Halloween party ideas 2015
.

கர்நாடக மாநிலம் பெங்களூரு- அல்சூரில் சமூக விரோதிகளால் சூரையாடப்பட்ட திருக்குறள் மன்ற நூலகத்தை இன்று (01/05/2016) தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் நேரில் சென்று பார்வையிட்டார்.

நூலகத்தை பராமறித்துவந்த திருக்குறல் மன்ற ஒருங்கிணைப்பாளரான ப.நல்லபெருமாள் அவர்களிடம் ஆறுதல்  கூறியதோடு நடந்த சம்பவம் குறித்து  பழ.நெடுமாறன் கேட்டறிந்தார். நூலக வளர்ச்சிக்காக புத்தகங்கள் பார்சலில் அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

பழ.நெடுமாறன் அவர்களுடன் முன்னாள்  மத்திய சட்ட அமைச்சர் க.வேங்கடபதி, தமிழர் முழக்கம் ஆசிரியர் வேதகுமார், புலவர் இறையடியான், புலவர் வி.வில்வநாதன், கர்நாடக-தமிழர் நல ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணி அமைப்பாளர்  கா.தமிழ்வேங்கை உள்ளிட்டோர் நூலகத்தை பார்வையிட்டனர்.

-செய்திப்பிரிவு-
தமிழர் தேசிய முன்னணி்

Post a Comment

Powered by Blogger.