Halloween party ideas 2015
.

தோழர் தியாகு
          முன்வைக்கும்
அறிவார்ந்த வினாக்கள்! 
விடை தேடட்டும் சீமான்..
***************************
    (காணொலிப் பேச்சு)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழகத்தில் தனது கட்சியின் சார்பில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்
கால். கடலூர் தொகுதியில் தானே போட்டி இடுகிறார். தான் ஆட்சிக்கு வந்தால் செய்யக் கூடிய  ஒரு செயல் திட்ட வரைவையும் நூலாக வெளியிட்டு இருக்கிறார்.
  இவை அனைத்தும் அவர்
  கட்சியின்அரசியல்உரிமை
  கள். அவற்றில் நாம் 
  குறுக்கிடவிரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழ்ச்சமூகம் குறித்தும், தமிழ்ச் சமூகத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்தும் அவர்கருத்துகள் எந்த அளவுக்கு முரணானவை, தமிழ் தேசிய இயக்க வளர்ச்சிக்கு இடையூறானவை எனச் சுட்டி காட்டுகிற கடமை நமக்குள்ளது!  

தமிழ் நாட்டிற்காகவும், தமிழ்ஈழத்திற்காகவும்,அளப்பரியஈக(தியாக)ங்கள் செய்த தலைவர்களை - தமிழ் சமூகத்தைத் தட்டி எழுப்பிய தலைவர்களை- எந்த விதமான அடிப்படை
யும் இல்லாமல், வடுகர்கள் என்றும் தெலுங்கர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் அவர் வசை பாடுவது வேதனைக்கு உரியது.

"தமிழ்நாடு தமிழருக்கே" என முழக்கம் தந்தவர் தந்தை பெரியார். அப்படி இருக்கிற போது பெரியாரை மிகச் சாதாரணமாக, பார்ப்பனர்களும் பாரதிய சனதா கட்சியினரும் கூட தூற்றத் தயங்குகிற அளவிற்குத் தூற்றுவதும், தமிழ் நாட்டின் கேடுகள் அனைத்திற்கும் அவரையே காரணமாகக் காட்டுவதும், ஏற்றுக் கொள்ள முடியாதவை!

அதேபோல, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவை இராமகிருட்டி
ணன், தமிழினத்திற்காக
தமிழ்மக்களுக்காக எந்த அளவுக்குத் தியாகத்தை செய்து இருக்கிறார் என்பது சீமானுக்கே தெரிந்த செய்தி தான்.  கோவை இராமகிருட்டி
ணன் அழைத்து போய் சீமானை எத்தனையோ மேடைகளில் பேச வைத்திருக்கிறார்! அவர் விடுதலைப்புலிகள் தோழமைக் கழகம் நடத்தியதை மறக்க முடியாது, புலிகளை ஆதரித்த ஒரே காரணத்திற்காக இராமகி
ருட்டிணன் தடா சட்டத்தில் ஆண்டு கணக்கிலே சிறை
யில் அடைபட்டுக் கிடக்க நேரிட்டது.
அதேபோல், வைகோ அவர்களின் அரசியலில் நமக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம்.அதில் எந்த தவறும் இல்லை. 
அதே நேரத்தில் அவரை வை.கோபால் சாமி நாயுடு எனச் சாதிப்பெயர் சொல்லித் திட்டுவதும், அவருடைய ஈழ போராட்டத்திற்கான பங்களிப்பைத் தூற்றுவ
தும் மிகவும் கண்டிக்கத்தக்கவை.

திரு சீமானிடம் நான் கேட்க விரும்புவது ஒரேஒரு கேள்வி.  தலைவர் பிரபாகரனை அவர் தேசிய தலைவர் என்று போற்றுகிறார், தமிழ்  ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரனை நாமும் போற்றுகிறோம். ஆனால் பிரபாகரன் அவர்கள், கோவை இராமகிருட்டிணனைப் பற்றி என்ன நினைத்தார்- வைகோவை பற்றி என்ன நினைத்தார் என்று தெரியுமா?  பிரபாகரனுக்
குத் தெரியாத விளக்கம் , தனக்கு தான் தெரியும்
எனச் சீமான் சொல்ல வருகிறாரா ?
அரசியல் தலைவர்களின் மாறுபட்ட கருத்திற்காக, அவர்கள் பிறப்பைச் சாடுவதா? அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மொத்தத்தில்  தமிழ் நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், தெலுங்கு பகுதியிலிருந்
தோ வேறு பகுதியிலிருந்
தோ வந்த மக்கள் தமிழ் நாட்டிலேயே குடியேறி, தமிழ் நாட்டு வாழ்க்கையோடு இணைந்துவிட்டார்கள்; சொந்த மொழியை மறந்து, தமிழ்ச்சமூகத்தோடு ஒன்று கலந்துவிட்டார்கள். அவர்களையும் தமிழ் தேசியத்தின் பகுதியாகத் தான் நாங்கள் மதிக்கிறோம். அவர்களை வேற்று இனத்தவராக நாங்கள் கருதவில்லை. அவர்களின் தொண்டு தமிழ்ச்சமுதாயத்துக்காகத்தான் கிடைத்து இருக்கிறதே தவிர, சீமான் சொல்லக் கூடிய அவர்களுடைய மூதாதையர்கள்  சமூகத்திற்குப் போய்  விடவில்லை. உண்மைக்
குப் புறம்பான அவதூறு என்று தான் இதனைச் சொல்ல வேண்டும.'ஆதி தமிழர்கள்' என பெருமையோடு அறியப் படும் அருந்ததியர்களைக் கூட அயல் இனத்தவர் என்று சாடுகிற அளவுக்கு இந்த 'வக்கிர சிந்தனை' போய்ச் சேர்ந்திருக்கிறது. இவை அவதூறுகளின் உச்சக் கட்டம்.

சிங்களத் தலைவர்களின் பெயர்களில் இருக்கிற நாயக் என்கிற சொல் இருக்கிறதாம்.அதனால்,
அவர்களெல்லாம் தெலுங்கு நாயக்கர்களாம்! அந்த நாயக்கர்களும், இந்த நாயக்கர்களும் சேர்ந்து இன அழிப்பை நடத்தி விட்டார்களாம்! சிங்களர்கள் என்கிற முறையைவிடவும், தெலுங்கர்கள் என்கிற முறையில்தான்  தமிழ் இன அழிப்பை அவர்கள் செய்தார்களாம்! தமிழ் நாட்டின் தலைவர்கள்- விடுதலைப்புலிகளை ஆதரித்த தலைவர்கள்- தெலுங்கர் என்கிற முறையில் இதற்கு உடந்தையாக இருந்து சதி செய்தார்கள் என்று சீமான் கூறுவது அபத்தத்தின் சிகரம் என்றுதான் சொல்ல வேண்டும்!

நாயக் என்கிற சொல்லின் மூலம் தெரியாமல் பேசுகிறார். சிங்களத் தலைவர்களையும், நாயக் எனப்பெயர் வரக் கூடியவர்களையும், ஒரிசா
வின் பட்நாயக்கையும், தமிழ் நாட்டுத் தெலுங்கு நாயுடுகளையும், ஒரே கூட்டத்தில் சேர்த்து, இன அழிப்புக்கு காரணம் இவர்கள்தான் என்கிறார்
சீமான்! நாயக் என்ற சொல், சாதிக்கு மட்டும் பயன்படுகிற சொல் அல்ல. இராணுவத்தில் லான்ஸ் நாயக், என்கிற பட்டப் பெயர் உண்டு, இதற்கும் வடுகர்கள்தான் காரணம்
என்பாரா?

தமிழ் நாட்டிலேயே   நாயகர்களும் உண்டு,  நாய்க்கர்களும் உண்டு, நாயகர்களுக்கும் தெலுங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இப்படியெல்லாம் வரம்பு மீறி விளக்கம் கொடுத்து கொண்டே போனால் என்ன நடக்கும் ? சீமான் எண்ணி பார்க்க வேண்டும். மகிந்த ராஜபக்சேத் தெலுங்கன் என்கிறார். பண்டார நாயகாவையும் தெலுங்கர் என்கிறார்.
சிங்களத் தலைவர்களாக இருந்து இன அழிப்பை புரிந்த அவர்கள் தெலுங்கர்களாம். அதனால் தான், தமிழ் நாட்டுத் தெலுங்குத் தலைவர்கள் மறைமுகமாக சதி செய்து உடந்தையானார்களாம்.
இராமகிருட்டிணனையும் வைகோவையும் இப்படிக் குற்றம் சாட்டுகிறார்சீமான். விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காகப் 'பொடா' சிறையிலே 18 மாத காலம் அடைபட்டுக் கிடந்தவர் வைகோ, அதே ' தடா' சட்டத்
தால்சிறையிலேமூன்றாண்
டுகள் இருந்தவர் தோழர் கோவை கு. இராமகிருட்டிணன். சிறையில் இருந்தது கூட சதி திட்டம் தானா? தமிழக மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்காக, தெலுங்கர்கள் சிறையிலே போய் வாடினார்கள் என்று
கூறுவாரா? இவற்றை
யெல்லாம் சீமான் தான் விளக்க வேண்டும்! 

நம்பிய கருத்துக்களுக்கு  உண்மையாய் இருந்து  உழைப்பதை , மதிக்கிற பண்பாடு நமக்கு வேண்டும்.அந்தப்பண்பாடு சீமானிடம் இல்லை, ஏனென்றால் அது  மக்கள்நாயகப் பண்பு.

பட் நாயக் தெலுங்கன், பண்டார நாயகா தெலுங்கன், வைகோ தெலுங்கன், இராம கிருட்டிணன் தெலுங்கன்- இப்படியே போனால், 'மூக் நாயக் 'என்ற பெயரை என்னசொல்வார்? அந்தப்
பெயருக்குரியவர் யார் என்பது சீமானுக்குத் தெரியுமா? 'மூக் நாயக்' என்கிற பத்திரிக்கை நடத்தியவர் அம்பேத்கர்! அதனால் ' மூக் நாயக்' என்று அழைக்கப்பட்டார்
அம்பேத்கார். அவரும் வடுகன் தான் என்று சீமான் தவறாக கருதி விட வேண்டாம். மூக் நாயக் என்றால் ஊமைகளின் தலைவன் என்று பொருள், உரிமைக் குரல் எழுப்ப முடியாத ஊமைகளுக்குத் தலைவன் என்கிற பொருளிலேயே  அம்பேத்
கார் மூக் நாயக் என
அழைக்கப்பட்டார்.
எனவே பெரிய சமூகவியல் ஆராய்ச்சி யாளனைப் போல, நாயக் என்கிற சொல் இருக்கிற இடத்திலெல்லாம் வடுகனை தேடி பிடிப்பது அறிவுக்கும் அறிவியலுக்கும், மக்கள்நாயகத்திற்கும், தமிழர் நலனுக்கும் முரணானது என்பதைச் சுட்டி காட்ட விரும்புகிறேன்!

தந்தை பெரியாரையும் இதே காரணத்தை சொல்லி- அவரே போட்டுக் கொள்ளாத சாதிப் பட்டத்தைப் போட்டு அவரைச் சாடுவது அபத்தத்திலும் அபத்தம்! 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழக்கம் தந்தவர் தந்தை பெரியார். தனித் தமிழ்நாட்டுக்காக இறுதி வரை போராடியவர் தந்தை பெரியார்.
அண்ணா 'திராவிட நாடு' கேட்ட போது, 'மொழி வழி மாநிலம் அமைக்கப் பட்ட பிறகு, திராவிட நாடு கேட்பது மோசடி' எனச் சொன்னவர் பெரியார்.  அவரைப் போய் தெலுங்கர் என்கிறார்; தமிழரைத் தெலுங்கருக்கு அடிமைப்
படுத்தப் பார்த்தவர் என்கி
றார். தந்தை பெரியாரை ஒரு முறை கன்னடத்தில் பேசுமாறு கேட்டார்கள். பேச முயல்கிறேன் எனச் சொல்லி விட்டு,' எனக்குப் பேச வரவில்லை, தமிழ் மட்டும் தான் தெரியும்' என அவரே கூறியதெல்லாம் சீமானுக்கு வெறும் நாடகமாக தெரியுமோ? 

இது ஒரு பக்கம்.
சீமானின் பார்ப்பனச்சார்பு
இன்னொரு பக்கம்:
தமிழ்ச் சமூகத்தை ஒரு தேசிய இனமாக ஒன்று படச் செய்வதற்கும்
சமூக நீதிக்கும்
எதிராக நிற்கக் கூடிய பார்ப்பனர்களை, சீமான் தமிழர்களாக ஏற்கத் தயாராக இருக்கிறார். 

பரிதிமாற் கலைஞர்,  சீனிவாசராவ் போன்றவர்கள் கன்னடப் பார்ப்பனர்களாக இருந்தா லும் தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்கும் அவர்கள் ஆற்றியுள்ள பணிகளை மதிக்க வேண்டும் என்று தான் தமிழ்த் தேசியர்கள் கருதுகிறோம்.
ஆனால், பார்ப்பனர்கள்  சாதி வன்மம் என்கிற வகையில் தமிழர்களுக்கு எதிரானவர்கள்; சமூக நீதிக்கு எதிரானவர்கள்; தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள். அதனால் தான் எதிர்க்கப்பட வேண்டியோராகப் பார்ப்பனர்களையும் நாம்
பார்க்கிறோம்.

பார்ப்பனர்களையும் அவர்களின் கருத்தியலான பார்ப்பனீயத்தையும்
ஆதிக்கத்துக்குத் துணை போனவர்களாகப் பார்க்க வேண்டும்.   வரலாறு அப்படித்தான் சொல்கிறது.
இந்திய மார்வாடி குசராத்தி சேட்டுகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும்தெலுங்குமன்னர்களுக்கும் தமிழ் மன்னர்கள் ஆட்சியின் போதும்- எல்லாக் காலத்திலும் பார்ப்பனர்கள் சுரண்டலுக் கும் ஆதிக்கத்திற்கும் துணைபோகும் அதிகாரிக
ளாக, முகவர்களாக செயல் பட்டவர்கள். இது தான் வரலாறு.
வழிபாட்டு மொழியாக, கல்வி மொழியாக , ஆட்சி மொழியாகத் தமிழ் வரக்கூ
டாது என்பதற்கு ஒரு சாதி தடையாக இருக்குமானால், அது பார்ப்பனர்கள் என்பதில் ஐயமில்லை! பார்ப்பனர்களைக் கூட
தமிழர்களாக ஏற்க முன் வருகிறார் சீமான்!
ஆனால், தெலுங்கர்களாக மூதாதையர் பிறந்தார்கள் என்கிற காரணத்தினால், தமிழ் இனத்தின் தனி பெரும் தலைவர்களை, ஒப்புக் கொள்ள மறுப்பது, தமிழினத்திற்கு எதிரான சீர் குலைவு  வேலை!  நாம்
அப்படித்தான் நம்புகிறோம்!

எத்தனை செய்திகளைப் பிரபாகரனிடமிருந்து எடுத்துக் காட்டுகிற
சீமான், பெரியாரையோ
வைகோவையோ கோவை இராமகிருட்டிணனையோ
'தெலுங்கர்,வந்தேறி'எனப் பிரபாகரன் சொன்னதாக ஒரு செய்தியை எடுத்துக் காட்டட்டும்.
இவர்களுக்கு எதிராகப் பிரபாகரன் பேசி இருப்ப
தாக எடுத்துக்காட்ட முடியுமா?
இவை அனைத்தும் சீமானின்  கற்பனை. பிரபாகரனுக்குத் தெரியாதது எல்லாம் தனக்குதர தெரியும் என சீமான் கருதிக் கொள்ளட்
டும். ஆனால் அதையே தமிழ்த் தேசியம் என்கிற பெயரிலே அவர் பேசுவதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
திரு சீமான் தன்னுடைய திசைதிரும்பிய பார்வை
யை, வக்கிரப் போக்கை, மாற்றிக் கொள்ள வேண்டும்.  அவர் மீண்டும் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும், தமிழ் ஈழத்திற்க்கும் பாடுபடக் கூடிய ஓர் ஆற்றலாக வர வேண்டும்.
இந்த திரிபுகளைக் களைந்து, தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொண்டு அவர் மீண்டு
வரவேண்டுமென்று தமிழ் தேசியம்  எதிர்பார்க்கிறது
            *         *          * தமிழ்த்தேசியம் என்றால் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆவதுதான் என்று சீமான் கருதுகிறார்.
தந்தை பெரியார் எரித்த இந்திய அரசமைப்பை-அண்ணல் அம்பேத்கர் எரிக்க விரும்பிய அரச
மைப்பை ஏற்றுக் கொண்டு -அந்த அரசமைப்பின் பெயரில் 'சத்தியம்'செய்து கொடுத்து,வெறும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக அவர் போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறார். 

அதிகாரமில்லாத தமிழக சட்டப் பேரவைக்கும், போட்டியிடுகிற பொழுதே, யார் தமிழர்கள் என சான்றிதழ் வழங்குகிற பொறுப்பையும் அவர் எடுத்
துக்கொண்டிருக்கிறார்.

தமிழ் நாட்டைத் தமிழன் ஆள வேண்டுமென்கிறார். நம்மைப் பொருத்தவரை வைகோ வானாலும் சரி, கலைஞர் கருணாநிதியா
னாலும் சரி, அறிஞர் அண்ணா வானாலும் சரி, அவர்களோடு நமக்குக் கருத்து மாறுபாடு உண்டு, ஆனால் அவர்கள் எல்லோரும் தமிழர்களே என்று உறுதியாக நம்புகிறோம்.

மலையாளியாகப் பிறந்த ம.கோ.(எம் ஜி) இராமசந்
திரன் கூட, தமிழ்நாட்டுக்
குத்தான் அரசியல் தலைவராக விளங்கினார். தமிழக மக்கள் அவரை ஏற்
றுக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பார்க்கிற பொழுது, காலங்காலமாக இந்த மண்ணிலே வாழ்ந்து, இந்த மண்ணின் வாழ்க்கையோடு கலந்து விட்டவர்களை, அயலவர்கள் என்று பிரிப்பதை நம்மால் ஏற்க முடியாது .
அது மக்கள்நாயகத்திற்குப் புறம்பானது ;மனித நேயத்திற்குப் புறம்பானது; தமிழ்த் தேசியத்திற்கும் புறம்பானது.
தமிழ்த் தேசியம் என்பது இரத்தம் தொடர்புடையது அல்ல;உடலியல்கண்ணோட்டம் உடையதுஅல்ல. 
அது ஓர் அரசியல் சமூகவியல் பார்வை . 
சமூகவியல்கண்ணோட்டத்தில் தான் தேசியம் வரையறுக்கப்பட முடியும். உடலியல்கண்ணோட்டத்தில் ஒரு தேசிய இனத்தை வரையறுக்க முடியாது. இன்றைய அமெரிக்க தேசம் என்பது, எத்தனை ஐரோப்பிய தேசிய இனங்களின் கலவை என்பதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள். இப்படி நிறைய  எடுத்துக் காட்டலாம்.
திரு சீமான் அவர்கள், இவற்றை எல்லாம் ஆர அமர சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தைத்தமிழன்தான்
ஆளவேண்டுமென்றால்,  இது வரை ஆண்டவர்கள் எல்லாம் யார்?

காமராசரைத் தமிழன் என்று அவர் ஒப்புக் கொள்கிறார். பெரியார் கூட'பச்சை தமிழன்' என்று அழைத்தார். காமராசர் ஆட்சியைப் போல் அமைய வேண்டுமென்கிறார் சீமான்!  அதே காமராசர் இந்திய தேசியத்தினுடைய  முகவராகச் செயல்பட்டவர். இதைச் சீமானால் மறுக்க முடியாது. தமிழகத்தின் எல்லைகள் பறிபோன
தற்குத் திராவிட இயக்கத்
தின் மீது குற்றம் சாட்டுகிற சீமான், காமராசர் மீது குற்றம் சாட்ட வேண்டாமா? திராவிட இயக்கமா அப்போது அதிகாரத்தில் இருந்தது? அதிகாரத்தில் இருந்தது தில்லியில் நேரு, தமிழகத்தில் காமராசர்! இவர்கள் தாம் தமிழகத்
தின் எல்லைகளை விட்டுக் கொடுத்தவர்கள்.  ஆனால் காமராசரை  நல்லாட்சி நாயகனாகச் சீமான் பார்க்கிறார்.சிலகூறுகளில் அது சரியானதும் கூட!  ஆனால் தமிழ்த் தேசியத்
திற்கும் காமராசருக்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும்?

பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரியைச் சீமானுக்கு நான் நினைவு படுத்த வேண்டும்,

       "தெலுங்கன்தான்
        தெலுங்கனுக்கே
   நன்மை எல்லாம்
       செய்வான் என்றாய்
   நல்ல கரடி உன் கரடி"
இது பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரி.

கர்நாடகத்தில் தரம் சிங் என்ற வடநாட்டவர் முதலமைச்சராக இருந்தார். கன்னடர்அல்லாதவர் என்பதால், அவர் காவிரி
யில் கருநாடகம்செய்திருக்
கிற ஆக்கிரமிப்பைக் கை விட்டு விட வில்லை.  கருநாடகத்திற்கு நல்லது என்று எதைக் கருதினாரோ அதைப் பாதுகாத்து நின்றார். எனவே அங்கே
தீர்மானிப்பது பிறப்பல்ல!

தமிழ்நாட்டைப்  பொருத்த வரையில் தமிழ் நாட்டைத் தமிழன் ஆளவேண்டுமென்
றால், தமிழகஅரசாதமி
ழரை ஆளுகிறது? இதற்கு ஆட்சி என்றா பெயர்?  சிவகங்கை வேலு நாச்சியார் ஆண்டாரே அது ஆட்சி! மருது பாண்டியர்கள் ஆட்சி என்பது ஆட்சி!கட்டபொம்மன் ஆட்சி என்பது ஆட்சி! ஆனால் இங்கே மாநில முதலமைச்சர் நடத்துவது ஆட்சி அல்ல.

அதனால்தான் இங்கே எந்தத் தீர்மானம் போட்டாலும் ,தில்லியின் அனுமதி வேண்டும்.
அதுஇன்றி இங்கு எதுவுமே நடை பெற முடிவதில்லை.
ஏழுபேர்விடுதலையைக்
கூட இங்குள்ள முதலமைச்
சரால்சாதிக்கமுடியவில்லை!அப்படியென்றால் இது என்ன பதவி? இது ஒரு தில்லியின் கங்காணி பதவி! சரி, தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டுமெ
னச் சொல்கிற சீமான், தமிழ்நாட்டை மோடி என்கிற குசராத்தி ஆள்வதைப் பற்றிப் பேசுவாரா ?

இந்தியாவிற்குள் தமிழ்நாடு இருக்கிறவரை, மோடியோ, மன்மோகன்சிங்கோ
இந்திராவோ- இவர்களைப்போன்ற ஒருவரோதாம் ஆண்டுகொண்டிருப்பார்! இவர்களில் எவருமே தமிழர்கள் இல்லை! 1947இல் நடந்தது
அதிகாரக் கைமாற்றம். அன்றுமுதல் இன்றுவரை, தமிழ் நாட்டைத் தில்லியில் இருந்து ஆளுகின்றவர்கள் அனைவரும் தமிழர் அல்லாதார்தாம் ! சரி , தமிழர்ஒருவரைத்தலைமை
யமைச்சர்(பிரதமர்) ஆக்கி
னால் என்ன நடக்கும்? அப்போதும் தமிழ் நாட்டைத் தமிழன் ஆள்வதாகச் சீமான் எண்ணலாம், ஆனால்  ஆந்திரத்தைத் தமிழன் ஆள்வது எப்படி நியாயம்? குசராத்தைத் தமிழன் ஆள்வது எப்படி நியாயம்?  தமிழ் நாட்டைத் தமிழன்ஆளவேண்டுமென்றால் ஆந்திரத்தைத் தெலுங்கன் தானே ஆள வேண்டும்!
அப்படியானால் உண்மையான தமிழ்த் தேசியம் என்னசொல்
கிறது? தமிழ் நாட்டைத் தமிழன்ஆளவேண்டுமென்றால், தமிழ் நாடு இந்தியாவில் இருக்கக் கூடாது. இந்தியாவிற்குள் தமிழ்நாடு இருக்கிற வரைக்கும் தமிழ் நாட்டைத் தமிழன் ஆள முடியாது. முதலமைச்சர் என்கிற போர்வையில், தலைமைய
மைச்சர்(பிரதமர்) என்கிற போர்வையில், தமிழ்நாட்டைத் தமிழன் ஆண்டதும் இல்லை;ஆளப் போவதும் இல்லை!

தமிழ்த் தேசியம் என்பதற்கான அடிப்படை முழக்கங்களில் கூட சீமான் தெளிவில்லாமல் இருப்பதைத் தான் இவை காட்டுகின்றன!  வெறும் முழக்கங்களின் மூலம், பொய்க்கால்குதிரைகளைப் போர்க்குதிரைகளாக அவர் காட்ட முயல்கின்றார்.  இது வீண் முயற்சி. இளைஞர்களை அவர்
தவறாக வழி நடத்துகிறார்.  உணர்ச்சிவயப்படுதலும், உணர்ச்சிவயப்படுத்தலும்
மட்டுமே அறிவு பூர்வமான சிந்தனைக்கு மாற்றாகிவிட முடியாது.
'நாம் மாற்று, நாம் தமிழரே மாற்று' என்று பேசுகிறார். இவர் இந்தியாவுக்கு மாற்றா?இந்திய அதிகாரத்திற்கு மாற்றா? அதைப் பற்றி எல்லாம் இவர் வாய் திறப்பதே இல்லை.  திராவிட கட்சிகளுக்கு மாற்று என்கிறார் .திமுக
வுக்கும் அதிமுகவுக்கும் மக்கள் நலக்கூட்டணிக்கும் எல்லாவற்றுக்கும் சேர்த்துச் சீமான் மாற்றா? தில்லி
வல்லாண்மைக்கு(ஆதிக்கத்திற்கு) யார் மாற்று? இந்திய அரசமைப்புக்கு யார் மாற்று? இந்தியா என்கிற கட்டமைப்புக்கு யார் மாற்று? இந்தியா என்கிற கட்டமைப்பிற்குள், இந்திய அரசமைப்புக்குள்
மாற்றத்தைத் தேட முடியாது. எனவே தமிழ்நாடு, இந்தியாவுக்கு அடிமைப்பட்டு இருப்பதை
யும் தமிழ்த்தேசிய இனத்
தைத் தில்லி அடிமைப் படுத்திவைத்திருப்பதை
யும் மறைப்பதற்குத் தான் செயலலிதா ஆட்சி, கருணாநிதி ஆட்சி, சீமான் ஆட்சி  என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்
கள்.  உண்மையான ஆட்சி அதிகாரத்தை மறைக்கிற இந்த முயற்சியை, நாம் அடையாளம்கண்டுகொள்ள வேண்டும்.

இவர் வைத்திருக்கும் செயல் திட்ட வரைவுத் திட்டங்கள் எவையுமே தமிழக அரசின் அதிகாரத்
திற்கு உட்பட்டவை அல்ல.  உண்மையில் தில்லியைப் போராடிப் பணிய வைக்க வேண்டுமென்றால், அதற்குத் தமிழ்நாட்டு விடுதலைக்காகப் போராட வேண்டும்.  தமிழ் நாட்டின் உரிமைகளுக்கான போராட்
டத்தின் வழியாகத்தான் உருவாக்க முடியும்.  அப்படி எதுவுமில்லாமல், வெறும் வாக்குச்சீட்டை வைத்துக் கொண்டே, மாநில ஆட்சி
யைப் பிடிப்போம், நாங்கள் எல்லாவற்றையும் மாற்றி விடுவோம் என்பது பொய்யானது, ஏமாற்றுத்
தனமானது.

இறுதியாக  ஒரு கேள்வி திரு சீமானுக்கு ! தலைவர் பிரபாகரன் படத்தைத் தன் படத்தோடு போட்டுக் கொண்டு அவர் வாக்கு கேட்கிறார். இது மிகவும் வேதனையான செய்தி.  இறையன்பர் கோவிலுக்கு ஏற்றி வைக்கிற திருவிளக்
கில் இலைச்சுருட்டு(பீடி) பற்ற வைப்பதைப் போன்ற செயல் இது !இப்படிச் செய்யலாமா?

பிரபாகரனுக்கும் சீமான் இப்போது நடத்தி கொண்டி
ருக்கும் தேர்தல் போட்டிக்
கும் என்ன தொடர்பு?
அவர்  தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போரிட்டவர்; அதற்காக மிகப் பெரிய ஈடுகளைச் செய்தவர்;தமிழ்த் தேசிய இனத்தைத் தட்டி எழுப்பி, முப்படை கட்டி, சிங்களவ
னுக்கும் இந்தியனுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரர்.
தன்  படத்தோடு 234 தொகுதியிலும் பிரபாகரன் படத்தைப் போட்டு வாக்கு கேட்கிறார்கள்.
நான் கேட்கிறேன் : இதன் விளைவு என்னவாக இருக்கும்? பிரபாகரனுக்
கும் சீமான் நடத்தும் தேர்தல் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? பிரபாகரன் முதலமைச்சர் பதவிக்காகவா போட்டி யிட்டார்? வடக்கு மாகாணத்
திற்கோ கிழக்கு மாகாணத்
திற்கோ சபையில் இடம் பிடிப்பதற்காகவா தம் வீரர்களை அவர் களத்தி
லே நிறுத்தினார்? அவரைப் பொருத்தவரை முதலமைச்
சர் பதவி என்பதுவிடுதலை ஆகாது.இதில் அவர் தெளிவாக இருந்தார். 
அதுமட்டுமல்ல,விடுதலைப் பாதையை இது திசை திருப்பி விட்டு விடும்
என்றார். காசுமீர் தலைவர் சேக்கு அப்துல்லா, பதினோர் ஆண்டு காலம் சிறையிலே இருந்தவர்.  இந்திரா காந்தி அவரைக் கூப்பிட்டு, தேர்தலே இல்லாமலேயே  முதலமைச்சர் பதவி வழங்கிய போது அவர் அந்த பதவியை வாங்கிக் கொண்டார்.  அதனால் அவர் காசுமீர் விடுதலையைக் காட்டிக் கொடுத்தவர் என்று இன்று வரை காசுமீர மக்களால் நினைக்கப்படுகிறார்.  தமிழ் ஈழத்தில், இந்தியப் படைகளுக்கு எதிராக, வீரப் போராட்டத்தைச் செய்த அதே கால கட்டத்தில், முதலமைச்சர்  தேர்தலில் போட்டியிட்டு வரதராச பெருமாள்  வெற்றி பெற்றார்.  அவரும் தமிழீ
ழத்தேசியம்தான்பேசினார். வரதராச பெருமாளின் வழி முதலமைச்சர் பதவியை தேடுகிற வழி.  பிரபாகரன் வழி விடுதலைக்கு போரா
டுகிற வழி.  எந்த வழியைச் சீமான் கடைப் பிடிக்கிறார்? ஒவ்வொருவரும்
எண்ணிப் பாருங்கள்!

Post a Comment

Powered by Blogger.