Halloween party ideas 2015
.

தோழர்களே வணக்கம்.
இன்று (29-05-2016) ஞாயிற்று கிழைமை  ''ஏழு தமிழர்கள் விடுதலை இயக்கம்'' சார்பாக ஒரு கலந்தாய்வு கூட்டம் எமது தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில்
அற்புதம் அம்மாள்
தமிழர் நலம் பேரியக்கம் தலைவர் தோழர் மு.களஞ்சியம்
தோழர் டேவிட் பெரியார்,
வழக்கறிஞர் சிவக்குமார்,
தோழர் ஆற்றல் சண்முகம்,
குட்டி ரேவதி
பேராசிரியர் குழந்தை
தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் தோழர் கோபி
தோழர் சீனிவாசன்
தோழர் வானதீபன்
தோழர் வே. இரா.பார்த்திபன்
தோழர்  நிரஞ்சன்
தோழர் மகேந்திர வர்மா
கவிஞர் கணேசன்
தோழர் இராம பழனியப்பன்
ஆகியோருடன், பல கட்சி, இயக்க, அமைப்பின் முதன்மை பொறுப்பாளர்கள்,கல்லூரி மாணவர்கள் உட்பட  30 கலந்துகொண்டனர்.

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு
நிரபராதி தோழர் பேரறிவாளன் கடந்த 25 ஆண்டுகளாக தனிமைச்சிறையில் வாடி வருகிறார்.
அவர் பெரியார் திடலில் தங்கள் பெற்றோரால் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நாள் ஜூன் மாதம் 11 தேதி. ஆம், வரும் ஜூன் 11தேதி அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு 25 ஆண்டு ஆகிறது. ஈழத்தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட மே 17 போன்ற மற்றுமொரு கருப்பு தினமே ஜூன் 11 ஆகும்.
ஆகவே,
அந்நாளில் ஓர் ஒருங்கிணைந்த ஒன்று கூடலை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக பேரறிவாளனின் விடுதலையில் ஆழ்ந்த அக்கறை கொண்ட, கட்சிகள், அமைப்புகளை கடந்து அனைத்து தோழர்களும் ஒன்றிணைந்து ஒரு செயல் திட்டத்தை வரையறை செய்தோம்.

1. ஜூன் 11 அன்று காலை 8 மணிக்கு வேலூர் சிறைசாலையில் இருந்து சென்னை கோட்டையை நோக்கி இரண்டு சக்கர வாகனப் பேரணி.
2. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே ஒன்று கூடி பேரணியாக நடந்து சென்று கோட்டையில் மனு அளிப்பது என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனப் பேரணியில் கலந்து கொள்ள இரும்புகிற  இன உணர்வாளர்கள்,மனித நேய ஆர்வலர்கள்
தங்களது பெயர்.
வாகனத்தின்எண்,
தங்களது அலைபேசியின் எண்,
போன்றவற்றை
இராம பழனியப்பன்---+91 99621 44458 இந்த எண்ணுக்கு அழைப்பு எடுத்து பதிவு செய்யவும்.
இருருளி ஊட்டுகிற  தோழர்களுக்கு  தலைக்கவசம் கட்டாயம்  தேவை.

---வே.இரா பார்த்திபன்
தமிழர் நலம் பேரியக்கம்
தலைமை செய்திகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை

Post a Comment

Powered by Blogger.