Halloween party ideas 2015
.

அன்புக்குரிய தமிழீழ மக்களே தமிழக மக்களே புலம்பெயர் மக்களே அன்பான வேண்டுகோள். தமிழீழ போராட்ட வரலாற்றில் தமிழீழத்தில் நடாந்த  தாக்குதல் சம்பவங்களை ஆவனப்படம் ஆக்குவதற்கு கலை பண்பாட்டு கழக பொறுப்பாளர் சேரலாதன் அவர்கள் தமிழகத்திற்கு தொலைபேசி வாயிலாக தமிழீழ ஆதரவாளாகளான இன உணர்வாளருமான தமிழீழ தேசியத் தலைவரின் நன்மதிப்பையும் நம்பிக்கைக் குரியவருமான திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவருமான கொளத்தூர் மணி அண்ணன் அவர்களுடன் சேரலாதன் தொலைபேசி வாயிலாக தமிழீழத்தில் நடைபெற்ற வெற்றிகர தாக்குதல்களை படமாக்குவதற்கு ஒரு இயக்குனர் தேவை படுகிறது என்பதை சேரலாதன் மணி அண்ணன் அவர்களிடம் தெரிய படுத்தினார் .
அதன் பின் சேரலாதன் அவர்கள் விடுதலை சிறுத்தைகளின் கட்சியை சேர்ந்த வன்னிஅரசு அவர்களிடமும் இவ்விடயத்தை கலந்தாலோசித்தார் அதன்பின்னர் நடிகர் இயக்குனர் இன உணர்வாளருமான மணிவண்ணன் அய்யா அவர்கள் கொளத்தூர் மணி அண்ணன் வன்னியரசு ஆகிய மூவரும் கலந்தாலோசித்து யாரை தெரிவு செய்வதென கேள்வி எழும்போது கொளத்தூர் மணி அண்ணன் அவர்கள் பெரியாரின் கொள்கையையும் வளர்ந்துவரும் இயக்குனருமான சீமான் என்பவரை எனது நம்பிக்கைக் குரியவரகவும் தமிழீழ கட்டுப்பட்டு பிரதேசத்திற்குள் அனுபலாம் என்பதனையும் தனது கருத்தாக மற்றவர்கள் இருவரின் முன்ன்னிளையிலும் கொளத்தூர் மணி அண்ணன் முன்வைத்தார் அதை ஏற்றுகொண்ட வன்னியரசும் மணிவண்ணன் அய்யா அவர்களும் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்டனர் ஏற்றுக்கொண்ட பின்னர் வன்னியரசு அவர்கள் சேரலாதன் அவர்களிடம் தொலைபேசி ஊடக இவ்விடயத்தை சீமான் என்பவரை தெரிவுசெய்துள்ளோம் இவரை தெரிவு செய்தவர் கொளத்தூர் மணி அண்ணன் என்பதை வன்னியரசு கூறியபோது கொளத்தூர் மணி அண்ணன் தெரிவு செய்ததனால் எங்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பதனை சேரலாதன் அவர்களிடம் தெரிவித்தார்
தெரிவித்த போதும் இவிடயத்தை தலைமைப்பீடத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பதனை சேரலாதன் அவர்கள் அவர்களுக்கு தெரிவித்தார் ஏழு நாட்களுக்கு பின்னர் தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டு இவ்விடயம் சம்மந்தமாக கலந்தாலோசித்தார். தமிழீழ கட்டுபாட்டிற்குள் நுழைவதற்கு தகுதி உடையவர் சீமான் என்பதனையும் பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர் என்பதனையும் மணி அண்ணன் அவர்கள் பொட்டு அம்மானிடம் உறுதி படுத்தினார் ,அதன் பின் தமிழீழ கட்டுபாட்டிற்குள் சீமான் என்பவரை கூட்டி செல்லும் பணியை வன்னியரசிடம் ஒப்படைக்கப்பட்டது .வன்னியரசு அவர்கள் தமிழீழ கட்டுபாட்டிற்குள் சீமான் அவர்களை கொண்டு செல்வதற்கு கடும் முயற்சி எடுத்த போதும் நான்கு  முறை வன்னியரசு அவர்களை ஏமாற்றிவிட்டு ஒவ்வொரு காரணம் கூறிக்கொண்டிருந்தார் சீமான் .ஒவ்வொரு காரணம் கூறிகொண்டிருந்த வேளையில் சீற்றம் அடைந்த வன்னியரசு அவர் இருப்பிடம் தேடி சென்றார் அதன் பின்னர் சீமானை கரையோர பகுதிக்கு கூட்டி சென்றார் . கரையோர பகுதியில் கடல் மார்கமாக வன்னிக்கு செல்வதற்காக வன்னியரசு உத்தரவிட்ட போது படகில் ஏறி இருமுறை கரை இறங்கிவிட்டார் சீமான் . கடல் மூலம் பயணம் செய்வது எனக்கு அச்சமாக உள்ளது என்ற காரணத்தை முன் வைத்து தடுத்து நின்றார் . பின்னர் கோபம் அடைந்த வன்னியரசு இவரை நெருங்கும்போது அந்த அச்சத்துடன் படகில் ஏறினார் சீமான் ,சில மணி நேரங்களில் பயணத்தை மேற்கொண்டு தமிழீழ  கட்டுபாட்டிற்குள் வந்தடைந்தார் சீமான்.அதன் பின்னர் சேரலாதன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் .சில நாட்களுக்கு பின் தமிழீழ கலை துறையினர் அனைவரும் கலந்தாலோசித்து எவ்வாறு இதனை ஆரம்பிக்கலாம் என ஆலோசித்த பின்னர் படப்பிடிப்பு ஆரம்பிக்கபட்டது சில நாட்கள் கடந்த பின்னர் தமிழீழ தேசிய தலைவரை சந்திக்க முடியுமா என கண்ணீர் மல்க சீமான் அவர்கள் சேரலாதன் அவர்களிடம் கேட்டிருந்த போது சேரலாதன் அவர்கள் இத்தகவலை தலைமைக்கு தெரிய படுத்துகிறேன் என்பதனை அவரிடம் கூறினார் அதன் பின் சேரலாதன் அவர்கள் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் திரு.நடேசன் அவர்களை நேரில் சந்தித்தார் .தேசிய தலைவரை சந்திப்பதற்காக கடிதம் ஒன்றினை அவரிடம் ஒப்படைத்தார் .கொளத்தூர் மணி அண்ணன் அவர்களால் அனுப்பப்பட்டவர் என்பதனை சேரலாதன் அவர்கள் திரு .நடேசனிடம் தெரியப்படுத்தினார் . அதன் பின் நடேசன் தலைமையிடம் சென்று கடிதத்தை ஒப்படைத்தார் .ஒப்படைத்த பின் தலைமை அலுவலகத்திலிருந்து தொலைபேசி வாயிலாக திரைப்படம் எடுக்க வந்த சீமான் அவர்கள் தலைவரை சந்திபதற்காக அனுமதி கோருகிறார் என்ற விடையத்தை அலுவலகத்தில் இருந்து மணி அண்ணனுக்கு தெரிவிக்கப்படிருந்தது.தெரிவிக்கப்பட்ட பின் பெரியாரின் கொள்கையை பின்பற்றுபவர் அதனால் தலைவரை சந்திக்கலாம் அனுமதி கொடுங்கள் என மணி அண்ணன் உத்திரவாதம் கொடுத்த பின்னர் சீமான் அவர்கள் தலைவரை சந்திக்க ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்து வரப்பட்டார் அங்கு தலைவர் அவர்களை  சந்தித்து தன்னை அறிமுக படுத்திக்கொண்டு தலைவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார் சில நிமிட சந்திப்பிற்கு பிறகு சேரலாதன் மற்றும் கலை பண்பாட்டு குழுவினருடன் தான் இருப்பிடத்திற்கு வந்தடைந்தார் .அடுத்த நாள் படபிடிப்பு ஆரம்பித்தனர் .படபிடிப்பு சில நாட்கள் கடந்த பின் படபிடிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் தமிழகம் சென்றடைந்தார் சீமான் . பல மாதங்கள் கடந்த பின் இறுதி கட்ட போர் உக்கிரமடைந்து நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசாங்கமும் சில சர்வதேசமும் நாடுகளும் இணைந்து நடாத்திய இன அழிப்பு போரை நிறுத்தும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக தென்னிந்திய நடிகர் சங்கம் இனைந்து ராமேஸ்வரத்தில் கண்டன பேரணி நடாத்தி கூட்டம் நடைபெற்றது .
அதில் உரையாற்றிய இயக்குனர்கள் நடிகர்கள் பலரில் ஒருவராக சீமான் அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது அதில் சீமான் உரையாற்றுகையில் வன்னி பெரும் நிலப்பரப்பில் தான் கண்ட அனுபவங்களை அவ்வுரையாடலின் போது வெளிபடுத்தினார் .
அவ்வுரையாடலின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றார் சீமான் . அதன் பின்னர் இந்திய உளவுத்துறை சீமானிடம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர் .அந்த விசாரணையில் தமிழீழ விடுதலை புலிகளை சந்தித்தது குறித்தும் அங்கு நடந்தவை மற்றும் யார் யாரை சந்தித்தது என்பது குறித்தும் அனைத்தையும் உளவுத்துறையினரிடம் சீமான் கூறியுள்ளார் .
அதன்பின் இரண்டாவது கண்டன போராட்டம் பாண்டிச்சேரியில் நடைபெற்றது அதில் தமிழீழ ஆதரவு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஒருங்கிணைந்து சீமான் தலைமையில் மிக பெரிய அளவிலான கண்டன போராட்டம் நடைபெற்றது.
அந்த கண்டன போராட்ட உரையில் சீமான் அவர்கள் அங்கு கூடி இருந்தவர்கள் ஊடகங்கள் ஆச்சர்யப்படும் வகையில் உரை நிகழ்த்தினார்.
தமிழீழ போராட்ட களங்கள் பற்றிய தகவல்களையும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்று கொண்டிருக்கும் போர் அவலங்கள் பற்றியும் உரை நிகழ்த்தினார் .
இறுதிகட்ட போர் முடிவுக்கு வந்து இலங்கை அரசாங்கத்தின் இன வெறி தாக்குதலில் ஒருலட்சத்து  எழுபத்தி ஐயாயிரம் அப்பாவி பொது மக்களை கொன்று குவித்தனர் ,14.05.2009 அன்று தமிழீழ விடுதலை புலிகள் தனது ஆயுதங்களை மவுனிப்பதாக சர்வதேசத்திடம் உத்தியோகபூர்வமாக தெரிவித்தனர் .
ஆயுத மவுனிப்பு  பிறகும் இலங்கை அரசின் இன அழிப்பு தாக்குதல்கள் தொடர்ந்து 19.05.2009 வரை நடைபெற்று கொண்டிருந்தது  .இக்காலப்பகுதிகளில் சீமான் செயற்பாடுகள் ஈழத்தமிழர் மத்தியிலும் புலம்பெயர் தமிழர் மத்தியிலும் தமிழக தமிழர் மத்தியிலும் பெரும் நம்பிக்கையை உருவாக்கியது. தமிழீழ தேசிய கொடியையும் தமிழீழ விடுதலை புலிகளின் செயற்பாடுகளையும் முடக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் தமிழீழ செயற்பாடுகளை துரித படுத்த வேண்டுமென தமிழீழ ஆதரவாளர்களும் கட்சி தலைவர்களும் முடிவெடுத்தனர்.பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் அவசர கூட்டம் ஒன்று சென்னையில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு இருந்தது.அக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழீழ ஆதரவாளர்களின் பெயர் விபரம்.
தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குரியவரான அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள்,கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் ,நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் அய்யா அவர்கள்,பழ .நெடுமாறன் அய்யா அவர்கள்,வழக்கறிஞரான அய்யநாதன் அவர்கள் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவன் அவர்கள்,நடிகர் சத்யராஜ் அவர்கள்,உணர்ச்சிகவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் மற்றும் பலர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர் .
தமிழீழத்தில் நசுக்கப்பட்ட போராட்டத்தையும் தமிழீழ கொடியையும் தலைநிமிர செய்ய வேண்டுமென அக்கூட்டத்தில் முடிவெடுக்க பட்டது.
நாம் தமிழர் கட்சி கொடியாக தமிழீழ தேசிய கொடியை தான் பயன்படுத்த வேண்டுமென கொளத்தூர் மணி அண்ணன் உட்பட அனைவரும் அதனை சீமானிடம் வலியுறுத்தினர். அதனை ஏற்றுகொண்ட சீமான் தமிழீழத்தில் எவ்வளவு புனிதமாக அக்கொடியை பேணி பாதுகாத்தார்களோ அவ்வாறு நானும் பேணி பாதுகாப்பேன் என உறுதிமொழி அளித்தார்.அதில் எவ்வித மாற்றமும் செய்ய கூடாதென மணி அண்ணன் உட்பட அனைவரும் முன்மொழிந்தனர். அதனை ஏற்றுகொண்ட சீமான் எவ்வித மாற்றமும் செய்யமாட்டேன் மாற்றுவதற்கு யார் முன் வந்தாலும் அனுமதிக்க மாட்டேன் என உறுதியளித்தார்.
உறுதியளித்த பின் மணி அண்ணன் அவர்கள் மற்றும் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சீமானிடம் தமிழீழ தேசியக்கொடி கையளிக்கப்பட்டது.தமிழீழ தேசியக்கொடி பாடலுடன் கொடியை ஏற்றிய சீமான் தமிழீழ தேசிய கொடி மீது சத்திய பிரமாணம் செய்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார் .
சில மாதங்கள் கடந்த பின்னர் அவரது நாடகங்கள் அரங்கேற தொடங்கியது .17.05.2009 தேதி அன்று கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணன் உரையாற்றியதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.அந்த நாடகத்தில் இருந்து இவர் மீது மக்கள் வைத்திரிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
இரண்டாவது நாடகமாக சூசை அண்ணன் தமிழ் நாட்டிற்கு வந்தடைந்தார் எனது பாதுகாப்பில் அவரை வைத்து பராமரித்திருக்கிறேன் உடனடியாக எனக்கு பண உதவி செய்யுங்கள் என்று கொளத்தூர் மணி அண்ணன் அவர்களிடம் கேட்டிருந்த போது மணி அண்ணன் அவர்கள் அதை கேட்டறிந்த உடன் மிக மகிழ்ச்சியோடு ஒரு சில மணி நேரங்களுக்குள் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார்.
அதன்பின் மணி அண்ணனோடு விட்டுவைக்கவில்லை இந்நாடகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்களை தொடர்புகொண்டு சீமான் அவர்கள் முப்பது லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் சூசை அண்ணன் அவர்களுக்கு பலமாக காயம் ஏற்பட்டு இருக்கிறது அவருக்கு நீரழிவு நோய் இருப்பதால்  காலை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள் என்றும் பணம் கேட்டிருக்கிறார்.
சீமான் அவர்கள் தொடர்பு கொண்ட அரை மணி நேரத்திற்குள் முப்பது லட்சம் ரூபாய் பணத்தை வேல்முருகன் அவர்கள் சீமானிடம் ஒப்படைத்தார் அதே நாள் மூன்று மணி நேரத்திற்குள் மணி அண்ணனிடமும் முப்பது லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டார் சீமான்.
இந்நாடகத்தின் மூலம் அறுபது லட்சம் ரூபாயை வசூல் செய்தார் அதன் பின் மணி அண்ணன் மற்றும் வேல்முருகன் இருவரும் கலந்தாலோசித்த பின்னர் தான் தெரிய வந்தது இருவரிடமும் சீமான் பணம் பெற்றிருக்கிறார் என்று.
இவர்கள் இருவரும் இது குறித்த தகவலை யாரிடமும் தெரிய படுத்தவில்லை  சில வாரங்களுக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு அவர்களிடமும் இதே விடயத்தை கூறி பத்து லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறார் அத்தோடு 2009 மாவீரர் தினத்தை அனுசரிக்க வேண்டுமென புலம்பெயர் வாழ் தமிழர்கள் மத்தியிலும் இந்நாடகத்தை அரங்கேற்றினார் .அதன் பின் பெருந்தொகையான பணம் சீமானிடம் வந்து சேர்ந்தது .
சாதாரண குடும்பத்தில் பிறந்து கிராமத்தில் வளர்ந்து வந்த சீமான் நகரத்தில் கால் ஊன்றுவதற்க்கான சந்தர்ப்பத்தை உருவாக்கினர். சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்குவதென முடிவெடுத்தார் .
அதன்பின் புலம்பெயர் நாடுகளுக்கு செல்வதற்க்கான சந்தர்பங்களை புலம்பெயர் மக்கள் ஏற்படுத்தி கொடுத்தனர்.புலம்பெயர் நாடுகளிலும் இவரது பேச்சை நம்பி மாவீரர் தினத்திற்கு அங்கு சென்றிருந்த போது இவருக்கு கோடிக்கான பணத்தை புலம்பெயர் தமிழீழ மக்கள் இவரை நம்பி கொடுத்தனர் .
அத்துடன் இவரது நாடகம் நிற்கவில்லை அதனை தொடர்ந்து பெரும்பாலான நாடுகளுக்கு இவரது பயணத்தை மேற்கொண்டு லண்டன்,பிரான்ஸ் ,ஜேர்மன்,சுவிஸ்லாந்து ,நோர்வே ,கனடா போன்ற நாடுகளிலும் மிக தீவிரமான ஈழத்தில் நடந்த கொடூரமான சம்பவங்களை பற்றி பேசி தமிழீழ தேசிய தலைவர் அடுத்த கட்ட போராட்டத்தை என்னிடம் ஒப்படைத்துவிட்டு சென்றடைந்தார் எனக்கு நிதியுதவி செய்யுங்கள் இப்போராட்டத்தை கட்டி எழுப்புவதற்கு பல ஆயிரம் கரும்புலிகள் உட்பட பல ஆயிரம் போராளிகள் என்னிடம் உள்ளதால் தனக்கு நிதியுதவி செய்யும்படி புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் வேண்டுகோள் விடுத்தார்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியபோது புலம்பெயர் மக்கள் கொடுக்கப்பட்ட தொகை ஒன்பது கோடி ரூபாய் .அத்தோடு இவர் வசூல் நிற்கவில்லை தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத்தின் ஒரு பகுதியான சர்வதேச கட்டமைப்பான அனைத்துலக செயற்பாடுகள் அனைத்தையும் முடக்கும் நோக்கத்துடன் நாம் தமிழர் கட்சியின் கிளைகள் அனைத்து நாடுகளிலும் துவங்கப்பட்டது .
மலேசியா ,சிங்கப்பூர் போன்ற நாடுகளை கூட விட்டு வைக்கவில்லை எமது அமைப்பிற்கு நிதியுதவி செய்த அந்நாட்டு பெரும் தொழில் அதிபர்களிடமிருந்தும் பெரும் தொகையை பெற்றுக்கொண்டார் .
இவர்களிடம் கூறப்பட்ட விடையங்கள் தமிழீழ தேசியத்  தலைவர் என்னிடம் போராட்டத்தை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார் ,அவர்தான் என்னிடம் உங்களை தொடர்புகொண்டு நிதியுதவி கேட்கும்படி கூறி இருந்தார் அதனால் தான் நான் உங்களிடம் உதவி கோரி நிற்கிறேன் . என்னிடம் நீங்கள் கொடுக்கும் பணம் அனைத்தும் தமிழீழ தேசிய அவர்களிடம் போய் சேரும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
இதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றது.தொழில் அதிபர்களிடமும் பணம் பெறுவதற்கான உரையாடப்பட்ட உரையாடல்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன. இது எதுவும் கட்டுக்கதை அல்ல வதந்தி அல்ல உண்மையான விடயங்கள்
தமிழீழ உறவுகளே புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே இறுதிகட்ட இன அழிப்பு போரில் லட்சக்கணக்கான மக்கள் உயிர் மற்றும் உடமைகளை இழந்தனர் . உடல் உறுப்புகளை இழந்து போராளிகள் பொது மக்கள் என பல ஆயிர கணக்கானோர் உள்ளனர் .விதவைகளாகவும் அனாதையாகவும் உண்ண  வழியின்றி உறங்க வழியின்றி தத்தளித்து நிற்கும் உங்கள் உறவுகளுக்கு உதவுங்கள்.இன்னும் திட்டமிட்டு வஞ்சிக்க பட்டுகொண்டிருகிறார்கள் .கலை கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் சீரழிக்க பட்டு கொண்டிருக்கிறது இவை அனைத்தையும் காப்பாற்ற  முன் வாருங்கள்.
அத்தோடு சீமான் போன்ற தனி மனித ஒழுக்க மற்ற உண்மையற்ற உறுதியற்ற அரசியல்வாதியான நபர்களை வளர்ப்பதை விட்டு .சீமான் திருமணத்திற்கு நீங்கள் அனுப்பிய தொகை போதும் யுத்தத்திற்கு பாதி .

2009ல் இருந்து இதுவரை காலமும் போராளிகள் பொதுமக்கள் என எத்தனையோ பேர் உதவிகேட்டு சீமான் இருப்பிடம் தேடி சென்றிருக்கின்றனர் அவர்கள் யாருக்கும் எந்தவித உதவியும் இதுவரை அவர் செய்ததில்லை .
இவர் திருமணத்திற்கு மட்டும் புலம்பெயர் நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் தொகை 3.15 கோடி இந்திய பணம் . எழுபது லட்சம் பெறுமதியான சொகுசு கார் திருமண பரிசாக கொடுக்கப்பட்டது.சொந்த வீடு கூட இல்லாமல் சென்னை தியாகராய நகரில் விடுதியில் தங்கி இருந்த இவருக்கு புலம்பெயர் உறவுகளால் கொடுக்கப்பட்ட பரிசுகள் இரண்டு கோடி பெறுமதியான சொகுசு பங்களா இரண்டு இவைகள் எல்லாமே நீங்களாகவே வாங்கி கொடுக்க பட்டது.
இத்தோடு நிற்கவில்லை தமிழகத்தில் வசூல் செய்யப்பட்ட பணம் இரண்டு கோடி ரூபாய் இதனை  வழங்கியவர்கள்  தொழில் அதிபர்கள்  பெயர்  S.R.M  பல்கலைக்கழகம்  புதியதலைமுறை  தொலைகாட்சி நடத்தி வரும் பச்சைமுத்து அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாயும் அதிமுக பிரமுகரிடமிருந்து அறுபது லட்சம் ரூபாயும் மற்றொரு தொழிலதிபரிடமிருந்து நாற்பது லட்சம் ரூபாய் பெற்றுரிந்தார்.அத்தோடு நிற்கவில்லை மலேசியாவில் உள்ள தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதிகளை தமிழகத்திற்கு வரவழைத்து சதிவலையில் சிக்கவைத்தார் .
முதலில் தமிழகத்திற்கு வந்த அரசியல்வாதி நான்கு பேர் தொழிலதிபர் இரண்டு பேர் அவர்களுக்கு மதுவிருந்து கொடுத்து மதி மயங்கவைத்து மாது விருந்து கொடுத்தார் . மாது விருந்தில் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் இருந்தபோது அதனை ரகசிய கேமெறாக்கள் மூலம் பதிவுசெய்து அதனை ஆவன படுத்திக்கொண்டார் .அதை வைத்து அவர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்து கொண்டிருக்கிறார் .தனக்கு பண உதவி செய்யும்படியும் தான் கூப்பிடும்போது தமிழகத்திற்கு வரும்படியும் எச்சரித்து இருக்கிறார் .
இவர்கள் நான்கு பேரும் பாராளுமன்ற  உறுப்பினர்கள் அவர்கள் இரண்டு பேர் தொழிலதிபர்கள் ஆவர்கள் . இவரது பேச்சை நம்பிய தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவை சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் என்பவர் சந்திக்க சென்றுரிக்கிறார் .சந்திக்க சென்றுரிந்த போது சீமானின் சகோதரரான ஜேம்ஸ் என்பவர் சிரஞ்சீவி மாஸ்டரை கூட்டி செல்வதற்காக சீமான் அவர்களால் அனுப்ப பட்டார் அவர் வாடகை காரை செலுத்தி சென்றவர் .
இந்திய உளவுத்துறைக்கும் சீமானுக்கும் ராமேஸ்வர கண்டன போராட்டத்தின்போதே  தொடர்பு ஏற்பட்டு இருந்தது .சீமானை பார்க்க சென்று மூன்று மணி நேரத்திற்குள் தனது இருப்பிடம் நோக்கி சென்று கொண்டிருக்கும் வழியில் சிரஞ்சீவி மாஸ்டர் இந்திய உளவுத்துறையினரால் கைது செய்யபட்டார் .இதற்கு முழு காரணம் இவர் மட்டுமே .
சீமானது கட்சியில் இருக்கும் அவரது சித்தப்பா என அழைக்கப்படும் வழக்கறிஞர் தடா சந்திரசேகரும் உதவி கேட்டு 2013ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்களின் முந்திரி தோப்பில் ஐந்து போராளிகள் வெடிகுண்டு சோதனை நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் .
அப்போரளிகளில் ஒருவரான அன்புக்குமரன் எனும் இவர் தமிழீழ தேசிய தலைவரின் மருத்துவராவார் .அந்த ஐந்து பேரில் இவரும் ஒருவராக கைதான போது அன்புகுமரனின் மனைவியார் மற்றும் அதில் கைதான மற்றொரு போராளியின் மனைவியாரும் வழக்கறிஞர் தடா சந்திரசேகரிடம் சென்று இருவரையும்  ஜாமீனில் வெளியே எடுபதற்க்கு உதவி கோரினார்கள் ஆனால் அவர் கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை.
ஒருவருக்கு நாற்பது ஆயிரம் விகிதம் இருவருக்கும் எண்பதாயிரம் கொடுங்கள் அதன் பிறகு தான் இவ்வழக்கை எடுத்து நடத்துவேன் என்று கூறியுள்ளார் .
இவர்கள் இருவரிடமும் பணம் எதுவும் இல்லை தன்னிடம் இருந்த தோடு ,சங்கிலி போன்றவற்றை அடகு வைத்து இருபத்தி எட்டாயிரம் கொடுத்துள்ளனர் ஆனால் அதனை வாங்க மறுத்து சந்திரசேகரன் அவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார் .மற்றும் அவர்களை இலங்கையில் இருந்து எனக்கென்ன பிச்சையா போடுகிறீர்கள் என்று அவமானபடுத்தி அவர்கள் கொண்டுவந்த அந்த பணத்தையும் அவர்கள் முகத்தில் வீசி எறிந்திருக்கிறார் .
அதை தொடர்ந்து அடுத்த வருடமே மாவீரர் தின நிகழ்விற்கு புலம்பெயர் சொந்தங்களால் சுவிஸ் நாட்டிற்கு சீமான் அழைக்கபட்டார் .அங்கு மாவீரர் தின நிகழ்வு முடிந்ததும் சீமானும் அவரது சித்தப்பாவும் தங்கி இருந்த நட்ச்சத்திர விடுதியில் இவர்கள் இருவருக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்து .தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச கட்டமைப்பின் பொறுப்பாளர்கள் அங்கு சென்றனர் இவர்களிடம் சீமான் அவர்கள் அடுத்தகட்ட போராட்டம் தொடர வேண்டுமென்று  தமிழகத்தில் அரசியல் ஆட்சியை கைப்பற்றி தான் தமிழீழத்தை பெற வேண்டும் என இவர்கள் யாரென தெரியாமலேயே இவர்களிடம் நிதியுதவி கேட்டனர் .இவர்கள் சீமானிடம் கேள்வி ஒன்றை முன் வைத்தனர் . நிச்சியமாக அடுத்தக்கட்ட போராட்டம் தொடரும் தொடர்ந்தால் எத்தகைய பங்களிப்பை நீங்கள் எங்களுக்கு செய்வீர்கள்  பணம் வசூலிப்பதிலியே குறியாக இருக்கிறீர்கள் எமது சர்வதேச செயற்பாடுகளின் கட்டமைப்புகளை சீரழிக்கும் நோக்கத்துடன் நாம் தமிழர் கட்சியின் செயற்பாடுகள் இருக்கின்றன .அதில் ஒன்றுதான் சர்வதேச நாடுகளில் கிளைகள் ஆரம்பித்தது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு சேர வேண்டிய நிதியை நீங்கள் வசூல் செய்கிறீர்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியும் போய் சேரவில்லை உங்களின் உண்மையான நிலைப்பாடு என்னதான் என்று கேட்டனர் .
எங்களது தமிழீழ தேசியக்கொடியை உதாசினம் செய்யாதீர்கள் யுத்தத்தில் இறந்த எங்களது உயிர் அற்ற நிர்வான உடல்களை வைத்து பிரச்சாரம் செய்யாதீர்கள் உங்களுடைய நோக்கம் என்பது தமிழின விடுதலை போராட்டம் தழைக்க கூடாது தலை தூக்க கூடாது என்னும் நோக்கத்துடன் தான் செயற்பட்டு வருகின்றீர்கள் .
உங்களது செயற்பாடுகளில் திருத்தும் கொண்டு வாருங்கள் நீங்கள் மேடையில் பேசும்போது உண்மையான உணர்வாளர் போல் பேசுகிறீர்கள் உள்ளே உங்களின் செயற்பாடுகளோ எமது எதிரியை விட துரோகியை விட மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டு உள்ளீர்கள் .
நாங்களும் எமது மக்களும் நம்பி இருந்தோம் நீங்களோ கருணாவை விட மோசமான செயற்பாட்டில் உள்ளீர்கள் உங்களது செயற்பாட்டில் மாற்றங்கள் திருத்தங்கள் கொண்டுவராவிட்டால் புலம்பெயர் நாடுகளுக்குள் ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்று எச்சரித்தனர் .
என்ன செய்வதென அறியாதிருந்த சீமான் மற்றும் அவரது சித்தப்பா சந்திரசேகரன் இருவரும் எந்த பதிலையும் கூறவில்லை .அனைத்துலக கட்டமைப்பு பொறுப்பாளர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறிய பின்னர் நட்சத்திர விடுதியில் காவலுக்கு நிறுத்த பட்டிருந்த ஈழ தமிழர்களிடம் யார் இவர்கள் என கேட்டறிந்தனர் .இவர்கள் தான் தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச கட்டமைப்பின் பொறுப்பாளர்கள் என்று கேட்டறிந்தவுடன் சீமான் மற்றும் அவரது சித்தப்பா இருவரும் சில மணி நேரங்களிலேயே அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள் .
அத்தோடு புலம்பெயர் நாடுகளுக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது சீமானுக்கு . இதோடு நிற்கவில்லை இவரது பேராசை சிங்கப்பூர் ,மலேசியா நோக்கி விரைந்து சென்றனர் அங்கு சென்று எமது அமைப்பின் ஆதரவாளர்களும் அரசியல்வாதிகளும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது அமைப்பிற்கு நிதியுதவி செய்துகொண்டிருந்த தொழில் அதிபர்களிடமும் என்னை அமைப்பில் இருந்துதான் அணுப்பியுள்ளார்கள் அவசரமாக நிதி வேண்டுமென கூறி பெருந்தொகையான நிதியை வசூல் செய்துள்ளார் .அப்பணம் ஆனது சுமார் மூன்றரை கோடி ஆகும் .
தமிழகத்தில் விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புலனாய்வு செயற்பாடுகள் தென்னிந்திய திரை துறைக்குள் ஊடுரவ முயச்சி செய்தது அதை அறிந்த தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகளும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர் .கத்தி பட முதலீட்டாளர் லைக்கா சுபாஸ்கரனை சீமான் அவர்கள் தொடர்புகொண்டு தான் வெளியிட்டு தருவதாக கூறினார் .
சுபாஸ்கரன் சீமானிடம் கூறுகையில் இது தனது மானப்பிரச்சனை இப்படத்தை வெளியிட்டு தாருங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன் என கூறினார் . இந்த லைக்கா சுபாஸ்கரன் சிறிலங்கா அரசாங்க பாதுகாப்பு அமைச்சரான கோத்தபாயவும் நெருங்கிய நண்பர்களவார்கள் .
இத்திரைப்படம் வெளியாக உதவியதற்காக இரண்டு கோடி ரூபாய் இந்திய பணம் சுபாஸ்கரனிடம் இருந்து சீமானுக்கு கை மாறியது .
இதே போல் பிரச்சனை பச்சை முத்து பரிவேந்தர் தயாரித்த புலிபார்வை படத்திற்கும் ஏற்பட்டது அப்படத்தில் பாலகன் பாலச்சந்திரன் போராளி போல சித்தரிக்க பட்டிருந்தது  .அத்திரைப்பட இசை வெளியிட்டு விழாவிற்கு போரிற்கு காங்கிரசை விட அதிக பங்காற்றிய பாஜக கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி பொன் ராதாக்ருஷ்ணன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் .இதில் தான் சீமானின் உண்மை முகம் உலகிற்கு விளங்கியது .ஈழத்தை ஆதரிக்கும் சீமானும் ஈழத்தை எதிர்க்கும் பாஜகவும் ஒரே மேடையில் மேடையை அலங்கரித்தனர் .
மற்றும் திருச்சியில் நடந்த நாம் தமிழர் கட்சி மாநாட்டிற்கு விடுதலை புலிகளின் தலைமை கூறியதாக கூறி வைகுண்ட ராஜனிடம் ஏழு கோடி ரூபாய் பணம் பெற்றுறிருக்கிறார்.
இந்த முறை தேர்தல் நிதியாக மலேசியாவில் இருந்து மட்டும் முப்பத்தைந்து கோடி ரூபாய் பணம் பெற்றுறிருக்கிறார்.
சென்னையில் வாடகை வீட்டிற்கே வழி இல்லாத சீமானிற்கு ஊட்டியில் பதினைந்து ஏக்கர் நிலம் எப்படி வந்தது ??
தொடரும்
.....
தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்
எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

Post a Comment

Powered by Blogger.