Halloween party ideas 2015
.

திராவிடம் என்பது வெறும் நான்கு மாநில எல்லைகளில் அடங்கக்கூடிய நிலப்பரப்பு இல்லை. அது ஒரு கோட்பாடு. சுருக்கமாகவும் ஆழமாகவும் சொல்லவேண்டுமென்றால்
ஊரில் உள்ள
நாட்டில் உள்ள
உலகில் உள்ள அனைத்து மக்களும் பிறப்பால் தொழிலால் மற்றும் வேறு எந்த வித அளவீடுகளாலும் சமம். இதை இன்று படிப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருக்கலாம்.

அந்த சமநிலையை பெறத்தான் பெரியார் இன்னும் எத்தனையோ தலைவர்கள் போராடினர். திராவிடப் போராட்டங்கள் இவற்றை முன்னிறுத்தித்தான் இருந்தன,

திராவிடம்
சுயமரியாதை
பகுத்தறிவு
சாதிக் கொடுமை
தீண்டாமை
அறியாமை
மூடநம்பிக்கை
சமூக சீர்திருத்தம்
சூத்திரன்
முலைவரி
கடவுள் மறுப்பு
பார்ப்பனியம்
வர்ணாஸ்ரமம்
பெண்ணுரிமை
இந்தித் திணிப்பு
கலப்பு திருமணம்
தேவதாசி
கோவில் நுழைவு
கள்ளுக்கடை
கைம்பெண் மறுமணம்
சமூக விழிப்புணர்வு

ஜப்பானில் வாழும் ஒருவன் பிறப்பால் உயர்வு-தாழ்வு என்ற கருத்துக்கு எதிராக இருப்பானானால் அவனும் திராவிடக் குடிமகன் என்றார் பெரியார். பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர்தான். ஆனால், சாதி அமைப்பு, அடிமைத்தனம், தீண்டாமை, வர்ணாஸ்ரம தர்மம்,பெண்ணுரிமை மற்றும் இது போன்ற கரங்களுக்கதான் அவர் கடவுளை மறுத்தார். பெரியார் என்பவர் உருவாவதற்கு கடவுள் மறுப்பு பிரதான காரணம் கிடையாது.

பெரியார் இருக்கும் வரை தான் ஒரு நிரந்தர எதிர்கட்சியாகத்தான் செயல்பட்டார். அவர் இறந்தற்கு பிறகு அனைத்து கட்சிகளுக்கும் வசதியாய் போனது இப்பொழுத தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது பெரியாரின் போட்டோவும் திராவிடம் என்ற பெயரும் தான். பெரியாரின் அனைத்து கொள்கைகளையும் மறந்துவிட்டு வெறும் பார்பனிய எதிர்ப்புக்கும், கடவுள் மறுப்புக்கும் மட்டுதான் பயன்படுத்துகின்றனர் அதுவும் போலித்தனமாக. இதிலும் கலைஞர் குதற்கமான விஷயங்களுக்கு மட்டும்தான் பெரியாரை, பெரியாரின் வார்த்தகளை பயன்படுத்துவார். தமிழகத்தில் சாதிகளின் வெறி குறைந்துவிடாமல் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நெடி ஏத்தி வைத்திருப்பவர்கள் திமுகவும் அதிமுகவும் தான். ஜாதியில் ஒரு அமைப்பு ஒரு கட்சியோடு இருந்தால் இவர்கள் புதிதாக ஒன்னொரு ஜாதித் தலைவனை, இன்னொரு ஜாதிக் கட்சியை உருவாக்குவார்கள். உதாரணமாக கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஜெகத்ரட்சகன், தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), தமிழ் மாநில முஸ்லிம் லீக் இன்னும் நிறைய சொல்லலாம்.

இன்றைய தமிழக் கட்சிகள் அனைத்துமே பெரியாரை சார்த்து வாழும் சார்புண்ணிகள் தான். தமிழக கட்சிகள் சார்புண்ணிகள் என்றால் திராவிடக் கழக வீரமணியும், சுப வீரபாண்டியனும் சுயமரியாதையை கலைஞரிடம் அடகுவைத்த ஒட்டுண்ணிகள். வீரமணி எப்போழுதுமே கடவுள் எதிர்ப்பும், பிராமண எதிர்ப்பை மட்டும் தான் பரப்புகின்றனர். காலக்கொடுமை, சூடு சொரணை இழந்தவர்கள் பெரியார் பற்றி சொல்லும் போது அது இன்றைய மக்களுக்கு வீரியத்தோடு சென்றடைவதில்லை .

தாம் வாழும் காலம் வரை எந்த வித மத சாயமோ, அரசியல் சாயமோ இல்லாமல் நாட்டுக்காக மக்களுக்காக வாழ்ந்த அப்துல் கலாம் இறந்த சில மாதங்களிலேயே அவரது ஆலோசகர் பொன்ராஜ் அப்துல் கலாம் லட்சிய கட்சி என்ற கட்சியைத் தொடங்கி காமெடி செய்கிறார். அப்துல் கலாம் உயிரோடு இருக்கும் பொழுது அவரது பெயரையும் போட்டோவையும் பயன்படுத்தியிருந்தால் அப்துல் கலாம் காரி உமிழ்ந்திருப்பார்.

மெல்ல மெல்ல RSS மற்றும் பிஜேபி காரர்கள் அம்பேத்காரை தங்கள் தலைவர் என்கின்றனர் அது போலத்தான். இனி தமிழ் நாட்டில் அரசியல் செய்ய பெரியாரை தம் தலைவர் என்று சொல்லக்கூட தயங்கமாட்டார்கள். இந்த கேடித் தனங்களுக்காக நாம் அம்பேத்கர், பெரியாரின் கொள்கையும் மாறிவிடுமா.

அதனால் தான் சீமான் போன்ற கட்சியினர் பெரியார் எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு அரசியலை கையிலெடுக்க வசதியாக இருக்கிறது.

நாம் தமிழர் தம்பிகளே.
திரும்பவும் சொல்கிறேன். திராவிடம் என்பது வெறும் நான்கு மாநில எல்லைகளில் அடங்கக்கூடிய நிலப்பரப்பு இல்லை. அது ஒரு கோட்பாடு. கலைஞரை, ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யுங்கள். வாழ்த்துகள். மகிழ்ச்சி. ஆனால் திராவிடம் என்பதை வெறும் நிலப்பரப்பென்றும், அதில் தெலுங்கன், மலையாளி, கன்னடன், நாயிடு, ரெட்டி, நாயர் என்றும் இன, மொழி, ஜாதி அரசியலில் திராவிடக் கொள்ளைகளில் அடைக்காதீர்கள். கொள்கையை காலத்திற்கு தகுந்தாற்போல் உருவாக்குங்கள்.

#அவளதிகாரம்

Post a Comment

Powered by Blogger.