Halloween party ideas 2015
.

தமிழரின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தின் இறுதி நாட்களான மே 18, 19 ல் முள்ளிவாய்கால் மண்ணில் மிகப்பாரிய இனப்படுகொலைக்கு ஆளானது தமிழினம். தமிழருக்கெதிரான இனப்படுகொலையின் அதியுச்ச இனப்படுகொலையின் களமாக முள்ளிவாய்கால் அமைந்து விட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட எமது சொந்தங்களுக்கு இன்றைய தினத்தில் எமது கண்ணீர் அஞ்சலியைத் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துக் கொள்ளுகின்றது.


இனவழிவுக்கு உள்ளான எமது சொந்தங்களின் படுகொலைக்கு நீயாமான தீர்வு வேண்டும். விதவைகள் ஆக்கபட்ட பெண்கள், அநாதைகள் ஆக்கப்பட்ட குழந்தைகள், அழிக்கப்பட் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஆகியவற்றுக்கு சிங்கள அரசாங்கம் பதில் கூற வேண்டும். எமது மக்களுக்கு நிரந்தரமான அமைதியான வாழ்வு கிடைத்திட வேண்டும். இந்த உலகப்பரப்பில் மற்றைய இனங்கள் போன்று தமிழ் மக்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று தலைநிமிர்ந்து வாழ வேண்டும். இதற்கு ஒரே வழி எமக்கான சுதந்திரமான நாடே. அதனை ஜனநாயக வழியில் பெற்றிட உலக நாடுகளிடம் வேண்டி நிற்கின்றோம். 

இதற்கான தொடக்க புள்ளியாக முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையும், அதன் மூலம் இனப்படுகொலைக்கு காரணமான சிங்கள் தலைவர்கள் அனைவருக்கும் தண்டனை பெற்றுகொடுத்து சரியான நீதியை பெற்றுக்கொள்வதே ஆகும்.

இச்சர்வதேச விசாரணைக்கு எதிர்க்கும் அனைத்து சக்திகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு எமக்கான நீதியைப் பெறுவதோடு, அதன் மூலம் எமக்கான சுதந்திர நாட்டை மீட்டெடுப்போம்.

மாண்டுபோன மக்களுக்கான சரியான நீதியை பெற்றுக்கொள்வதற்காக எத்தனை ஆண்டுகள் போனாலும் தொடர்ந்து போராடுவோம் என்று இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

நன்றி :

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

 


 


முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறுவோம்


 


Post a Comment

Powered by Blogger.