும் அவரது மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாதம் ஊடகசேவை

TweetShareShareShareShareShare

Next

This is the most recent post.

Previous

Older Post

Post a Comment

facebookbloggerdisqus

LIKE US ON FACEBOOK

Flipkart  Adf.ly விளம்பரம்   

ஓய்வு நேரத்தில் வருமானம் பெற

 

Powered by Myfxbook.com

கூகுள் விளம்பரம் 

சர்வதேச இணைய வர்த்தக விளம்பரம்  

முந்தைய செய்திகள்

 

முந்தைய செய்திகள் May 2016 (77) April 2016 (160) March 2016 (349) February 2016 (19) January 2016 (5) September 2015 (24) August 2015 (1) July 2015 (42) June 2015 (182) 

[recent]

POPULAR POSTS

உடுமலையில் சாதிமறுப்புத் திருமணம் செய்த இளைஞர் படுகொலை. [Video & Photos]

இரு வேறு சாதியில் பிறந்த பட்டதாரிகள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதால் இளைஞர் படுகொலை!  எத்தனை #இளவரசன்களை இப்படி நாம் இழக்கப்போகி...

மாற்று பெயரில் உயிருடன் உலாவும் பொட்டு அம்மான்....? கிலியில் சிங்கள இராணுவம்...

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் மிகவும் முக்கியமானவராக இன்று வரை கண்காணிக்கப்படும் பொட்டு அம்மான் என்று விடுதலை புலிகளின் தளபதியி...

வெளிச்சம் தொலைக்காட்சி நேரலை Velicham TV Live

Flash plugin failed to load 00:00 00:00 ...

காமக்கொடூரனிடம் சிக்கிய பெண்... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க!...

சாதனை படைக்கும் விஜய்யின் புலி டீசர்

புலி டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் தற்போது சத்தமில்லாமல் ஒரு சாதனை படைத்துள்ளது. நேற்று மதியம் 2மணியளவில் இப்படத்தின் டீ...

சூப்பர் பவர் விஜய்... புலி படத்தின் கதை இதுதானா?

இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர் நேற்று வந்து ரசிகர்களை வெகுவ...

வாட்சப்பில் பரவும் வீடியோ பார்த்து அதிர்ச்சியான நடிகை

காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி போன்ற வெற்றி படங்களில் முலம் பிரபலமானவர் சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு, ...

தமிழகத்தில் மனைவியுடன் பொட்டு அம்மான்... சிங்கள நாளிதழ் செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கர், உயிருடன் இருப்பதாக கொழும்பில...

‘ஐ’ பாணியில் ‘புலி’ பட ஆடியோ வெளியீட்டு விழா

விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தி...

விஜய் படத்தில் எகிறிய அட்லீ

தன் இரண்டாவது படத்திலேயே இளைய தளபதி விஜய்யுடன் இணையும் அதிர்ஷ்டசாலியாகியுள்ளார் அட்லீ. ஆனால், இதற்காக தன் சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளா...

FOLLOW BY EMAIL

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

குருதி தேவைக்கு  கூகுள் விளம்பரம் 

E-Currency

        

LABELS

funny videosnewstamileelamtamilnaduvideovideosworld

வேலைவாய்ப்புச்செய்திகள்

ஆட்கள் தேவை: QATAR - FOR A LEADING 5 STAR HOTEL 08/03/2016

1    WAITER (5 Star Hotel Exp Must)    10Nos    SALARY (QR) 1550 2    BARMAN (5 Star Hotel Exp Must)    10Nos    SALARY (QR) 1550 ...
தாய்த்தமிழ் இணையம் © 2015. All Rights Reserved. Shared by Themes24x7

Powered By World Tamils

முகப்பு Homeதொலைக்காட்சிகள்Tamil TV News Liveதொழில் வாய்ப்பு Earn Money Onlineஉங்களின் செய்திகளை பதிய Publish Your News

Read more: http://www.thaaitamil.com/2016/05/blog-post_83.html#ixzz49m2yxdyv

Post a Comment

Powered by Blogger.