Halloween party ideas 2015
.

வணக்கம் நண்பர்களே,

 

இத்துடன் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நடைபெறவுள்ள "மே18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கை, விளம்பரம், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

தயவு செய்து "மெல்பேர்னின் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங்களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின்னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்

 

தயவு செய்து அந்நாளின் முக்கியத்துவம் மற்றும் வலிகள் அறிந்து உங்களினால் முடிந்த ஆதரவினை நல்குவதோடு, மே மாதம் 18ம் திகதி புதன்கிழமை மெல்பேர்னில் மாலை 6.30 மணிக்கு, Wantirna - Hungarian Community Centre மண்டபத்தில் முழுக்குடும்பத்துடன் வந்து இந்நிகழ்விலும் பங்குகொண்டு, ஆயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளை மீட்டிதொடரும் இலட்சிய பயணத்தில் இணைந்துகொள்வோம்2009யில் எம் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற அப் பேரவலத்தையும், போர்குற்றத்தையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துவோம். !!!!!!!!!!!!!

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றிகள்

Dear Friends!

Here we have enclosed the flyer, Audio Adv & Tamil Media release for the "MAY 2009 TAMIL GENOCIDE REMEMBERENCE DAY" event is going to be held at Melbourne ( Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152) on Wednesday May 18th 2016 from 6.30pm (Ask Everyone to be there from 6pm).

Please spread this awareness event info & share this event details with all (Even to our Australian Friends).

An event, to commemorate the death of over 40,000 Tamils who perished during the Sri Lankan Government's military onslaught in the Vanni mainland. We can't forget the pain & agony of our people went through this same time 7 years ago...

Please publish it on your websites and all the social sites to inform others....

 

Overcoming Genocidal policies of Srilanka

Tamil Community in Melbourne…  Journeying to Justice.

Join a Tamil community event  in Melbourne on May 18 2016.

At Hungarian Community Centre (760 Boronia Rd, Wantirna VIC 3152).

 

 To REMEMBER-     

-     The genocidal killing of Tamil people in 2009. 

-     The sacrifices made by our people for freedom with blood, life and limbs. 

-     To be reminded daily, that the journey for justice continues.

-     That there are many more miles to go and many more months to journey

-     To join the journey, committing to travel together


இலங்கைத் தீவிலே தமிழர் தேசத்தின் மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவு   நாள் என உலகம் முழுவதும் தமிழ்மக்களால் நினைவுகொள்ளப்படுகின்றது.

 

ஆறாத காயங்களுடன் தொடர்ந்துவரும் பயணத்தில் இந்நினைவுநாள் இவ்வாண்டு மே மாதம் 18ஆம் நாள் மெல்பேணில் நினைவுகூரப்படுகின்றது. அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வில் பங்கேற்கும்படி வேண்டுகிறோம்.

 

According to UN internal review report on Sri Lanka, over 70,000 Tamils were killed in five months in early 2009 and Tamil women were gang raped by the Sri Lankan Security forces. There are over 90,000 Tamil war widows and thousands of Tamils disappeared due the conflict.

 

Let's join hands to pledge our unity and resolve in seeking justice for genoside commited against Tamil community by the Sri Lankan State. 

 

Venue: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152

Time: Wednesday May 18, at 6.30 – 8.30PM

Contact: 0433002619 or 0404802104

 

 

அன்புடன்

Tamil Media Unit

On behalf of Organisers.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2016 மெல்பேர்ண் நிகழ்வு - May 18 Tamil Genocide Remembrance Day

 

சுடர் விட்டுப் பிரகாசித்த எமது தாய்நிலம், புதிய நூற்றாண்டின் கொடிய இனவழிப்பின் சாட்சியாய், அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்து ஏழாண்டுகள் உருண்டோடிவிட்டன.

விடுதலைக்காய்ப் போராடிய போராளிகளும், தேசத்தின் மக்களாய் எம்மண்ணோடு வாழ்ந்த எமது உறவுகளுமென, நிறைந்த எமது தாயகம் இனவாதப்படைகளின் கொடிய போராயுதங்களின், மனிதாபிமானமற்ற போரில் சிதறடிக்கப்பட்டது.

இலங்கைத்தீவில், தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே, காலங்காலமாய்க் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் படைகள், முள்ளிவாய்க்காலில் அதன் உச்சக்கட்ட இனவழிப்பை நிகழ்த்தியது.

எனினும் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன், இக்கொடிய போரில் இழந்துபோன எம்முறவுகளை நினைவில் ஏந்தி, உலகப்பரப்பெங்கும் தமிழர் வாழும் தேசங்களில் மே மாதம் 18ஆம் நாளை 'தமிழர் இனவழிப்பு நினைவுநாள்' என்று நினைவுகூரப்படுகின்றது.

அவ்வகையில், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில், 'தமிழர் இனவழிப்பு நினைவுநாள்' நிகழ்வு, எதிர்வரும் மே 18 ஆம் நாள் புதன்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

 எம்மினம் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பை நினைவுகூரும் இந்நிகழ்வில், தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு பங்கேற்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152.

காலம்: 18/05/2016 புதன்கிழமை, மாலை 6.30 – 8.30

 

எமது உறவுகளை மனத்தில் நிறுத்தி இணைந்து கொள்வோம் – அவர் தம்மை

நினைவு கூர்வோம்.

 

இவ்வண்ணம்

சகோதர விக்ரோரிய தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்ரோரியா

 

14 - 05 - 2016

 

------------------

முக்கிய குறிப்பு: சிட்னி "தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரமும் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.


நன்றி, Thanks


--
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

Post a Comment

Powered by Blogger.