Halloween party ideas 2015
.

#பழங்குடியினத்தை சேர்ந்த மாணவன் #அருண்குமார் படிப்பில் கெட்டிகாரன்.  5-ஆம் வகுப்பு வரை மாமல்லபுரம் அரசுப்பள்ளியில் படித்தான். அப்பா இல்லாத அருணை அவன் தாய் பன்றிகள் மேய்த்து படிக்க வைத்தார்.
அவனது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு நடத்திய தேர்வொன்றில் கலந்துகொண்டான். அத்தேர்வில் 6௦௦ மதிப்பெண்களுக்கு 598 மதிப்பெண் பெற்றான்.அதன் விளைவாக அரசின் கல்வி உதவித்தொகையோடு, திரு பெரும்பந்தூரில் உள்ள St.Joseph’s Residential School-ல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளான். 6-ஆம் வகுப்பு முதல் தொடர்ந்து படித்துவரும் மாணவன் அருண்குமா ர் 1௦- ஆம் வகுப்பில் 5௦௦ மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கே பெருமை சேர்த்தான்.
1௦-ஆம் வகுப்பு முடிந்து 11-ஆம் வகுப்பு செல்லும்போதுதான் பிரச்சனை தொடங்கியது.
அதாவது 11-ஆம் வகுப்பில் சவூதி அரேபியா, குவைத், மஸ்கட் போன்ற வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் புதிதாக வந்துசேர்ந்து உள்ளனர், அந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு பழங்குடியினத்தை சேர்ந்த அருணை பிடிக்கவில்லை. காரணம் அருண்குமார் கீழ் சாதிக்காரன், #கருப்புநிறத்தவன். நாகரீகம் தெரியாதவன். அருண்குமார் போன்ற கீழ்சாதிக்கார மாணவர்களினால் பள்ளியின் ஸ்டான்டட் கெட்டுப்போகிறது என்று நிர்வாகம் நினைக்கிறது.
ஆகவே,
பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவனை, கால்பந்தாட்டத்தில் தேசிய அளவில் தேர்ந்தேடுக்கபட்டவனை ஏதாவது அற்ப காரணங்கள் சொல்லி விரட்டுவது என்று திட்டமிட்டுள்ளனர்.
“பன்றி மேய்கிற பயலுக்கு இங்க எதுக்குடா படிப்பு”
“ஓசில படிக்கிற நாய் ஓரமா போடா” என்றும் திட்டியுள்ளனர்.
“ஏன் இப்டி பேசுறிங்க நான் நன்றாகத்தானே படிக்கிறேன்” என்று கேட்டதற்கு எதிர்த்து பேசுகிறான். வெளிநாட்டு மாணவர்களிடையே ஆதிக்கம் செலுத்துகிறான் என்று சொல்லி பள்ளியில் இருந்து ஒருவாரம் இடைநீக்கம் செய்துவிடுகின்றனர்.
ஒருவாரம் கழிந்தபின் ரூபாய் பத்தாயிரம் அபராதம் கட்டினால் தான் பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்று நிர்வாகம் உறுதியாக கூறவே வேறுவழி இன்றி கணவனை இழந்து தன்னந்தனியே பன்றி மேய்த்து கஷ்ட்டபடிகிற தாய், வட்டிக்கு கடன் வாங்கி பத்தாயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். அப்படி வசூலிக்கப்பட்ட அபராத தொகைக்கு முறைப்படி ரசீதும் கொடுக்கப்படவில்லை.
பணம் பெற்று ஒரு பார்மாலிட்டிக்கு ஒருவாரம் பள்ளியில் சேர்த்துகொள்ளப்பட்ட மாணவன் அருணை எந்த காரணமும் இல்லாமல் அடுத்தவாரம் இடைநீக்கம் செய்தனர்.
“ஏன்? எதற்கு என்று காரணம் புரியாத அருண்குமாரின் தாய் நிர்வாகத்திடம் எவ்வளவு மன்றாடிகேட்டும் பள்ளி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. மாறாக பள்ளி நிர்வாகம் மாணவன் அருண்குமாருக்கு கிடைத்துகொண்டிருந்த கல்வி உதவித்தொகையை நிறுத்திவிடும்படி அரசுக்கு கடிதம் எழுதிவிட்டனர். நன்றாக படிக்கும் தனது மகனின் எதிர்காலம் பாழாகிவிடுமோ என பயந்த அருண்குமாரின் தாய் வேறுவழி இன்றி நீதிமன்றம் சென்றார்.
பள்ளி நிர்வாகம் அருண்குமாரை தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என்றும், அவனுக்கு அரசு தொடர்ந்து கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும்  சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது, ஆனாலும் பள்ளி நிர்வாகம் நாங்கள் மேல் முறையீடு செய்ய இருக்கிறோம், ஆகவே அருண்குமாரை தேர்வெழுத அனுமதிக்க முடியாது என்றும் சொல்லிவிட்டது. இது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்ற பயத்தாலும், அருண்குமாரின் தாய் தொடர்ந்து போராடியதாலும் அருண்குமாரை அதே பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வேறு ஒரு பள்ளியில் தேர்வெழுத வைத்தனர்.
இதன்மூலம் St.Joseph’s Residential School நிர்வாகம் திட்டமிட்டபடி ஒரு கீழ்சாதிக்காரன், பார்க்க கருப்பாக இருக்கிறவன், நாகரீகம் குறைவாக இருப்பவன் என்று கருதி பள்ளியைவிட்டு வெளியேற்றுவதில் வெற்றிபெற்றிருகிறது. இந்திய திருநாட்டில் குறிப்பாக தமிழர்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் ஒரு தமிழ் பிள்ளை மேற்கூறிய காரணங்களினால் படிக்க முடியாது, வெளிநாட்டில் இருந்து வருகிறவர்கள் தான் படிக்க முடியும் என்றால் இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. படிக்கிற மாணவனை சாதியைச் சொல்லித்திட்டுவதும், அவன் கருப்பாக இருந்தால் கீழ்த்தரமாக நடத்துவதும் கேவலமான வன்கொடுமையாகும்.
இதுமாதிரியான சாதிய வன்கொடுமை செய்கிற St.Joseph’s Residential School நிர்வாகத்தினரை இந்த மண்ணில் அனுமதிக்க முடியாது. படிக்கும் மாணவர்களின் மீது சாதி துவேசம் கொண்டு இயங்கும் திரு பெரும்பந்தூர் St.Joseph’s Residential School மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்றி மேய்த்து வயிறு வளர்க்கும் ஒரு ஏழை பழங்குடியின தாயிடம் மிரட்டி பறித்த ரூபாய் பத்தாயிரம் பணத்தை வட்டியோடு திருப்பி தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுகொள்கிறோம்.
#தகவல்:
அண்ணன் மு.களஞ்சியம்
காஞ்சி மக்கள் மன்றம்.
தமிழர் நலம் பேரியக்கம்.

பதிவு:விசிக வன்னியர் மாதையன்
#இணையதளசிறுத்தை

Post a Comment

Powered by Blogger.