Halloween party ideas 2015
.

தென் ஆபிரிக்கா டுர்பன் நகரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுகூறல் இன்று 22 மே அன்று Mount Edgecombe கோயில் மண்டபத்தில் நீதிக்கும்  சமாதானதுக்குமான  ஆதரவுக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்காலில்  கோரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவாக சுடர்கள்  ஏற்றப்பட்டு நிகழ்சிகள் ஆரம்பமாகியது. .

இவ்  நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் Yousif Vawda, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பில் ரவி பிள்ளை, லோகி நாயடு மற்றும் சட்டத்தரணி  கிரீஸ் கௌவெண்டெர் ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக  சிறிலங்காவில் நடைபெற்ற தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் - ஈழத்தமிழர்கள் விடையத்தில் அரசியல் தீர்வை தவிர்த்தும்  - பன்னாட்டு நீதியான விசாரணையை தவிர்த்தும் , நீதி மற்றும் சமரசத்தை மட்டும் பற்றி பேச முடியாது என்பதை தமது உரைகளில் வலியுறுத்தினார்கள்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பாக உரையாற்றிய  திரு ரவி பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர்களுக்கும்,  ஆபிரிக்க தேசியக் காங்கிரச்சுக்கும் நீண்ட  காலத் தொடர்பு இருப்பதாகவும் தமிழ் மக்களுக்கு தமது முழு ஆதரவை தருவதோடு வருங்காலத்தில் தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க       செயற்படுவோம்  என்று உறுதியளித்தார்.

நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய  தோழமை அமைப்பு தலைவர் டீஸ் பிள்ளை, மற்றும் பொதுச் செயலாளர்  பிரகாசன் படையாச்சி அவர்கள் ஈழத்தமிழர்களின்  தேசிய உரிமைகளை பாதுகாக்க  தென் ஆபிரிக்க தமிழ் மக்கள் தொடர்ச்சியாக  குரல் கொடுப்பார்கள் என்றும் -தமிழர்கள்  ஒரு தேசிய இனமாக அங்கீகாரத்தை பெறுவதற்கு தாமும் துணைநிற்போம் என்றும்  வலியுறுத்தினார்கள்.


தமிழின அழிப்பு நாள் 2016 மொரிசியஸ் நாட்டிலும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் தோழமை அமைப்புகள் ஆகிய  மௌரிசியஸ் தமிழக்கோயில்களின் கூட்டமைப்பு, மௌரிசியஸ் தமிழ் அமைப்பு இரண்டினாலும் மிக உணர்வுபூர்வமாக  நினைவேந்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.மௌரிசியஸ் றோசில் பகுதியில் அமைந்துள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியின் முன்பாக 18.05.2016  புதன்கிழமை அன்று  மாலை 4 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌரிசியஸ் வாழ் தமிழ் மக்களும்,  பல அமைப்புகளின்  பிரதிநிதிகளும்  கலந்துகொண்டு மலர் தூவி வணக்கம் செலுத்தியதோடு குறித்த நிகழ்வில் உரைநிகழ்த்தியிருந்த அனைவரும் தமிழினப் படுகொலைக்கு ஒரு பன்னாட்டு  விசாரணை அவசியம் என்றும் , ஐக்கிய நாடுகள் சபையில் தமிழர்களை  ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

  தமிழின அழிப்பு நாளை  தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழாத ஒரு நாட்டின் இன மக்கள் நினைவேந்தியது  முதல் முறையாக லத்தீன்  அமெரிக்காவில் நடந்தேறியது."தமிழீழம்  வாழ்கின்றது, போராட்டம் தொடர்கின்றது" எனும் தலைப்பில் Ecuador  நாட்டின் Quito  தலைநகரத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்தும் முகமாக  தமிழின அழிப்பு நாள் அந்நாட்டு மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.நீண்ட காலமாக அநீதியை அனுபவித்த மக்கள் இவ் நிகழ்வின் ஊடாக தமது உறுதியான தோழமையினை  ஈழத்தமிழர்களுக்கு  காட்டி உள்ளார்கள்.இவ் நிகழ்வில்  இலங்கை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்துக்கு கிடைக்கப்பெற்ற வேண்டுகோளுக்கு அமைய அவர்களின் ஒருங்கிணைப்பில்  பல கண்டங்களில் இருந்து ஈழத்தமிழர்களும் கல்விமான்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வின் ஊடாக Ecuador மக்கள்     தமிழின அழிப்பை   சர்வதேசமயமாக்கி உள்ளனர்.


--


International Council of Eelam Tamils (ICET) was established in 2011 by a number of grass-roots Tamil organizations, which were democratically elected by the Eelam Tamils. It is the largest Tamil diaspora organization with members drawn from fourteen countries. The ICET is absolutely committed to a non-violent agenda and it seeks a lasting peace in Sri Lanka, based on Vaddukoddai Resolution. For more information, please contact spokesperson Steven Pushparajah K, +47 90641699.
Address:
Via Alberto Melloni 3
,
42025 Cavriago,
Reggio Emilia,
ITALY
--


International Council of Eelam Tamils (ICET) was established in 2011 by a number of grass-roots Tamil organizations, which were democratically elected by the Eelam Tamils. It is the largest Tamil diaspora organization with members drawn from fourteen countries. The ICET is absolutely committed to a non-violent agenda and it seeks a lasting peace in Sri Lanka, based on Vaddukoddai Resolution. For more information, please contact spokesperson Steven Pushparajah K, +47 90641699.
Address:
Via Alberto Melloni 3
,
42025 Cavriago,
Reggio Emilia,
ITALYPost a Comment

Powered by Blogger.