Halloween party ideas 2015
.

வின்ரதூர் ஈழத்து தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவிஸ் மக்களுக்கான நன்றிகூறல் நிகழ்வு
கடந்த 08.05.2016 அன்று வின்ரதூர் மக்கள் தாயக்கத்திலிருந்து அகதிகளாக இங்கு அடைக்கலம் புகுந்த எமக்கு இடமளித்து அத்தருணத்தில் எமக்கான அனைத்தையும் செய்து எமக்கு வாழ்வளித்த சுவிஸ் மக்களுக்கு நன்றிகூறுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில்,
தமிழர் கலாச்சார, பண்பாட்டை பிரதிபலிக்கும் ஆடல்,பாடல் நிகழ்வுகள் இடம்பெற்றது சிறப்பான நிகழ்வுகளாக அமைந்ததோடு சுவிஸ் நாட்டவர்களுக்கான அவர்கள் மொழி இசைநிகழ்ச்சி கூட ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.அத்தோடு எமது தாயக உணவு விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சுவிஸ் மக்களோடு சுவிஸ் நாட்டில் வசிக்கும் கணிசமான பலதரப்பட்ட நாட்டவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் அத்தோடு சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அமைப்பின் செயலாளரால் தாயகத்திலிருந்து ஏன் நாம் அகதிகளாக இங்கு வந்தோம்?இங்கு எப்படியான சூழலில் எந்த நிலையில் வாழ்கிறோம்? தாயகத்தின் தற்போதைய சூழ்நிலை, ஈழத்தமிழரவையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விபரிக்கப்பட்டது.

அதில் பங்குபற்றிய சுவிஸ் நாட்டவர்கள் தற்போதைய சூழ் நிலைகள் குறித்து விபரமாக கேட்டறிந்ததோடு எமது புலம்பெயர் வாழ்க்கை முறைமை மற்றும் நன்றியுணர்வும் குறித்து பெருமிதம் தெரிவித்தார்கள், நிகழ்வில் கலந்துகொண்ட எம்மக்களுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
சிறப்பாக இந்த நிகழ்வை ஒழுங்கமைத்து நடாத்தி முடித்த வின்ரதூர் ஈழத்தமிழ் மக்களுக்கு எமது நன்றிகள்.

சுவிஸ் ஈழத்தமிழரவை


--


Die Mitglieder des Swiss Council of Eelam Tamils bzw. des Tamilischen Volksrates in der Schweiz sind von der tamilischen Bevölkerung demokratisch gewählt und beauftragt, sich im Rahmen der schweizerischen Gesetzgebung um tamilische Belange in der Schweiz und in Sri Lanka zu kümmern.

சுவிஸ் ஈழத்தமிழர் அவையானது சுவிஸ் வாழ் ஈழவம்சாவழித் தமிழர்களின் (சுவிஸ் ஈழத்தமிழர்) ஐனநாயகப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. சுவிஸ் ஈழத்தமிழர் அவையானது சுவிஸ் பூராவும் இயங்கும். இவ் அவையானது சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்களின் விடயங்களை தேசிய மற்றும் சர்வதேசரீதியில் கையாள்வதுடன் தாயகத்திலுள்ள ஈழத்தமிழர்களின்; உரிமைகளுக்காக ஆணை பெற்ற அவை என்ற வகையில் குரல் கொடுக்கும். அவையின் பணிகள் சுவிஸ் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் நிஐமங்களை உளள்டக்கியே முன்னெடுக்கும்

Swiss Council of Eelam Tamils (SCET)
Wegmühlegässli 60, 3072 Ostermundigen
+41 (0) 79 193 86 69 / +41 (0) 32 631 05 27
Webseite: www.scet.ch



--


International Council of Eelam Tamils (ICET) was established in 2011 by a number of grass-roots Tamil organizations, which were democratically elected by the Eelam Tamils. It is the largest Tamil diaspora organization with members drawn from fourteen countries. The ICET is absolutely committed to a non-violent agenda and it seeks a lasting peace in Sri Lanka, based on Vaddukoddai Resolution. For more information, please contact spokesperson Steven Pushparajah K, +47 90641699.
 
Address:

Via Alberto Melloni 3
,
42025 Cavriago,
Reggio Emilia,
ITALY



Post a Comment

Powered by Blogger.