Halloween party ideas 2015
.டேனிஸ் பாராளுமன்றில் தமிழ் அமைப்புக்கள் நடாத்திய மாநாடு நிறைவு.. 

டென்மார்க் பாராளுமன்றத்தில் மூன்று மணி நேரம் வீசிய போர் காற்று.. 

டென்மார்க் பாராளுமன்ற வளாகத்தில் டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய சர்வதேச சட்டங்களும், மனித உரிமை மீறல்களும் என்னும் வரலாற்றுப்புகழ் மிக்க மாநாடு 11.05.2016 சனி முற்பகல் 09.15ற்கு ஆரம்பித்து 12.00 மணிவரை சிறப்பாக நடந்தேறியது. 

சிறீலங்காவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள் போர்க்குற்றங்கள் போன்றன தொடர்பாக சர்வதேச சட்டங்களும் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் விவகாரம் பேசப்பட்டது. 

போர் முடிந்ததாகக் கூறப்பட்டாலும் கடந்த ஏழாண்டு காலமாக மாற்றமின்றி தொடரும் அவலங்களுக்கு சர்வதேச சமுதாயம் எடுக்கும் தார்மீகப் பொறுப்புத்தான் என்ன.. இதுகுறித்த சர்வதேச அறிஞர், அரசியல் தலைவர்கள் கருத்துப்பகிர்ந்து கவனயீர்ப்பை ஏற்படுத்தும் மாநாடாக இது ஒளி காட்டியது. 

இந்த நிகழ்வில் டேனிஸ் பாராளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான மிச்சேல் அஸ்ரப் ஜென்சன், நிக்கொலாய் விலும்சன், மோண்ஸ் ஜென்சன், கிறிஸ்டியான் யூல் ஆகிய தலைவர்களும், தாயகத்தில் இருந்து முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவில் உரிமை சமூகத்தில் இருந்து கத்தோலிக்கப் பாதிரியார் எழில் ராஜேந்திரம், உலகப்புகழ் பெற்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரான்சிஸ் ஹர்ரிசன், குர்டிஸ்தான் போராட்ட அமைப்புப் பிரதிநிதி, டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் பொன் மகேஸ்வரன் ஆகியோர் முக்கிய உரைகளை வழங்கினார்கள். 

நிகழ்வுக்கு வந்தோரை அமைதி வணக்கத்துடன் சந்தோஷ் மனோகரன் வரவேற்று ஆரம்ப உரையை வழங்கினார். 

அத்தருணம் சிறீலங்காவில் மாற்றமின்றி தொடரும் சித்திரவதைகள் மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகளில் யாதொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டி சென்ற வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் என்ற தலைப்பில் காணொளி ஒன்றை அரங்கிற்கு வழங்கினார். 

அந்தக்காணொளியில் மத்தியகிழக்கு சென்று நாடு திரும்பும் இளைஞர்கள் எல்.டி.டி.ஈ அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைதாகிறார்கள் என்றும் விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள் இத்தகைய சித்திரவதைகள் இதுவரை 30 முறைப்பாடுகளாக வழங்கப்பட்டுள்ளன, சிறீலங்கா நீதித்துறை இதற்கு பரிபூரண இணக்கப்பாடு வழங்கி வருகிறது. 

தமிழ் இனம் என்ற காரணத்தினால் உண்டான இனவெறுப்பே குற்றம் காணும் அடிப்படைச் சந்தேகமாகவும் கைதுக்கும் சித்திரவதைக்குமான காரணமாகவும் இருக்கிறது, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தும் நிலமைகளில் மாற்றமில்லை இதுதான் நல்லாட்சியின் இலட்சணமாக இருக்கிறதென சுட்டிக்காட்டியது. 

அதைத் தொடர்ந்து என்கில்ஸ் லிஸ்ற் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிக்கொலாய் விலும்சன் பேசினார், இவர் தனது உரையில் பிரான்சில் தான் பணியாற்றிய காலத்தில் அங்குள்ள தமிழ் மக்களுடன் நெருங்கிப் பழகியதாகவும், அவர்கள் தமக���கு முன்னால் பாடிய அழகான தமிழீழ விடுதலைப்பாடல்களை தாம் இன்றும் மறக்காதிருப்பதாக தெரிவித்தார். 

தமிழ் மக்களுக்கும் தனக்கும் உள்ள நீண்ட உறவானது டென்மார்க்வரை தொடர்வதாகத் தெரிவித்த அவர் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று பட்டியலிட்டது தவறு என்று கூறினார், பயங்கரவாதமும் விடுதலைப் போராட்டமும் வேறுபாடு காணப்படாமல் சர்வதேச அரங்கில் ஒன்றோடு ஒன்று அநியாயமாக குழப்பியடிக்கப்பட்டுள்ளதாக வருந்தினார். 

டேனிஸ் அரசு வர்த்தக நடவடிக்கைகளை சிறீலங்காவுடன் மேற்கொள்வதாகவும் அதை ஆதாரமாக வைத்து மனித உரிமைகள் தொடர்பாக இயன்றளவு அழுத்தம் கொடுக்க முயல்வோம் என்றும் கூறினார். 

இவருக்கு பின்னர் பேசிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் திருமதி பிரான்சிஸ் ஹர்ரிசன் மனித உரிமைகள் தொடர்பான 199 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 30 ஆவணங்கள் போர்க்குற்றத்துடன் தொடர்புபட்டு நிற்பதாகவும் தெரிவித்தார். 

முகத்தில் பிளாஸ்டிக் பை போட்டு கட்டி அதற்குள் மிளகாய்த்தூள் போடல், பெற்றோல் ஊற்றுதல் என்று சித்திரவதைகள், பாலியல் கொடுமைகள் மாற்றமின்றி தொடர்வதாகவும் அவருடைய உரை தெரிவித்தது, இதற்கான கடுமையான கருத்துக்களை ஜெனீவாவில் முன்வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

இவரைத் தொடர்ந்து பேசிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பாதிரியார் எழில் இராஜேந்திரம் சிறீலங்காவில் சட்டத்திற்கு முரணாக நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளும் அரசின் செயற்பாடுகள், நீதித்துறையின் பின்னடைவுகளை நிதர்சனமாக எடுத்துரைத்தார். 

அடுத்துப் பேசிய மோண்ஸ் ஜென்சன், கிறிஸ்டியான் யூல் ஆகியோர் டேனிஸ் அரசாங்கம் வர்த்தகத்தையும், மனித உரிமைகளையும் சமநிலைப்படுத்தி மனித உரிமைகளை மேம்படுத்த ஆவன செய்துவருவதாகவும், இதுதொடர்பான கரிசனைகளை சிறீலங்கா அரசாங்கத்திடம் வைத்துள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் இதில் சக்திமிக்க அமைப்பாக பங்காற்றுகிறது, டேனிஸ் அரசு அவர்களுடன் இணைந்து இந்த விடயத்தை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்து, தற்போது டேனிஸ் பாராளுமன்றில் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான விவாதம் நடப்பதாகவும், இந்த நேரம் இப்படியொரு கூட்டமும் நடப்பது சிறீலங்கா விவகாரம் தொடர்பான பார்வைகளை டேனிஸ் பாராளுமன்றிலும் ஏற்படுத்தும் என்றனர். 

தாயத்தில் இருந்து வருகைதந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போர்க்குற்றம் தொடர்பாக முன்னேற்றங்கள் இல்லை, தீர்வுக்கு இன்றுவரை எதுவும் செய்யப்படவில்லை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். 

அன்று சமஸ்டி ஆட்சியை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை இன்றோ சமஸ்டி ஆட்சி என்ற வாசகம் கூட அடிபட்டுப் போய்விட்டது, நிலமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறத���, தீர்வு என்ற குரல்கள் கேட்கவில்லை, இதே டேனிஸ் பாராளுமன்ற மண்டபத்தில் மூன்றாண்டுகளுக்கு முன் பேசியுள்ளேன் அன்றுடன் ஒப்பிட்டால் இன்று நிலமையில் முன்னேற்றம் எதுவும் இல்லை, பின்னேற்றமே ஏற்பட்டுள்ளதென்று நீண்ட உரையாற்றினார். 

ஏழ்மை, மோசடி, சித்திரவதை விடிவற்ற வாழ்வென்று தொடரும் நம்பிக்கையீனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் சர்வதேச சமுதாயம் இதில் சாக்குப்போக்கு சொல்லி சமரசம் காண முயலக்கூடாது என்ற தார்மீகத்தொனி அவருடைய குரலில் சுடாகவும், கவலையாகவும் பிரதிபலித்தது. 

அதுமட்டுமல்ல சிறீலங்கா மனித உரிமைகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறாமல் செயற்பட வேண்டும், சிறீலங்கா அரசினால் வெளியிடப்பட்டுள்ள நீதியற���ற கறுப்புப்பட்டியல் அழிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் தீர்மானம் டேனிஸ் பாராளுமன்றில் இயற்றப்பட வேண்டும், காணாமல் போனோர் - போகடிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் வேண்டும், போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்த வேண்டும் போன்ற விருப்புக்கள் அவையால் முன்வைக்கப்பட்டன. 

நிறைவாக பேசிய டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் பொன் மகேஸ்வரன் தாம் தமிழர் தாயத்தை வலியுறுத்துவதாக���் கூறி மாநாட்டை நிறைவு செய்து வைத்தார். 

வந்தோர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது, காத்திரமான ஒரு கூட்டமாக அமைந்திருந்தது, இது குறித்து நன்றியுரை வழங்கிய சந்தோஷ் மனோகரன் கூறும்போது இந்த விவகாரத்தை இதுபோல அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு செல்ல ஆவன செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

Powered by Blogger.